ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்த ஊழல்..இந்தியாவுக்கு எதிராக மோசடி.. காங்கிரஸ்-ஐ சாடிய நிதியமைச்சர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த கூட்டத்தில் ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்த ஊழல் குறித்தான உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு குறித்து விளக்கமளித்தார்.

TATA: இனி இந்த 4 துறை தான் இலக்கு.. ரகசியத்தை உடைத்த சந்திரசேகரன்..! TATA: இனி இந்த 4 துறை தான் இலக்கு.. ரகசியத்தை உடைத்த சந்திரசேகரன்..!

மேலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் காங்கிரஸ் அரசின் அதிகார துஷ்பிரயோகம் அம்பலமாகியுள்ளது என கடுமையாக சாடியுள்ளார். உண்மையில் இது என்ன ஒப்பந்தம்? எதற்காக நிதியமைச்சர் இவ்வாறு பேசினார். முழு விவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

NCLAT உத்தரவு உறுதி

NCLAT உத்தரவு உறுதி

பெங்களூரை சேர்ந்த தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவினை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமையன்று தள்ளுபடி செய்துள்ளது. மேலும் கடந்த ஆண்டில் செப்டம்பரில் வழங்கப்பட்ட NCLAT உத்தரவினையும் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் தேவாஸ் மல்டிமீடியா இப்போது கலைக்கப்பட வேண்டும், நிறுவனத்தினை மூட வேண்டும் என்பது தெளிவாகிறது.

தேவாஸ் மல்டிமீடியா?

தேவாஸ் மல்டிமீடியா?

தேவாஸ் மல்டிமீடியா என்பது முன்னாள் இஸ்ரோ அதிகாரிகள் மற்றும் உலக விண்வெளி ஊழியர்களால் 2004ல் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஜனவரி 2005ல் ஒரு ஒப்பந்தத்தில் தேவாஸ் மற்றும் ஆன்ட்ரிக்ஸ் கையெழுத்திட்டன.இந்த ஒப்பந்தத்தின் படி 2 செயற்கை கோள்களை 12 ஆண்டுகளுக்கு தேவாஸுக்கு குத்தகைக்கு விடுவதாக இருந்தது. இதன் மூலம் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு எஸ் பேண்ட் அலைகற்றையைக் கொண்டு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தான் இது.

ஒப்பந்தம் ரத்து

ஒப்பந்தம் ரத்து

ஆனால் இந்த அலைகற்றையை பெறுவதற்காக ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் அதிகரிகளுடன் மோசடியில் ஈடுபட்டது தேவாஸ் நிறுவனம் சதி செய்ததாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து சிபிஐ-ம் விசாரணை நடத்தி வந்தது. இதனையடுத்து தான் 2011ம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அதோடு தேவாஸ் நிறுவனமும் கலைக்கப்பட்டது.

NCLTயை நாடிய ஆன்ட்ரிக்ஸ்

NCLTயை நாடிய ஆன்ட்ரிக்ஸ்

இதனை எதிர்த்து தான் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் NCLTயை நாடியது. ஆனால் தேவாஸ் நிறுவனத்தினை கலைக்கவும், இதற்காக அதிகாரியையும் நியமித்து அப்போதே தீர்ப்பாயம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பும் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஒப்பந்தம் குறித்தான விளக்கத்தினையும் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் காங்கிரஸ் அரசின் துஷ்பிரயோகம் அம்பலமாகியுள்ளதாகவும் கடுமையான சாடலை முன் வைத்துள்ளார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirmala sitharaman hits out congress, says UPA govt committed fraud against india

Nirmala sitharaman hits out congress, says UPA govt committed fraud against india/ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்த ஊழல்..இந்தியாவுக்கு எதிராக மோசடி.. காங்கிரஸ்-ஐ சாடிய நிதியமைச்சர்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X