இன்று முதல் 24 மணி நேரமும் நெஃப்ட் வசதி.. விடுமுறை நாட்களிலும்செய்து கொள்ளலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் மோடியின் கணவை நனவாக்கும் பொருட்டு நாடு முழுவதும் டிஜிட்டல் சேவைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அதிலும் ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் பயன்பாட்டை உபயோகப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இதை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் டிஜிட்டல் சேவைகளை ஊக்கப்படுத்தும் விதமாக, ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

24 மணி நேரமும் நெஃப்ட் சேவை
 

24 மணி நேரமும் நெஃப்ட் சேவை

அந்த வகையில் நெஃப்ட் எனப்படும் நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பர் (NEFT) மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த அதிரடி சேவையானது வரும் டிசம்பர் 16 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த அதிரடி முடிவானது சில்லறை பணம் செலுத்துதல் முறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக ரிசர்வ் வங்கி முன்னரே அறிவித்திருந்தது கவனிக்கதக்கது.

இப்போது எவ்வளவு நேரம்?

இப்போது எவ்வளவு நேரம்?

ரிசர்வ் வங்கியின் சில்லறை செலுத்துதல் சிஸ்டம் மூலமாக தற்போது, பணி நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே நெஃப்ட் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். நெஃப்ட் சிஸ்டம் மூலமாக 2 லட்சம் ரூபாய் வரையில் பணப்பரிவர்த்தனை செய்யலாம். முன்னதாக கடந்த ஜூன் மாதம் முதல், ஆர்.டி.ஜி.எஸ். எனப்படும் ரியல் டைம் செட்டில்மெண்ட் சிஸ்டம் (Real Time Gross Settlement System) மற்றும் நெஃப்ட் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய கட்டணம் கிடையாது என்று அறிவித்தது. இந்த நிலையில் இத்தகையதொரு சலுகையை வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து நாட்களும் ஆன்லைன் சேவை

அனைத்து நாட்களும் ஆன்லைன் சேவை

நாளை முதல் அமலுக்கு வரவிருக்கும் நெஃப்ட் மூலம் 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆர்.டி.ஜி.எஸ், நெஃப்ட், ஐ.எம்.பி.எஸ் ஆகிய மூலம் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மின்னணு முறையில் பணப்பரிமாற்ற செய்யமுடியும்.

விடுமுறை நாட்களிலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்
 

விடுமுறை நாட்களிலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்

ஆனால் வங்கி நேரங்களுக்கு மட்டுமே, இந்த சேவையை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இந்நிலையில், நெஃப்ட் சேவையில் தற்போது இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் ஊக்குவிப்பு சேவையானது விடுமுறை நாட்கள் உட்பட ஆண்டின் அனைத்து நாட்களிலும் நெஃப்ட் சேவை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா கனவு

டிஜிட்டல் இந்தியா கனவு

பிரதமர் மோடியின் கனவை நினைப்படுத்தும் விதமாக இந்த சேவை நீட்டிப்பானது வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இனி விடுமுறை நாட்கள், வங்கி நேரம் முடிவு என இல்லாமல், நமக்கு ஏற்றாற்போல் விருப்பம் போல பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

இது முழுக்க முழுக்க மக்கள் இணைய சேவையை பயன்படுத்தும் விதமாக அமையும் என்றும் கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Neft money transfer facility to be available 24*7 hours from tomorrow on wards

Now Indian Bank customers are able to transfer funds 24*7 hours. It’s effective from tomorrow. Early the NEFT payment system so far is available for customers from 8 am to 7 pm on all working days, except the second and fourth Saturdays of the month. But now available all days, including holidays.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X