50 வருடத்திற்கு பின்பும் NIKE நிறுவனத்தை விடாமல் துரத்தும் சர்ச்சை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் முன்னணி ஷூ பிராண்டாக இருக்கும் நைக் ஆரம்பத்தில் வேறு பெயருடன் தான் துவங்கப்பட்டது. பின்னாளில் தான் நைக் என்றும், அதன் ஆஸ்தான லோகோ-வான 'ஸ்வூஷ்' லோகோ உருவாக்கப்பட்டு வர்த்தகம் செய்யப்பட்டது.

ஒரு பொருள் மிகப்பெரிய அளவில் வர்த்தகமாக வேண்டும் என்றால் அதன் தரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது இரண்டாவது தான், முதலில் முக்கியமாக இருப்பது பார்த்த உடனே வித்தியாசமாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருக்க வேண்டும்.

அப்படி நைக் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த 'ஸ்வூஷ்' லோகோ-வை இந்நிறுவனத்தின் உரிமையாளர் வாங்கிய 50 வருடத்திற்குப் பின்பும் சர்ச்சையாகவும், அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

ரஷ்யா வேண்டாம் வெளியேறிய நைக்-க்கு நன்றி.. .உக்ரேனிய அதிபர் உருக்கம்.. ஏன்? ரஷ்யா வேண்டாம் வெளியேறிய நைக்-க்கு நன்றி.. .உக்ரேனிய அதிபர் உருக்கம்.. ஏன்?

 நைக் பிராண்ட்

நைக் பிராண்ட்

நைக் பிராண்ட் முதலில் ப்ளூ ரிப்பன் ஸ்போர்ட்ஸ் (பிஆர்எஸ்) என்று அழைக்கப்பட்டது. இது அமெரிக்காவின் ஓரிகான் பல்கலைக்கழகத் தடகள வீரர் பில் நைட் மற்றும் அவரது பயிற்சியாளர் பில் போவர்மேன் ஆகியோரால் இணைந்து ஜனவரி 25, 1964 இல் நிறுவப்பட்டது.

பில் நைட் மற்றும் பில் போவர்மேன்

பில் நைட் மற்றும் பில் போவர்மேன்

இந்த நிறுவனம் அதன் தற்போதைய பெயரான நைக்-ஐ கிரேக்க வெற்றியின் தெய்வமான நைக்-ல் இருந்து எடுத்தது. பெயரை தேர்வு செய்த பில் நைட் மற்றும் பில் போவர்மேன் லோகோ உருவாக்க முடிவு செய்தனர். இந்நிறுவனத்திற்கான லோகோ-வை நிறுவனர்களோ அல்லது இந்நிறுவனத்தின் ஊழியர்களோ உருவாக்கவில்லை.

 கரோலின் டேவிட்சன்

கரோலின் டேவிட்சன்

போர்ட்லேண்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் படித்து வந்த ஒரு மாணவி கரோலின் டேவிட்சன் 1971 இல் தடகள வீரர் நைக் ஷூ போட்டுக்கொண்டு ஓடுவரை லோகோவாகக் கொண்டு வர முயற்சி செய்த போது தான் 'ஸ்வூஷ்' லோகோ உருவானது. பில் நைட் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் கற்பித்த காலத்தில் கரோலின் டேவிட்சன் இந்த லோகோவை உருவாக்கினார்.

35 டாலர் மட்டுமே

35 டாலர் மட்டுமே

கரோலின் டேவிட்சன் இந்த லோகோ உருவாக்க வெறும் 35 டாலர் மட்டுமே கொடுக்கப்பட்டது. அப்போது மாணவியாக இருந்த கரோலின் டேவிட்சன் பணத் தேவையுடன் இருந்த நிலையில் ஒரு மணிநேரத்திற்கு 2 டாலர் சம்பளம் என ஒப்புக்கொண்டு பணியாற்றிய நிலையில் லோகோவுக்கு 35 டாலர் மட்டுமே கொடுத்ததாகப் பில் நைட் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒப்புக்கொண்டார்.

46.71 பில்லியன் டாலர் வருவாய்

46.71 பில்லியன் டாலர் வருவாய்

நைக் நிறுவனம் வருடத்திற்கு 46.71 பில்லியன் டாலர் வருவாய், 6.05 பில்லியன் டாலர் லாபம், 79100 ஊழியர்கள் என் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக வளர அன்று கரோலின் டேவிட்சன் உருவாக்கிய லோகோ தான் காரணம்.

500 நைக் பங்குகள்

500 நைக் பங்குகள்

இதனால் கரோலின் டேவிட்சன்-க்கு கொடுத்த 35 டாலர் தொகை மிகவும் குறைவு என்பதை உணர்ந்து பில் நைட் 1983ஆம் ஆண்டில் சுமார் 500 நைக் பங்குகளைக் கொடுக்கப்பட்டது. இது மட்டும் அல்லாமல் பிரம்மாண்டமான விருந்து, பில் நைட் கையெழுத்திட்ட சன்றிதழ் வழங்கப்பட்டது.

 1 மில்லியன் டாலர்

1 மில்லியன் டாலர்

கரோலின் டேவிட்சன் இன்று வரையில் ஒரு பங்குகளைக் கூட விற்பனை செய்யவில்லை, 1983 ஆம் ஆண்டுக் கொடுக்க 500 பங்குகளின் இன்றைய மதிப்பு 1 மில்லியன் டாலராகும். இன்று வரையில் நைக் நிறுவனத்திற்குக் கரோலின் டேவிட்சன்-க்கு கொடுத்த குறைவான சம்பளம் கருப்பு புள்ளியாகவே உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: nike logo நைக் லோகோ
English summary

Nike swoosh logo designer paid just 35 dollars; Bill Bowerman, Phil Knight paid 500 shares to Carolyn Davidson

Nike swoosh logo designer paid just 35 dollars; Bill Bowerman and Phil Knight paid 500 shares to Carolyn Davidson
Story first published: Wednesday, September 28, 2022, 19:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X