இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா வல்லரசு நாடாக மாறவில்லை என்றாலும் இக்கனவோடு மிகக் குறைந்த காலத்தில் நீண்ட தூரம் வளர்ச்சி அடைந்துவிட்டது என்றால் மிகையில்லை. ஒவ்வொரு துறையிலும் வர்த்தக மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு என இந்தியா கடந்த 15 வருடத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் அடைந்துள்ளது. ஆனால் இன்னும் சில துறையில் அரசின் பணமும், சேவைும் அதிகளவில் வீணாக்கப்படுகிறது, இதில் மிகமுக்கியமானது மின்சாரத் துறை.

 

இந்நிலையில் இந்தியா முழுவதும் திருடப்படும், வீண் செய்யப்படும் மின்சாரத்தைத் தடுக்க ப்ரீபெய்டு மின்சாரத் திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டிஜிட்டல் மீட்டர்..

டிஜிட்டல் மீட்டர்..

சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வீடு மற்றும் கடைகளிலும் பழைய மின்சாரச் சக்கர மீட்டரை மாற்றிவிட்டு புதிய டிஜிட்டல் மீட்டர் மாற்றப்பட்டது. இப்போதும் சில கிராமங்களில் இந்தப் பணி மேற்கொண்டு வரப்படுகிறது. டிஜிட்டல் மீட்டர் மாற்றும் திட்டமே முழுமையாக முடிக்கப்படாத நிலையில் தற்போது ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதுவும் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய திட்டமாகச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

ப்ரீபெய்டு மீட்டர்

ப்ரீபெய்டு மீட்டர்

நாடு முழுவதும் ப்ரீபெய்டு மீட்டர் கொண்டு வருவதன் மூலம் மின்சாரத்திற்குச் செலுத்தப்படும் கட்டணம், வசூல் ஆகியவை சீராகும். இதன் மூலம் மின்சாரம் விநியோகம் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் ஏற்படும் பெரும் நஷ்டத்தை இதன் மூலம் சரி செய்ய முடியும். மேலும் இந்த மின்சார விநியோக நிறுவனங்கள் பெரும்பாலும் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் காரணத்தால் மாநில அரசுகளின் வருமானம் உயரும்.

மேலும் இந்த ப்ரீபெய்டு மின்சார மீட்டர் மூலம் தவறான கட்டண பதிவு (Billing), மின்சாரத் திருட்டு, காலம் கடத்தி செலுத்தப்படும் மின்சாரக் கட்டணம் ஆகிய பிரச்சனைகளும் சரி செய்ய முடியும்.

 

திட்ட செலவு
 

திட்ட செலவு

இந்நிலையில் ப்ரீபெய்டு மீட்டர், இதை நிறுவும் செலவுகள், அதற்கான ஊழியர்களும் இதர தேவைகளும், அதனை ஒட்டுமொத்தமாகச் சிஸ்டத்திற்குள் இணைப்புப் பணிகள் ஆகிய அனைத்திற்கும் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி தேவைப்படும் என மின்சாரத் துறை செயலாளர் சஞ்சீவ் நந்தன் சஹாய்த் தெரிவித்துள்ளார்.

வருமானம்

வருமானம்

சுமார் 25 கோடி ப்ரீபெய்டு மீட்டர்கள் நாடு முழுவதும் அமைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் இத்திட்டத்திற்காகச் செலவிடப்படும் தொகை இத்திட்டத்தின் வாயிலாகவே கிடைப்பது மட்டும் அல்லாமல் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மின்சார விநியோக நிறுவனத்திற்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார் சஞ்சீவ் நந்தன் சஹாய் .

இதுபோன்ற திட்டம் இந்திய மக்களுக்கும், இந்தியாவுக்கும் தேவையா..? இத்திட்டத்தால் மக்களுக்கு எந்த விதமான பாதிப்புகள் வரும்..? என்பதைக் கமெண்டாகப் பதிவிடுங்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New prepaid electricity meters Plan: ₹1.5 lakh crore Budget

India’s nationwide roll-out of smart power meters, aimed at supporting ailing utilities and bolstering reliable electricity supply, will cost about ₹1.5 trillion ($21 billion), according to a government estimate.
Story first published: Friday, February 28, 2020, 7:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X