உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த ரஷ்யாவின் நடவடிக்கையை கண்டித்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
மைக்ரோசாப்ட் முதல் பல நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறி விட்ட நிலையில் தற்போது லேட்டஸ்டாக நைக் நிறுவனமும் ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் கணிப்பு..!
அது மட்டுமின்றி இன்னும் பல நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீதான போர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை காரணமாக ரஷ்ய சந்தையில் இருந்து வெளியேறும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அமெரிக்க விளையாட்டு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான நைக், உக்ரைனில் இருந்து முழுமையாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

நைக்
கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருவதை கண்டித்து பல சர்வதேச நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது நைக் நிறுவனமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிரந்தர வெளியேற்றம்
இதுகுறித்து நைக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 'ரஷ்யாவில் இருந்து நைக் நைட் நிறுவனம் முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னரே ரஷ்யாவில் உள்ள நைக் ஷோ ரூம்கள் தற்காலிகமாக மூடப்பட்டதை அடுத்து இனி நிரந்தரமாக மூடப்படுகிறது. நைட் நிறுவனத்தின் இணைய தளம் மற்றும் செயலியும் இனி ரஷ்யாவில் இயங்காது.

ஊழியர்களுக்கு ஆதரவு
வரும் மாதங்களில் எங்களது செயல்பாடுகளை நிறுத்துவதை நாங்கள் உறுதி செய்கிறோம். ஆனா அதே நேரத்தில் ரஷ்ய நிறுவனங்களில் பணியாற்றிய எங்களது பணியாளர்களுக்கு நாங்கள் முழுமையாக ஆதரவு அளிப்போம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் விற்பனை
கடந்த மே மாதமே நைக் நிறுவனம் ரஷ்யாவில் இனி நீடிக்கப் போவதில்லை என்று முடிவு செய்த நிலையில் தற்போது அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போர் ஆரம்பித்த அடுத்த மாதமே அதாவது மார்ச் மாதம் ரஷ்யாவில் ஆன்லைன் விற்பனையை நைக் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

28 ஆண்டுகள்
ஆன்லைன் விற்பனையை மூடியவுடன் அடுத்த சில தினங்களில் படிப்படியாக ஷோரூம்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்த நைக் நிறுவனம் தற்போது தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளது. நைக் நிறுவனம் ரஷ்யாவில் கடந்த 28 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் தற்போது அந்நாட்டு உடனான தொடர்பை முழுமையாக முறித்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மைக்ரோசாப்ட்
ஏற்கனவே சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து முழுமையாக வெளியேறுவதாக குறிப்பிட்டிருந்தது. அதேபோல பல நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறிய நிலையில் இன்னும் சில நிறுவனங்களும் வெளியேறுவதற்கு தயாராக உள்ளது.