என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்.. யாருக்கு என்ன பயன்.. இதோ முக்கிய அறிவிப்புகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றார். இதில் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளையும் கொடுத்து வருகின்றார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு 1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம் தரப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அந்த வகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளில் ஒன்றாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிற்துறைகளை மீட்டெடுக்கும் விதமாக 1.1 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

நிறுவனங்களுக்கு பெரும் நிவாரணம்

நிறுவனங்களுக்கு பெரும் நிவாரணம்

இது கொரோனாவினால் துவண்டு போன நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கலாம். ஏனெனில் முதல் கட்ட அலையிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், இரண்டாம் கட்ட பரவலின் போதும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. போதிய மூலதனமின்மையால் பல நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்துள்ளன. இப்படி ஒரு நிலையில் அரசின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய நிறுவனமாக அமையலாம்.

சுற்றுலா துறைக்கு மிக பெரிய ரீலிப்

சுற்றுலா துறைக்கு மிக பெரிய ரீலிப்

சுற்றுலா துறையினை ஊக்குவிக்கும் வகையில், 5 லட்சம் வெளி நாட்டு பயணிகளுக்கு இலவச விசா அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒருவர் ஒரு முறை மட்டுமே இந்த சலுகையினை பெற முடியும். இந்த இலவச விசா சேவையானது மார்ச் 31, 2022 வரை நடைமுறையில் இருக்கும். அல்லது 5 லட்சம் விசாக்கள் வழங்கப்படும் வரையில் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிராவல் துறைக்கும் சலுகை

டிராவல் துறைக்கும் சலுகை

மேலும் 11,000 பதிவு செய்யப்பட்ட சுற்றுலா துறை கைய்டுகளுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கூடுதலாக டிராவல் துறைக்கு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் அரசு 100% உத்தரவாதத்தினை வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறைக்கு என்ன அறிவிப்பு

சுகாதார துறைக்கு என்ன அறிவிப்பு

சுகாதாரத்துறையின் உள்கட்டமைப்புக்காக 50,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார்.

இது தவிர பொது சுகாதார துறையில் 23,220 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுகாதார துறையில் இன்னொரு படி மேம்படுத்த உதவும்.

இது தவிர சுகாதார துறையை மேம்படுத்தும் வகையில், மருத்துவ துறையில் விரிவாக்கம், புதிய திட்டங்களுக்கும் உத்தரவாத திட்டம் ப்ரௌந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8 பெரு நகரங்கள் தவிர, மற்ற நகர்புறங்களிலும் புதிய சுகாதார திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

Array

Array

சுகாதார துறையில் உத்தரவாத திட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதில் விரிவாக்கத்திற்கு 50%, 75% புதிய திட்டங்களுக்கும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல ஹெல்த் துறைக்கு அதிகபட்ச கடன் என்பது 100 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என்றும், இதற்கு அதிகபட்ச வட்டி விகிதம் 7.95% ஆகவும் இருக்கும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதே மற்ற துறைகளுக்கு 8.25% ஆக வட்டி விகிதம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

25 லட்சம் பேர் வரை பயன்

25 லட்சம் பேர் வரை பயன்

25 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் கடன் உத்திரவாத திட்டத்தினை மத்திய நிதியமைச்சர் இன்று அறிவித்தார். அதாவது 1.25 ரூபாய் வரையில் கடன் பெறுவோருக்கு அரசு உத்தரவாதம் கொடுக்கும் என்றும், இதன் மூலம் 25 பேர் வரை பயனடையலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த கடனுக்கான வட்டி விகிதமும் MCLR விகிதத்தில் இருந்து 2% கூடுதலாக இருக்கம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை வருடங்களுக்கு இந்த உத்தரவாதம்

எத்தனை வருடங்களுக்கு இந்த உத்தரவாதம்

MFIs/NBFC-MFIs மூலம் வழங்கப்படும் நிதிக்கு மார்ச் 30,2022 வரையில் உத்தரவாதக் அளிக்கப்படும் அல்லது 7500 கோடி ரூபாய் வரையில் நிதி அளிக்கப்படும் வகையில் இந்த உத்தரவாதம் அளிக்கப்படும்.

ஆத்ம நிர்பார் பாரத் ரோஜர் திட்டம் விளக்கம்

ஆத்ம நிர்பார் பாரத் ரோஜர் திட்டம் விளக்கம்

ஆத்ம நிர்பார் பாரத் ரோஜர் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதன்படி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கப்படும். இந்த மானியம் ஓய்வூதியப் பங்களிப்பில் பணியாளர்களுக்கும், வேலை வழங்கும் நிறுவனங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதன்படி இபிஎப்ஓ திட்டத்தில், பணியாளர்கள் பங்களிப்பாக 12%, நிறுவனத்தின் பங்களிப்பாக 12% என 24% 2 ஆண்டுகளுக்கு நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும்.

ஆத்மா நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டம் நீட்டிப்பு

ஆத்மா நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டம் நீட்டிப்பு

ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ், இபிஎப்ஓ -வில் பதிவு செய்த நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணிக்கு எடுத்தால் மட்டும் இந்தச் சலுகை பெற முடியும். இந்த திட்டத்தில் சேரும் ஊழியர்களின் மாத சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். கொரோனா காலத்தில் மார்ச் 1க்கு பின்பாக வேலையிழந்தவர்கள் அல்லது அக்டோபர் 1-க்கு முன் வேலை பெற்றிருத்தல் அவசியம்.

பல லட்சம் பேர் ரோஜ்கர் திட்டத்தின் மூலம் பயன்

பல லட்சம் பேர் ரோஜ்கர் திட்டத்தின் மூலம் பயன்

இவர்களின் சம்பளமும் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 2 ஊழியர்களையும், அதிகபட்சமாக 50 ஊழியர்களையும் சேர்க்க முடியும். இந்த திட்டம் 2021 ஜூன் 30ம் தேதி வரை அமலில் இருந்த நிலையில், தற்போது மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 902 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ள நிலையில், 21.42 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

Array

Array


விவசாயத்துறையினை ஊக்குவிக்கும் வகையில் டிஏபி மற்றும் பி&கே உரங்களுக்கு கூதலாக மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 14,775 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் டிஏபி உரத்திற்கு 9,125 கோடி ரூபாயும், NPK அடிப்படையிலான காம்பிளாக்ஸ் உரங்களுக்கு 5,650 கோடி ரூபாய் மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

கோதுமை கொள்முதல்

கோதுமை கொள்முதல்

கோதுமை கொள்முதல் ராபி பருவத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 389.92 லட்சம் கோடி MT கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நடப்பு ராபி பருவத்தில் இதுவரையில் 432.48 லட்சம் கோடி MT டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

பிஎம் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நீட்டிப்பு

பிஎம் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நீட்டிப்பு

பிஎம்மின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கால அவகாசம் நவம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் இந்த திட்டத்திற்காக அரசு 1.33 லட்சம் கோடி ரூபாய் செலவினை ஒதுக்கியது. இந்த் ஆண்டு 93,869 கோடி ரூபாய் செலவாகலாம் என அறிவித்துள்ளது.

லாக்டவுனை கருத்தில் கொண்டு மோசமான சூழ் நிலைகளையும் கருத்தில் கொண்டு, அரசு இந்த திட்டத்தின் கீழ் உணவு தானியங்களை வழங்கும் திட்டமாகும்.

குழந்தைகளுக்கு என்ன சலுகை

குழந்தைகளுக்கு என்ன சலுகை

அரசு சுகாதார துறைக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், 23,220 கோடி ரூபாய் நிதியினை கூடுதலாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஐசியூ படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த திட்டம் அவசரகால தயார் நிலை குறித்து கவனம் செலுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு எவ்வளவு நிதி

கடந்த ஆண்டு எவ்வளவு நிதி

கடந்த ஆண்டில் சுகாதார துறைக்கு அவசர கால சுகாதார திட்டம் சம்பந்தமான 15,000 கோடி ரூபாயினை ஒதுக்கியது. இது 25 மடங்கு கோவிட் மருத்துவமனைகளை அதிகரிக்க வழிவகுத்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியினை ஊக்குவிக்க

ஏற்றுமதியினை ஊக்குவிக்க

நேஷனல் எக்ஸ்போர்ட் இன்சூரன்ஸ் அக்கவுண்டிற்கு (NEIA) 5 ஆண்டுகளுக்கு கூடுதலாக கார்பஸினை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 33,000 கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. 63 வெவ்வேறு இந்திய புராஜக்ட் மூலம், 52 நாடுகளில் 52,860 கோடி ரூபாய் மதிப்பிலான 211 திட்டங்களுக்கு, கடந்த மார்ச் 31, 2021 வரையில் NEIA ஆதரவளித்துள்ளது.

பிராட்பேண்ட் சேவை

பிராட்பேண்ட் சேவை

2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில், 1.56 லட்சம் பிராட்பேண்ட் இணைப்பு தற்போது உள்ளது. பாரத் நெட் பிபிபி மாடலை அமல்படுத்த அரசு 19,041 கோடி ரூபாயினை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட் தொகை உட்பட மொத்த செலவினம் 61,109 கோடி ரூபாயாக இருக்கும்.

மின்னணு உற்பத்தி பிஎல்ஐ திட்டம்

மின்னணு உற்பத்தி பிஎல்ஐ திட்டம்

பெரிய அளவிலான மின்னணு உற்பத்தி உற்பத்திகான பிஎல்ஐ திட்டத்தின் கால அவகாசத்தினை நீட்டித்துள்ளது. 2020 - 21ல் தொடங்கப்பட்ட திட்டத்தின் காலம் 2025 - 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மின்சார துறையில் சீர்திருத்தத்திற்காக 3.03 லட்சம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. 25 கோடி ஸ்மார்ட் மீட்டர், 10,000 ஃபீடர்கள் உள்ளிட்ட விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

nirmala sitharaman press conference highlights, some major announces 8 major economic reliefs

coronavirus relief packages updatess.. nirmala sitharaman press conference highlights, some major announces 8 major economic reliefs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X