60 பில்லியன் டாலர் மதிப்பீடு, ஐபிஓ, பங்கு விற்பனை.. அதிரடியாய் களமிறங்கும் டிக்டாக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேஸ்புக் அறிமுகத்திற்குப் பின் சமுக வலைத்தள உலகில் மாபெரும் புரட்சியைச் செய்த டிக்டாக், சமீபத்தில் பல நாடுகளில் தனிநபர் தகவல் பாதுகாப்புக் காரணமாகத் தடை செய்யப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் டிக்டாக் எதிராகப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவில் இருந்து டிக்டாக் வெளியேற காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் டிக்டாக் தொடர்ந்து அமெரிக்காவில் செயல்படவும், அடுத்தடுத்த வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

இதனால் இந்தியாவிலும் டிக்டாக் திரும்ப வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அசுர ஏற்றம் கண்ட ஆபரணத் தங்கம் விலை! எப்படி விலை ஏற்றம் கண்டது?

60 பில்லியன் டாலர் மதிப்பீடு

60 பில்லியன் டாலர் மதிப்பீடு

டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான சீனாவின் பைட்டான்ஸ் இந்தியா, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும் இயங்க முதல்கட்ட பணியாக டிக்டாக் சேவைகளைச் சீன வர்த்தகத்தில் இருந்து தனியாகப் பிரித்து டிக்டாக் குளோபல் என்ற நிறுவனத்தை அமைக்க உள்ளது. இந்த நிறுவனத்தின் மதிப்பு 60 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய முதலீட்டாளர்கள்

புதிய முதலீட்டாளர்கள்

இந்த டிக்டாக் குளோபல் நிறுவனத்தில் அமெரிக்க அரசு முன்வைக்கும் பாதுகாப்பு குறைபாடுகளைக் களையவும், பாதுகாப்பான சேவையைக் கொடுக்கவும் அமெரிக்காவின் வன்பொருள் மற்றும் மென்பொருள் வர்த்தகத்தில் முன்னோடியாக இருக்கும் ஆரக்கிள் மற்றும் ரீடைல் விற்பனை சந்தையில் முன்னோடியாக இருக்கும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

இந்த முதலீட்டுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்-ம் ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு இந்த மூன்று நிறுவனங்களும் துவங்கியுள்ளது.

ஆரக்கிள் மற்றும் வால்மார்ட்
 

ஆரக்கிள் மற்றும் வால்மார்ட்

புதிதாக அமைக்கப்படும் டிக்டாக் குளோபல் நிறுவனத்தில் ஆரக்கிள் 12.5 சதவீத பங்குகளையும், வால்மார்ட் 7.5 சதவீத பங்குகளையும் கைப்பற்ற முடிவு செய்துள்ளது. இந்தப் பங்கு முதலீட்டுத் திட்டத்திற்கு டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் இரண்டும் சேர்ந்து 20 சதவீத பங்குகளுக்குச் சுமார் 12 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளது.

பையிட்டான்ஸ்

பையிட்டான்ஸ்

இந்த டிக்டாக் குளோபல் நிறுவனத்தில் 20 சதவீத பங்குகளை ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் கைப்பற்றும் நிலையில், எஞ்சியுள்ள 80 சதவீத பங்குகளைப் பையிட்டான்ஸ் கையில் தான் இருக்கப்போகிறது. இதுமட்டும் அல்லாமல் சீனாவை தவிர்த்து அமெரிக்கா உட்படப் பிற உலக நாடுகளில் டிக்டாக் செயலியை இயக்குவதற்கான கட்டுப்பாடும் பையிட்டான்ஸ் கையில் தான் இருக்கும்.

வென்சர் கேப்பிடல்ஸ்

வென்சர் கேப்பிடல்ஸ்

டிக்டாக் செயலி இயங்குவதில் பிரச்சனைகளைக் களையப்பட்டு வரும் நிலையில், ஆரக்கிள், வால்மார்ட் நிறுவனங்களைத் தொடர்ந்து வென்சர் கேப்பிடல் நிறுவனங்களான சிகோயா கேப்பிடல் மற்றும் ஜெனரல் அட்லான்டிக் போன்ற நிறுவன முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் டிக்டாக் குளோபல் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

தலைமை

தலைமை

புதிதாக அமைக்கப்பட உள்ள டிக்டாக் குளோபல் நிறுவனத்தில் 5 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்படுகிறது. இந்த நிர்வாகக் குழுவின் தலைவராக வால்மார்ட் குழுமத்தின் தலைவர் Doug McMillon பதவி வகிக்க உள்ளார்.

ஆரக்கிள்

ஆரக்கிள்

டிக்டாக் டேட்டா பாதுகாப்பு, மக்களின் தகவல் பாதுகாப்பு ஆகியவற்றை ஆரக்கிள் உறுதி செய்து டிக்டாக் செயலி இயங்குவதற்குத் தேவையான மிகப்பெரிய கிளவுட் தளத்தை அதிவேகமாக ஆரக்கிள் அமைக்கப்பட உள்ளதாக ஆரக்கிள் நிறுவனத்தின் சிஇஓ Safra Catz தெரிவித்துள்ளார்.

டிக்டாக் மூலம் ஆரக்கிள்-ன் கிளவுட் சேவை புதிய உச்சத்தை அடைய உள்ளது.

பரிசோதனை

பரிசோதனை

ஆரக்கிள் நிறுவனத்திற்கு டிக்டாக் செயலின் ஒட்டுமொத்த source code மற்றும் updates-கள் முழுமையாகப் பரிசோதனை செய்த பின்பே அடுத்தகட்ட பணிகளைச் செய்ய உள்ளது.

இந்தப் பரிசோதனை மூலம் டிக்டாக் செயலி கொண்டு மறைமுகமாக அமெரிக்க மக்களை உளவு பார்க்கும் வேலையைத் தடுக்க முடியும் எனத் தெரிகிறது.

ஐபிஓ

ஐபிஓ

புதிய முதலீட்டாளர்களுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திப் பையிட்டான்ஸ் டிக்டாக் குளோபல் நிறுவனத்தை அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் பட்டியலிட திட்டமிட்டு வருகிறது.

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் மக்களின் பணம் அதிகளவில் டிக்டாக் நிறுவனத்தில் இருக்கும், அப்போது அமெரிக்க அரசு இந்நிறுவனத்தின் மீது திடீரெனத் தடையை விதிக்க முடியாது, இதனால் டிக்டாக் பாதுகாப்பாக வர்த்தகம் செய்ய முடியும் என்பது திட்டம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tiktok ipo tiktok wechat
English summary

New investors, $60 billion valuations, IPO: Big plans for Tiktok

New investors, $60 billion valuations, IPO: Big plans for Tiktok
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X