என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்! எந்த துறையில் என்ன சீர்திருத்தங்கள்! பட்டியல் இதோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த மே 13, 2020 முதல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியாவை மீட்டு க் கொண்டு வர, அரசு எடுத்து இருக்கும் மற்றும் எடுக்க இருக்கும் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை விளக்கிக் கொண்டு இருக்கிறார்.

 

இன்று மாலை 4 மணிக்கும் நிதி அமைச்சர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பல திட்டங்களை அறிவித்து இருக்கிறார்.

அந்த அறிவிப்புகளில் முக்கியமான விஷயங்களைத் தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.

இன்று யாருக்கு

இன்று யாருக்கு

இந்தியாவின் பல துறைகளுக்கும் துறை சார்ந்த கொள்கை ரீதியிலான மாற்றங்கள் தேவையாக இருக்கிறது. கொள்கைகள் எளிமைபடுத்தப்பட வேண்டி இருக்கிறது. எனவே இன்ரு துறை சார்ந்த கொள்கை ரீதியிலான சீர்திருத்தங்களைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம் என தன் பேச்சைத் தொடங்கினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தொழில்துறை கட்டமைப்பு

தொழில்துறை கட்டமைப்பு

இந்தியாவின் தொழில் துறை கட்டமைப்பை மேம்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறதாம். தொழில் துறை நிலங்களை முன்பே பார்த்து வைத்திருக்கிறார்களாம். இப்போது டெக்னாலஜியைப் பயன்படுத்தி, அதை உறுதி செய்ய இருக்கிறார்களாம்.

8 துறை

8 துறை

இந்தியாவில் நிலக்கரி, மினரல், பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தி, ஏர் ஸ்பேஸ் மேலாண்மை, விமான நிலையம், மின்சார பகிர்மானம், விண்வெளி, அணு மின்சாரம் போன்ற 8 துறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறார்களாம்.

நிலக்கரி
 

நிலக்கரி

மத்திய அரசு தான் நிலக்கரி துறையில் மொனாபொலியாக இருந்தது. ஆனால் இனி கமர்ஷியல் மைனிங் கொண்டு வர இருக்கிறார்களாம். இனி யார் வேண்டுமானாலும் நிலக்கரி பிளாக்குகளை ஏலத்தில் எடுத்து, சந்தையில் விற்கலாமாம். வருவாய் பகிர்மான (Revenue Sharing mehanism) அடிப்படையில் இதை மத்திய அரசு செய்ய இருக்கிறதாம்.

நிலக்கரி 1

நிலக்கரி 1

உலகிலேயே அதிகம் நிலக்கரி வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம். ஆனால் இன்னும் இந்தியா நிலக்கரியை இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறோம். காரணம் மூல பொருட்கள் கிடைக்காமல் திணறுகிறோம். எனவே பெரிய அளவில் நிலக்கரி சுரங்க விதிமுறைகள் தளர்த்தப்படுமாம். அதோடு Coal bed methane-யும் ஏலம் விடப்படுமாம். 50,000 கோடி ரூபாயை evacuation infrastructure-க்கு வழங்கப்படுமாம்.

மினரல் சுரங்கம்

மினரல் சுரங்கம்

500 மினரல் பிளாக்குகள், பொது ஏலத்துக்கு வழங்க இருக்கிறார்களாம். இந்த ஏலம் மிகவும் வெளிப்படைத்தன்மை உடன் நடத்தப்படுமாம். அதோடு சுரங்க மைச்சகம், ஒரு புதிய மினரல் இண்டெக்ஸை மேம்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.

பாதுகாப்புத் துறை

பாதுகாப்புத் துறை

மத்திய அரசு ஆயுதங்கள் மற்றும் போர்க் கருவிகள் பட்டியலை வெளியிடுவார்கள். இனி, இந்தியா, இந்த ஆயுதங்கள் மற்றும் போர்க் கருவிகளை இறக்குமதி செய்யாதாம். இந்தியாவிலேயே தயாரிக்க இருக்கிறார்களாம். ஒவ்வொரு ஆண்டும் இனி இந்த பட்டியலில் புதிதாக ஆயுதங்கள் மற்றும் போர்க் கருவிகளைச் சேர்த்துக் கொண்டே போவார்களாம்.

அந்நிய நேரடி முதலீடு - பாதுகாப்புத் துறை

அந்நிய நேரடி முதலீடு - பாதுகாப்புத் துறை

இப்படி எல்லாமே இந்தியாவில் தயாரித்தால், பாதுகாப்பு கருவிகள் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதிக்கு செலவழிக்கும் பணத்தை மிச்சப்படுத்த முடியுமாம். அதே நேரத்தில் பாதுகாப்புத் துறை சார்ந்த பொருட்களை தயாரிக்கும் கம்பெனிகளில், ஆட்டோமேட்டிக் ரூட்டில், அந்நிய நேரடி முதலீடு அளவை 49 சதவிகிதத்தில் இருந்து 74 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறார்கள்.

Airspace management

Airspace management

இந்தியாவில் 60 சதவிகித airspace-ஐ மட்டுமே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இதனால் பல இடங்களுக்கு சுற்று வழிகளில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். இதை தவிர்க்கும் விதத்தில், இந்தியாவில் airspace-ஐ பயன்படுத்துவதில் இருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த இருக்கிறார்களாம்.

6 விமான நிலையங்கள்

6 விமான நிலையங்கள்

Private Public Partnership அடிப்படையில் 6 புதிய விமான நிலையங்களைக் ஏலம் விட இருக்கிறார்களாம். 12 விமான நிலையங்களில் உலகத் தர வசதிகளைக் கொண்டு வர கூடுதலாக 13,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருக்கிறதாம்.

விமான சேவை - எம் ஆர் ஓ

விமான சேவை - எம் ஆர் ஓ

MRO - Maintenance, Repair and Overhaul என்பார்கள். இந்தியாவிடம் போதுமான கெபாசிட்டி, மனித வளம், திறமை எல்லாமே இருக்கின்றன. எனவே இந்தியாவில் இருந்து தென் கிழக்கு ஆசியாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கு பறக்கும் விமானங்களுக்கு, ஒரு எம் ஆர் ஓ ஹப்பாக உருவாகலாம். எம் ஆர் ஓ சேவைகளுக்கான வரி சார்ந்த விஷயங்கள் சரி செய்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

தனியார்மயம்

தனியார்மயம்

இந்தியாவின் யூனியன் டெரிட்டரி பகுதிகளில் இருக்கும் மின் பகிர்மான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படும். மின்சார கட்டணம் தொடர்பான கொள்கை விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனச் சொல்லி இருக்கிறார். எனவே மின் பகிர்மான கம்பெனிகளின் இயலாமை, மக்களை பாதிக்காது எனச் சொல்லி இருக்கிறார்.

Social infra projects

Social infra projects

ஏற்கனவே மத்திய அரசு, மாநில அரசு மற்றும் statutory body அமைப்புகளின் திட்டங்களுக்கு மத்திய அரசு 20 % viability gap funding கொடுக்கிறது. ஆனால் இப்போது Social infra projects-களுக்கு மத்திய அரசு கூடுதலாக 10 % viability gap funding கொடுப்பார்களாம். ஆக மொத்தம் மத்திய அரசு viability gap funding ஆக Social infra projects-களுக்கு 30 % கொடுப்பார்களாம்.

இஸ்ரோ

இஸ்ரோ

தனியார் துறையினர், இனி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் சொத்துக்களை (Facilities) பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு ஜியோ ஸ்பேடியல் (Geospatial) கொள்கைகளையும் தளர்த்த இருக்கிறார்களாம். இதன் மூலம், ரிமோட் சென்சிங் டேட்டாவை டெக் தொழில்முனைவோர்களுக்கு கொடுக்க இருக்கிறார்களாம்.

அணு சக்தி

அணு சக்தி

public-private partnership அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி ரியாக்டர் அமைப்பார்களாம். இதன் மூலம் மருத்துவ ஐசோடோப்புகளை (Medical Isotopes) உற்பத்தி செய்ய இருக்கிறார்களாம். அதோடு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்த்துவிட தொழில்நுட்ப மேம்பாடு & இன்குபேஷன் சென்டர்களையும் (Technology Development cum Incubation Centres) அமைக்க இருக்கிறார்களாம்.

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

இந்தியாவில் இருக்கும் 60 ஆயுத தொழிற்சாலைகளும் சரியாக நிர்வகிக்கப்பட்டு, எதிர்காலத்தில் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படலாம் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆக கூடிய விரைவில் நாம் இந்தியாவின் ஆயுத தொழிற்சாலை பங்குகளை வாங்கும் வாய்ப்பு வரலாம்.

நில மேப்பிங்

நில மேப்பிங்

இந்தியாவில் மொத்தம் 3,376 தொழில் பூங்காங்கள், சுமாராக 5 லட்சம் ஹெக்டேர் நில பரப்புகள் பார்த்து வைத்திருக்கிறார்களாம். இதை GIS பயன்படுத்தி மேப் செய்து இருக்கிறார்களாம். இதை முதலீட்டாளர்கள் தேவைக்குத் தகுந்தாற் போல பயன்படுத்திக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirmala sitharaman 16th May 2020 press meet highlights and key takeaways

The central finance minister nirmala sitharaman meet press for the fourth day and made many important announcements. We have listed out the important highlights and key takeaways.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X