உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளத்தில் ஒன்றான டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டோர்சி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இந்த முக்கியமான பதவியை அதிகம் பிரபலம் இல்லாத பராக் அக்ரவால்-க்குக் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் ஏற்கனவே அதிகளவிலான இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மீண்டும் ஒரு இந்தியருக்குச் சிஇஓ பதவி கிடைத்துள்ளது இந்திய மக்களுக்குப் பெருமைப்படும் விஷயமாக உள்ளது.
நேற்று டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ பராக் அக்ரவால்-ன் சம்பளம் குறித்த தரவுகள் பெறும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இன்று பராக் அக்ரவால்-ன் மனைவி யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பராக் அக்ரவால்
பராக் அக்ரவால்-ன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பெரிய அளவில் தெரியாத நிலையில் இவர் ஐஐடி பாம்பே-வில் பிடெக் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் பிஹெச்டி பிடித்துள்ளார். படிப்பை முடித்துப் பல பணிகளில் பணியாற்றிய பராக் அக்ரவால் கடந்த 10 வருடமாக டிவிட்டர் நிறுவனத்தில் பல முக்கியப் பிரிவுகளில் பணியாற்றி வருகிறார்.
வினிதா அகர்வாலா
பராக் அக்ரவால்-ன் மனைவியின் பெயர் வினிதா அகர்வாலா, அவர் ஒரு மருத்துவர் என்பது மட்டும் அல்லாமல் ஸ்டான்போர்டு ஸ்கூல் ஆப் மெடிசின் கல்லூரியில் துணை மருத்துவப் பேராசிரியர் ஆக உள்ளார். இது மட்டும் அல்லாமல் Andreessen Horowitz என்ற வென்சர் கேப்பிடல் நிறுவனத்தில் மருத்துவச் சிகிச்சை, நோயறிதல் மற்றும் டிஜிட்டல் ஆரோக்கியம், பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்கு முதலீட்டை ஈட்டும் முக்கியமான பணியைச் செய்து வருகிறார்.
முதலீட்டு நிறுவனம்
Andreessen Horowitz நிறுவனம் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், நிர்வாகிகள், பொறியாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இதர டெக் நிபுணர்களை இணைக்கும் தளமாக உள்ளது.
முக்கியப் பணிகள்
இதற்கு முன்பு நேஷனல் வென்சர் கேப்பிடல் அசோசியேஷன் அமைப்பின் நிர்வாக உறுப்பினராகவும், ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல்-ன் கமிட்டி உறுப்பினராகவும் இருந்து உள்ளார். இதேபோல் ஜிவி நிறுவனத்தில் வென்சர் கேப்பிடல் பார்னர் ஆகவும் இருந்துள்ளார். இதோடு Kyruus, மெக்கென்சி அண்ட் கம்பெனி எனப் பல முக்கிய நிறுவனத்தில் பணியாறியுள்ளார்.
பராக் அக்ரவால்-ன் டிவிட்டர் கணக்கு
பராக் அக்ரவால்-ன் டிவிட்டர் கணக்கை அவர் சிஇஓ-வாக அறிவிக்கும் முன்பு வெறும் 24000 பேர் மட்டுமே பாலோ செய்திருந்த நிலையில் தற்போது 3,53,000 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் படிப்பதில் துவங்கி டிவிட்டர் போன்ற மாபெரும் நிறுவனத்தில் சிஇஓ பதவியை வெறும் 37 வயதில் பெறுவது இமாலய சாதனை தான்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications