ப சிதம்பரத்துக்கு பொளேர் பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஒரு கட்சியினரின் கருத்துக்கு இன்னொரு கட்சியினர் பதில் சொல்வது பதிலடி கொடுப்பது எல்லாம் அரசியலில் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம் தான்.

 

அந்த கலாச்சாரத்தின் வழியாக இன்று வரை அரசியல் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் பதில் (அடி) கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

அப்படி, சமீபத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் சொன்ன கருத்துக்கு, இன்னாள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

கூகுள் எனக்கு வேண்டாம்.. பதவி விலகிய மூத்த அதிகாரி.. காரணத்தை கேட்டா அசந்து போவீங்க..!கூகுள் எனக்கு வேண்டாம்.. பதவி விலகிய மூத்த அதிகாரி.. காரணத்தை கேட்டா அசந்து போவீங்க..!

ப சிதம்பரம் கருத்து

ப சிதம்பரம் கருத்து

சமீபத்தில் "இந்தியாவின் பொருளாதாரம் சீர் குலையும் அளவுக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் ஒரு நோயாளி என்றால், அந்த நோயாளியை திறமை இல்லாத மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டு இருக்கிறார்" என நிர்மலா சீதாராமனை நேரடியாக விமர்சித்தார் ப சிதம்பரம்.

நிதிப் பற்றாக்குறை

நிதிப் பற்றாக்குறை

2019 - 20 நிதி ஆண்டுக்கு நிர்மலா சீதாராமன் போட்ட முதல் பட்ஜெட்டில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) 3.3 சதவிகிதமாக இருக்கும் என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தற்போது வெளியான 2020 - 21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், 2019 - 20 நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 3.8 சதவிகிதமாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டு இருக்கிறது.

விமர்சனம்
 

விமர்சனம்

இப்படி 2019- 20 நிதி ஆண்டுக்கு, முன்பே குறிப்பிட்ட அளவை விட, தற்போது கூடுதலாக நிதிப் பற்றாக்குறை அதிகரித்து இருப்பதைக் குறிப்பிட்டு தான் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம், நிர்மலா சீதாராமனை விமர்சித்தார். அந்த விமர்சனத்துக்கு தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

Primary deficit

Primary deficit


நிர்மலா சீதாராமனின் பதிலடியைப் பார்ப்பதற்கு முன், முதலில் பிரைமரி பற்றாக்குறை என்றால் என்ன என்பதைப் பார்த்து விடுவோம்.
Primary Deficit = Fiscal deficit - Interest payments.
உதாரணம்: மத்திய அரசின் மொத்த செலவு 100 ரூபாய் (90 ரூபாய் மற்ற செலவுகள் + 10 ரூபாய் வட்டிச் செலவுகள்) - மொத்த வருவாய் 80 ரூபாய் = 20 ரூபாய் தான் Fiscal deficit.
இந்த 20 ரூபாய் Fiscal deficit-ல் இருந்து, 10 ரூபாய் வட்டிச் செலவுகளைக் கழித்தால், மீதி இருக்கும் 10 ரூபாய் தான் primary deficit.

காங்கிரஸ் காலத்தில்

காங்கிரஸ் காலத்தில்

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு முறை கூட, மத்திய அரசின் பிரைமரி பற்றாக்குறை, இந்தியாவின் மொத்த ஜிடிபியில் ஒரு சதவிகிதத்துக்குள் வந்ததில்லை. ஆனால் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாங்கள் ஒரு சதவிகிதத்தின் கீழ் கொண்டு வந்து இருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

கடினமான உண்மை

கடினமான உண்மை

மேலும் பேசிய நிர்மலா சீதாராமன் "சில கடினமான உண்மைகளை நீங்கள் கேட்க வேண்டும். 2008 - 09 நிதி ஆண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 6.1%. அடுத்த 2009 - 10 நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 6.6 சதவிகிதமாக அதிகரித்தது" எனச் சொன்னார்.

திறமையான மருத்துவர்

திறமையான மருத்துவர்

மேலும் பேசியவர் "அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில்
2010 - 11-ல் 4.9%
2011 - 12-ல் 5.9%
2012 - 13-ல் 4.9%
2013 - 14-ல் 4.5% என காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், திறமையான மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது, தொடர்ந்து நிதிப் பற்றாக்குறை அதிகமாகத் தான் இருந்து இருக்கிறது" என கடுமையாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும் போது மோடி ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து நிதிப் பற்றாக்குறை குறைந்து கொண்டே வந்து இருக்கிறது. இந்தியாவின் ஜிடிபி உடன் ஒப்பிட்டால், இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை மோடி ஆட்சியில்
2014 - 15-ல் 4.1%
2015 - 16-ல் 3.9%
2016 - 17-ல் 3.5%
2017 - 18-ல் 3.4%
2018 - 19-ல் 3.4% என குறைந்து கொண்டே வருவதாகச் சொல்லி இருக்கிறார். இதற்கு ப சிதம்பரம் என்ன பதிலடி கொடுக்க இருக்கிறார். என்ன கிடிக்கிப் பிடி கேள்வி எழுப்புவார் எனத் தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirmala sitharaman replied to p chidambaram about fiscal deficit

Current Central finance minister Nirmala sitharaman replied to former central finance minister p chidambaram about fiscal deficit.
Story first published: Tuesday, February 11, 2020, 16:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X