NDTV பங்குகளை வாங்கிய அதானி.. இனி மீடியா துறையிலும் வேற லெவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்டிடிவி-யின் (New Delhi Television Ltd) புரோமோட்டர் வசம் இருந்த 99.5% பங்கினை அதானி குழுமம் வெற்றிகரமாக கையகப்படுத்தியுள்ளது.

 

டெல்லியை சேர்ந்த பிரபல டிவி நிறுவனமான என்டிடிவி நிறுவனத்தின் பங்குகளை, அதானி குழுமத்திற்கு விற்பனை செய்துள்ளதாக, அதானி குழும நிறுவனத்தின் புரோமோட்டர் நிறுவனமான ஆர் ஆர் பி ஆர் (RRPR ) ஹோல்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்டிடிவி-யின் இந்த பங்கினை அதானி குழுமத்திற்கு சொந்தமான விஸ்வபிரதான் கமர்ஷியல் (VCPL) நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

கௌதம் அதானி-யின் அடுத்த திட்டம் இதுதான்.. டார்கெட் குஜராத்..! கௌதம் அதானி-யின் அடுத்த திட்டம் இதுதான்.. டார்கெட் குஜராத்..!

பெரும் சர்ச்சை

பெரும் சர்ச்சை

அதானி குழும நிறுவனம் ஏற்கனவே என்டிடிவி பங்குகளை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது குறித்த தீவிர பேச்சு வார்த்தையும் நடந்து வந்தது. சமீபத்தில் இது குறித்து பெரிய சர்ச்சையே வெடித்தது எனலாம்.

என்டிடிவி நிறுவனத்தின் புரோமோட்டர் நிறுவனமான ஆர் ஆர் ஆர் பி நிறுவனத்திடம் வாங்கிய கடனுக்காக, கடந்த 2009 - 2010ல் ஒப்பந்தம் போடப்பட்டது.

அதானி வசம் எப்படி வந்தது?

அதானி வசம் எப்படி வந்தது?

இவ்விரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் படி, விஸ்வபிரதான் நிறுவனம், என்டிடிவி-யின் பங்குகளை கைபற்றியது. இந்த பங்குகளைத் தான் அதானி குழுமத்தின் ஏஎம்ஜி மீடியா கைபற்றியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று அதானி குழுமத்தின் ஏ எம் ஜி மீடியா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் மூலம், விஷ்வபிரதான் கமர்ஷியல் நிறுவனத்தினை கையகப்படுத்தியது.

செபி தடை ஏன்?
 

செபி தடை ஏன்?

முன்னதாக என்டிடிவி-யின் பங்குகளை கையகப்படுத்த அதானி குழுமத்திற்கு செபி தடை விதித்து இருந்தது. நவம்பர் 26ம் தேதியுடன் செபியின் தடை முடிவடைந்த நிலையில், ஆர் ஆர் ஆர் பி நிறுவனம் என்டிடிவி புரோமோட்டர் பங்குகளை அதானிக்கு விற்பனை செய்துள்ளது.

அதானியிடம் எவ்வளவு பங்குகள்?

அதானியிடம் எவ்வளவு பங்குகள்?

என்டிடிவி புரமோட்டர் பங்குகளில் 99.5% பங்குகளை அதானி குழுமத்தின் விபிசிஎல் நிறுவனத்திடம் விற்பனை செய்துள்ளது. இதன்படி, அதானி குழுமத்திடன் என்டிடிவி நிறுவனத்தின் 29.18% பங்குகள் வந்துள்ளன. இதுபோக கூடுதலாக ஓபன் ஆபர் (Open offer) மூலம் 26% பங்குகளை வாங்குவதற்கு அதானி குழுமம் முயற்சித்து வருகிறது.

ஓபன் ஆஃபர்

ஓபன் ஆஃபர்

நவம்பர் 22ம் தேதி தொடங்கிய ஓபன் ஆபர் பங்கு விற்பனை மூலம், பங்குதாரர்கள் 5.3 மில்லியன் பங்குகளை அல்லது 31.78% இதுவரை பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது.

ஆரம்பத்தில் அதானியிடம் என்டிடிவி பங்குகளை விற்பனை செய்வதற்கு, என்டிடிவி தலைவர் பிரணாய் ராய் தயக்கம் காட்டி வந்தார். ஆனால், ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்டிடிவி பங்குகள் அதானி கட்டுப்பாட்டிற்கு போகின்றன.

எதற்காக என்டிடிவி?

எதற்காக என்டிடிவி?

பைனான்ஷியல் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் என்டிடிவி நிறுவனத்தை பொறுப்புக்காக வாங்கியுள்ளதாகவும், தொழிலுக்காக வாங்கவில்லை எனவும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி தெரிவித்திருந்தார்.

அது மட்டும் அல்ல, என்டிடிவி-யின் தலைவராக பிரணாய் ராய் தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனவும் அதானி அழைப்பு விடுத்திருந்தது நினைவுகூறத்தக்கது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

முன்னதாக என்டிடிவியில் 29.18% பங்குகளை கையகப்படுத்தும் நடவடிக்கை, தங்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையோ, என்டிடிவி நிறுவனர்களின் ஒப்புகையின்றியோ அதானி குழுமம் செய்துள்ளதாக என்டிடிவி அறிக்கை வெளியிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதனை கையகப்படுத்திய கையோடு, பிரணாய் ராய் தலைமையே தொடர வேண்டும் என்று கூறியிருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NDTV promoter firm RRPR holding transfers 99.5% shares to Adani group

Adani Group has successfully acquired 99.5% stake in NDTV (New Delhi Television Ltd) held by the promoter
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X