14 மணி நேரம் நெஃப்ட் சேவை இருக்காது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நெஃப்ட் எனப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை சேவை, வரும் மே 23 அன்று, 14 மணி நேரம் இருக்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பானது சற்று பரப்பரப்பினை ஏற்படுத்தியிருந்தாலும், மற்ற ஆன்லைன் சேவைகள் வழக்கம்போல கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறவுள்ள நிலையில் நெஃப்ட் சேவை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஞாயிற்றுகிழமையன்று வருவதால், வாடிக்கையாளரகள் தங்களது பணபரிவர்த்தனையை முன் கூட்டியே திட்டமிடலாம்.

ஆன்லைன் சேவை

ஆன்லைன் சேவை

பொதுவாக இன்றைய நெருக்கடியான காலகட்டங்களில் ஆன்லைன் சேவையானது அத்தியாவசியமான சேவைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிலும் வங்கி வேலை நாள் இல்லாத நாளில் இந்த சேவை தடை படலாம் என்பதால் உங்களது பரிவர்த்தனைகளை பாதிக்கக்கூடும். ஏனெனில் வங்கி வேலை நாளாக இருந்தால் கூட, வங்கிகளில் சென்று பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். ஆனால் விடுமுறை நாள் என்பதால், சேவை பாதிகப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்டிஜிஎஸ் சேவை உண்டு

ஆர்டிஜிஎஸ் சேவை உண்டு

ஆக வாடிக்கையாளர்கள் தங்களது பர்வர்த்தணைகளை திட்டமிட்டு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த சமயத்தில் ஆர்டிஜிஎஸ் சேவை தொடர்ந்து பெற முடியும். வாடிக்கையாளார்கள் இதன் மூலம் பாதுகாப்பான பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம். கடந்த மாதத்தில் இதே போன்று ஆர்டிஜிஎஸ் சேவைக்கு தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நெஃப்ட் 24 மணி நேர சேவை
 

நெஃப்ட் 24 மணி நேர சேவை

முன்னதாக நெஃப்ட் சேவையானது காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே நெஃப்ட் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் அதன் பின்னர் 24*7*365 என்ற சேவையை கொண்டு வந்தது ரிசர்வ் வங்கி. இதன் மூலம் வாரத்தின் 7 நாட்களும் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையை வாடிக்கையாளர்கள் பெற்று வந்தனர்.

பாதுகாப்பான சேவை

பாதுகாப்பான சேவை

நெஃப்ட் சிஸ்டம் மூலமாக 2 லட்சம் ரூபாய் வரையில் பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அதோடு 24 மணி நேரமும் செய்து கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பான பரிவர்த்தனை என்பதால், இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. ஆக இன்னும் தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்துவதும் நல்ல விஷயம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Neft money transfer won’t be available for 14 hours on May 23, says reserve bank

Bank latest updates.. Neft money transfer won’t be available for 14 hours on May 23, says reserve bank
Story first published: Monday, May 17, 2021, 17:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X