Netflix சிஇஓ ராஜினாமா.. எல்லோருக்கும் பதில் சொல்ல முடியல..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொழுதுபோக்கு துறையைத் தலைகீழாக மாற்றியுள்ள நெட்பிளிக்ஸ் கொரோனா காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்த நிலையில், கொரோனாவுக்குப் பின்பு பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள் பொதுப்போக்கிற்காக என்னவெல்லாம் செய்தார்களோ அனைத்தும், தற்போது தலைகீழாக மாறியுள்ளது. இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.

இதன் விளைவாகத் தற்போது Netflix சிஇஓ ராஜினாமா செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

கேமிங் துறையில் இறங்கும் நெட்பிளிக்ஸ்..! கேமிங் துறையில் இறங்கும் நெட்பிளிக்ஸ்..!

நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் நெட்பிளிக்ஸ் இன்க் ஸ்ட்ரிமிங் சேவைத் துறையில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருந்தாலும், அதன் வருவாய் ஈட்டும் முறைகள் மற்றும் திட்டங்கள் குறித்து முதலீட்டாளர்கள், பங்குதாரர்களுக்குப் பெரும் கேள்வி உள்ளது.

ரீட் ஹேஸ்டிங்ஸ்

ரீட் ஹேஸ்டிங்ஸ்

இந்த நிலையில் பல மாத முயற்சிகள் பலன் அளிக்காத காரணத்தால் நெட்பிளிக்ஸ் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக இருக்கும் ரீட் ஹேஸ்டிங்ஸ் வியாழக்கிழமை முதல் தான் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாகக் அறிவித்தார்.

ஸ்ட்ரீமிங் சேவை

ஸ்ட்ரீமிங் சேவை

இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனத்தின் கட்டுப்பாட்டைத் தற்போது நீண்டகாலக் கூட்டாளரும், அதன் இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான டெட் சரண்டோஸ் மற்றும் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி கிரெக் பீட்டர்ஸ் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

38 சதவீதம் சரிவு

38 சதவீதம் சரிவு

நெட்பிளிக்ஸ் நிறுவனப் பங்குகள் கடந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 38 சதவீதம் சரிந்த நிலையில், வருட இறுதியில் இந்நிறுவனம் கணித்ததைக் காட்டிலும் அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெற்றதாக அறிவித்த காரணத்தால் பல ஏற்ற இறக்கம் மத்தியில் நெட்பிளிக்ஸ் பங்குகள் 2023 ஆம் ஆண்டின் 19 நாளில் 7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

மலிவான சப்ஸ்கிரிப்ஷன் திட்டம்

மலிவான சப்ஸ்கிரிப்ஷன் திட்டம்

2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வாடிக்கையாளர்களை இழந்ததால் நெட்பிளிக்ஸ் கடுமையான நெருக்கடியில் இருந்தது. மேலும் சமீபத்தில் விளம்பரங்கள் கூடிய மலிவான சப்ஸ்கிரிப்ஷன் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

டெட் சரண்டோஸ் மற்றும் கிரெக் பீட்டர்ஸ்

டெட் சரண்டோஸ் மற்றும் கிரெக் பீட்டர்ஸ்

இந்நிலையில் டெட் சரண்டோஸ் மற்றும் கிரெக் பீட்டர்ஸ் தலைமை நிர்வாகிகள் பதவியைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இதேவேளையில், ரீட் ஹேஸ்டிங்ஸ் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றுகிறார். இந்த மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது நெட்பிளிக்ஸ்.

அடுத்த 10 வருடம்

அடுத்த 10 வருடம்

இது நெட்பிளிக்ஸ் நிர்வாகத்தின் அடுத்த 10 வருடங்களுக்கான நிர்வாகத் திட்டமிடலின் உச்சக்கட்ட நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. பீட்டர்ஸ் மற்றும் சரண்டோஸ் இருவரும் ஜூலை 2020 இல் நிறுவனத்திற்குச் சவாலான நேரத்தின் மத்தியில் பதவி உயர்வு பெற்றனர்.

 நெட்பிளிக்ஸ் வர்த்தகம்

நெட்பிளிக்ஸ் வர்த்தகம்

62 வயதான ரீட் ஹேஸ்டிங்ஸ் DVD-by-mail என்ற வர்த்தகத்தை நெட்பிளிக்ஸ் ஆக 1997 ஆம் ஆண்டு உருவாக்கினார். பிரபலமான திரைப்படத்தின் டிவிடி-களைப் போஸ்ட் மூலம் விற்பனை செய்வது தான் வர்த்தகம். ஆனால் டெக்னாலஜி வளர்ச்சி மற்றும் இண்டர்நெட் சேவை விரிவாக்கம் மூலம் தற்போது உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் சேவை தளமாக உயர்ந்துள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

நெட்பிளிக்ஸ் இந்தியாவில் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து மொழிகளிலும் பெரிய அளவிலான முதலீட்டைச் செய்து மாதத்திற்கு ஒரு படம் என்ற வகையில் திரைப்படங்கள், வெப் சீரியஸ்-களை வாங்கி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Netflix Reed Hastings left CEO role amid stock crashing

Netflix Reed Hastings left CEO role amid stock crashing
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X