என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்.. இறுதி கட்ட ஊக்குவிப்பு அறிவிப்பு.. யாருக்கு என்ன சலுகை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தொடர்ந்து கடந்த நான்கு தினங்களாகவே பத்திரிக்கையாளர்களை சந்தித்து வரும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தனது இறுதி கட்ட பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகள் பற்றி அறிவித்து வருகிறார்.

அதனை பற்றி முக்கிய அறிவிப்புகளைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.

ஏற்கனவே பலவிதமான அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது உதவிகரமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓஹோ... நிதி அமைச்சர் இன்று இந்த 7 விஷயங்களை பற்றி தான் பேசுகிறாரா!ஓஹோ... நிதி அமைச்சர் இன்று இந்த 7 விஷயங்களை பற்றி தான் பேசுகிறாரா!

பல சீர்திருத்தம்

பல சீர்திருத்தம்

ஏற்கனவே பலவிதமான அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது உதவிகரமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்குவிப்பு சலுகைகள் மற்றும் பல சீர்திருத்தங்கள் பற்றி விவரித்து வருகிறார்.

விவசாயிகளுக்கு என்ன சலுகை?

விவசாயிகளுக்கு என்ன சலுகை?

இதுவரை 16,394 கோடி ரூபாய் 8.19 விவசாயிகளுக்கு நேரடியாக சென்று அடைந்துள்ளது. அதோடு 20 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் 10,025 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன மூலம் அவர்கள் பெரும் பயன் அடைந்துள்ளனர். மேலுமம் கட்டுமானம் மட்டும் கட்டுமானத் தொழிலாளார்களுக்கும் நிதி உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு இலவச தானியங்கள்

மக்களுக்கு இலவச தானியங்கள்

கொரோனாவினால் மக்கள் வேலையிழந்து வீடுகளில் முடங்கி இருக்கும் இந்த நிலையில், அடுத்த இரு மாதங்களுக்கு உணவு தானியங்கள் இலசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கம் முகாம்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பு வைக்கப்பட்டு வரும் நிலையில், 85% செலவுகளை அரசால் ஏற்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்காக மா நிலங்களுக்கு 4,113 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வாங்க 3,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சுகாதாரத்துறைக்கு பின்னர் பிரதமர் ஏற்கனவே 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நிதியமைச்சர்.

நெருக்கடியான நிலை

நெருக்கடியான நிலை

சர்வதேச அளவிலான இந்த நெருக்கடியில் இருந்து நாம் மிஈண்டு வருவோம். தற்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்காடியான சூழலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதென்ன ஏழு அறிவிப்புகள்

அதென்ன ஏழு அறிவிப்புகள்

நேற்று, நிலக்கரி, கனிம வளம், பாதுகாப்பு, விமான போக்குவரத்து, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற முக்கிய துறைகளில் பொருளாதார அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், இன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மருத்துவம், கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள், வணிகம் பொதுத்துறை நிறுவனங்கள், கொரோனா காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏழு அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம்

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம்

பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் நிலையில், 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்காக 40,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள நிலையில், தற்போது மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் இந்த திட்டத்தில் கொண்டு வர முடிவும் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் கல்வி

ஆன்லைன் கல்வி

நாடு முழுவதும் கொரோனாவினால் முடங்கியுள்ள நிலையில் மே30, 2020க்குள், சிறந்த 100 சிறந்த பல்கலைக் கழங்கங்களுக்கு ஆன்லைன் கல்விகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆன்லைன் கல்விகளை ஊக்குவிக்க இ -வித்யா என்ற திட்டத்தினை அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் 1 -12 வரையிலான வகுப்புகளுக்கு தனி கல்விச் சேனல்கள் உருவாக்கப்படும்.

திவால் சட்டத்தில் திருத்தம்

திவால் சட்டத்தில் திருத்தம்

நிறுவனங்களுக்கு சற்று தளர்வு அளிக்கப்படும் வகையில் திவால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். கொரோனாவினால் முடங்கி போயுள்ள நிறுவனங்களூக்கு சற்று தளர்வு அளிக்கப்படும் வகையில், கொரோனாவினால் நிறுவனங்கள் முடங்கியிருந்தால், அவர்களுக்கு 1 வருடம் திவால் நடவடிக்கையிலிருந்து தளர்வு அளிக்கப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களில் அனுமதி

பொதுத்துறை நிறுவனங்களில் அனுமதி

இனி பொதுத்துறை நிறுவனங்களில் தனியாருக்கு அனுமத கொடுக்கப்படும். இதில் சில பொதுத்துறை நிறுவனங்கள் தவிர, பல நிறுவனங்ளில் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது. இதன் மூலம் முதலீடு அதிகரிக்க முடியும் என்றும் அரசு நினைக்கிறது போலும்.

கடன் வரம்பு உயர்வு

கடன் வரம்பு உயர்வு

மாநிலங்களுக்கு கடன் வழங்கும் வரம்பு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்கு கூடுதலாம 4.28 லட்சம் கோடி ரூபாய் கடன் கிடைக்கும். அதோடு கடன் வழங்கும் வரம்பி அதிகரிக்கப்பட்டிருந்தாலும், அங்கீகரிக்கப்பட்ட வரம்பில் 14% கடனை மட்டுமே அவர்கள் பெற்றுள்ளனர் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வரிப் பங்கீடு

வரிப் பங்கீடு

வரிப் பங்கீடானது மாநில அரசுகளுக்கு முழுமையாக தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தும் மா நிலங்களுக்கு கூடுதல் நிதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்த, இதுவரையில் 11,092 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

யாருக்கு எவ்வளவு நிதி?

யாருக்கு எவ்வளவு நிதி?

வருவாய் நிதி பற்றாக்குறை நிதியாக மாநில அரசுகளுக்கு 12,390 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். முத்ரா கடன் திட்டங்களுக்கு 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உணவு பொருட்களுக்கு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்படியாக பல வகையான, பல துறைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirmala sitharaman last tranche of economic package highlights

Nirmala sitharaman last tranche of economic package highlights
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X