நேபாளத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், வாய் வாய் நூடுல்ஸ் பிராண்ட் நிறுவனத்தின் உரிமையாளருமான பினோத் சவுத்ரி இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக இந்தியாவில் புதிதாக நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளார்.
வாய் வாய் நூடுல்ஸ் பிராண்ட் இந்தியாவில் நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாட்டில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும்.
வாய் வாய் நூடுல்ஸ்
வாய் வாய் நூடுல்ஸ் பிராண்டின் உரிமையாளரான சிஜி கார்ப் குளோபல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான சிஜி புட்ஸ் நிறுவனம் தனது பேக்கேஜ் உணவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், இந்தியாவில் தனது தயாரிப்புகளைக் கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளதாகச் சிஜி கார்ப் குளோபல் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் வருண் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
சிஜி கார்ப் குளோபல்
இந்தியாவில் தனது தயாரிப்புகளை நாடு முழுவதும் விரைவாகவும், எளிதாகவும் கொண்டு செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள சிஜி கார்ப் குளோபல் நிறுவனம், இந்தியாவில் ஒரு நிறுவனத்தை விரைவில் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் விநியோகம்
புதிதாக நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்பு சிஜி கார்ப் குளோபல் நிறுவனம் தனது முக்கியத் தயாரிப்புகளான சாஸ் மற்றும் இஸ்டென்ட் பாஸ்தா ஆகியவற்றை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வர்த்தகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இவ்விரு பொருட்களுக்கும் தலா 200 முதல் 250 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகச் சந்தை உள்ளது.
3வது இடத்தில் வாய் வாய் நூடுல்ஸ்
சிஜி கார்ப் குளோபல் நிறுவனம் உணவுப் பொருட்கள் மட்டும் அல்லாமல் கன்ஸ்யூமர் கூட்ஸ், பயோடெக், சிமெண்ட், எலக்ட்ரானிக்ஸ், அப்ளையன்ஸ், நிதியியல் சேவை எனப் பல துறையில் இயங்கி வருகிறது. இந்தியாவில் நூடுல்ஸ் விற்பனையில் நெஸ்லே, ஐடிசி நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக வாய் வாய் நூடுல்ஸ் பிராண்ட் தான் உள்ளது.
வட இந்தியப் பகுதி
தென்னிந்திய பகுதிகளில் வாய் வாய் நூடுல்ஸ் பிராண்ட் பெரிய அளவில் பிரபலம் இல்லை என்றாலும் வடகிழக்கு மற்றும் கிழக்கிந்தியப் பகுதிகளில் குறிப்பிடத்தக்கச் சந்தை வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
1500 கோடி ரூபாய் வருவாய்
தற்போது புதிய நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் 2022ஆம் நிதியாண்டுக்குள் சிஜி புட்ஸ் நிறுவனத்தின் வருவாய் 1000 கோடி ரூபாயில் இருந்து 1500 கோடி ரூபாய் வரையில் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
விலை குறைவு
வாய் வாய் நூடுல்ஸ் பிராண்ட் கீழ் விலை குறைவான அதாவது 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையிலான உணவுப் பொருட்களின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.
வாடிக்கையாளர்கள்
மலிவான விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் காரணத்தால் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களையும் பெற முடியும். மேலும் இந்நிறுவனம் அனைத்து தயாரிப்புகளையும் 100 ரூபாய்க்குக் கீழ் தான் விற்பனை செய்ய வேண்டும் எனவும் குறிக்கோள் வைத்துள்ளது.
புதிய உற்பத்தி தளம்
வாய் வாய் நூடுல்ஸ் பிராண்ட் சுமார் 200 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய உற்பத்தி தளத்தை உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் நிறுவ திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications