பெண் ஊழியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நெஸ்லே.. சுரேஷ் நாரயணன் சொன்ன செம விஷயம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேகமாக நுகரும் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே இந்தியா சமீபத்தில் தனது உணவு தயாரிப்புகள் கணிசமான அளவு ஆரோக்கியமற்றவை என அதிர்வலைகளைக் கிளப்பியது. மேலும் தங்கள் நிறுவனத்தின் உணவுப் பொருள்களில் பல ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டு வரவிருப்பதாகவும் கூறியது.

இப்படி அதிர்வலைகளை கிளப்பிய நெஸ்லே, தற்போது அதன் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து நெஸ்லேவின் நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் சுரேஷ் நாரயணன், தற்போது நிறுவனத்தின் பெண் ஊழியர்களின் பங்கு 23% என தெரிவித்துள்ளார்.

#IPL: 10 நொடி விளம்பரத்தின் விலை என்ன தெரியுமா..? கல்லாகட்டும் ஸ்டார் இந்தியா..! #IPL: 10 நொடி விளம்பரத்தின் விலை என்ன தெரியுமா..? கல்லாகட்டும் ஸ்டார் இந்தியா..!

பெண்களுக்கு முக்கியத்துவம்

பெண்களுக்கு முக்கியத்துவம்

இந்த விகிதமானது கடந்த 2015ம் ஆண்டில் வெறும் 15 - 16% ஆக இருந்ததாகவும் கூறியுள்ளார். தற்போது இந்த நிறுவனம் நாட்டில் 8 ஆலைகளை நடத்தி வருகின்றது. இதில் 7,700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நெஸ்லேயின் இந்த விகிதம் இதனுடன் முடியாது. இது இன்னும் அதிகரிக்கும் என்றும், பெண் ஊழியர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதையும் கூறியுள்ளார்.

புதிய ஆலையில் பெண்களுக்கு வாய்ப்பு

புதிய ஆலையில் பெண்களுக்கு வாய்ப்பு

கடந்த ஆண்டு பணியமர்த்தலில் 42% பெண்கள் தான் என கூறியவர், நெஸ்லேயின் இந்த நடவடிக்கை தொடரும் என்றும், பெண்களுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் சனந்தில் உள்ள நெஸ்லேயின் புதிய ஆலையில், இன்ஸ்டன்ட் மேக் நூடுல்ஸ் தயாரிப்பில் 62% பேர் பெண் ஊழியர்களாக இருப்பர். இந்த ஆலை கிட்டதட்ட அனைத்து செயல்பாடுகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது என சுரேஷ் கூறியுள்ளார்.

எவ்வளவு முதலீடு

எவ்வளவு முதலீடு

குஜராத் மாநிலம் சனந்த் ஆலைக்காக நெஸ்லே நிறுவனம் சுமார் 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள ஏற்கனவே உற்பத்தி செய்யும் ஆலைகளின் திறனை அதிகரிக்க 300 கோடி ரூபாய் முதலீடினை செய்துள்ளதாகவும் சுரேஷ் கூறியுள்ளார்.

முன்னதாக அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் 2,600 கோடி ரூபாய் முதலீடு செய்ய போவதாக அறிவித்திருந்த நிலையில், அதன் ஒரு பகுதி இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய பங்கு விலை

இன்றைய பங்கு விலை

நெஸ்லே இந்தியா உணவு பதப்படுத்தும் துறைக்கான PLI திட்டத்திற்காகவும் விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார். எனினும் இது குறித்த முழுமையான விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது இன்று 133.05 ரூபாய் குறைந்து, 20,189.55 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 20,330 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 20,002.15 ரூபாயாகும். இந்த நிறுவனத்தின் 52 வார உச்ச விலை 20,609.15 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: nestle நெஸ்லே
English summary

Nestle plans to increase number of female employees

Nestle latest updates.. Nestle plans to increase number of female employees in coming years
Story first published: Tuesday, September 21, 2021, 17:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X