இந்தியாவில் இருக்கும் முன்னணி செயலிகள் கடந்த சில நாட்களாகவே கூகிள் ப்ளே ஸ்டோரில் மூலம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு எதிராக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு நாம் நாட்டுக்கெனச் சொந்தமாக ப்ளே ஸ்டோர் உருவாக்கத் திட்டமிட்டு ஆலோசனை நடத்தி வருகிறது என அரசு தரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு திட்டமிட்டபடி இந்தியாவில் ப்ளே ஸ்டோர் உருவாக்கினால் கூகிள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தகப் பாதிப்பை ஏற்படும்.
ஏற்கனவே சீன ஸ்மார்ட்போன்கள் தனக்கெனத் தனிப்பட ப்ளே ஸ்டோர் உருவாக்கி வரும் நிலையில் இந்தியாவில் இந்த முடிவு, இன்னும் பல நாடுகளைத் தனி ப்ளே ஸ்டோர் அமைக்க ஊக்குவிக்கும்.
இ-காமர்ஸ் வரி - இனிப்புக் கடை வரை! இன்று முதல் இவைகள் எல்லாம் அமலுக்கு வந்திருக்கு!

பிரதமர் மோடி
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, புதிதாக மொபைல் சேவை ஆப் ஸ்டோர் அமைக்கத் திட்டமிட்டு வருகிறது என முன்னணி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. ஆனால் அரசு தரப்பிலோ அல்லது அரசு அதிகாரிகளோ இதுவரை நேரடியாக எவ்விதமான தகவல்களையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

97 சதவீத சந்தை
இந்தியா டிசம்பர் 2019 தரவுகள் படி சுமார் 1.15 பில்லியன் டெலிகாம் வாடிக்கையாளர்கள் கொண்டு உலகிலேயே 2வது மிகப்பெரிய டெலிகாம் சந்தையாக உள்ளது. இந்த 1.15 பில்லியன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், சுமார் 97 சதவீதம் பேர் ஆண்டுராய்டு இயங்கு தளம் கொண்ட போன்களைத் தான் பயன்படுத்துகின்றனர்.

மிகப்பெரிய சந்தை
கிட்டதட்ட 1 பில்லியன் வாடிக்கையாளர்கள் ஆண்டுராய்டு இயங்கு தளம் கொண்ட போன்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், இது மிகப்பெரிய சந்தை. இந்த முக்கியமான சந்தையில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களோ அல்லது டெக் நிறுவனங்கள் இல்லாமல் இருப்பது பெரிய அளவிலான வர்த்தகத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கொடுப்பதாகப் பொருள்.

கட்டணம்
இந்தியாவில் ஆண்டுராய்டு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கையில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இந்தச் சந்தையில் நுழைந்து வர்த்தகத்தைக் கைப்பற்ற வேண்டும்.
இதேபோல் கூகிள் ஆப்பிள் போன்று 30 சதவீதம் கட்டணத்தை இந்திய ஆப் ஸ்டோர் விதிக்கக் கூடாது எனத் திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் இருந்து சில உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது.

ப்ரிஇன்ஸ்டால்
புதிகாக உருவாக்கப்பட உள்ள மொபைல் சேவை ஆப் ஸ்டோர், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஆண்டுராய்டு போன்களில் கட்டாயம் ப்ரிஇன்ஸ்டாலாக இந்த இந்திய அரசின் ப்ளே ஸ்டோர் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது.

ஆதிக்கம்
இந்திய அரசின் இந்த முயற்சியின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், புதிய துறையில் வர்த்தக வாய்ப்பாக அமையும். இந்தியா போன்ற வேகமாக வளரும் டெலிகாம் சந்தையில் இந்திய நிறுவனத்தின் ஆதிக்கம் இன்றைய சர்வதேச வர்த்தகச் சூழ்நிலையில் கட்டாயம் தேவை.