பொருளாதாரத்தை மேம்படுத்த வேக்சின் தான் மருந்து.. நிர்மலா சீதாராமன் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் வேலைவாய்ப்பு, வர்த்தகம் ஆகிய அனைத்தும் பாதிப்பு அடைந்து வருகிறது.

குறிப்பாக இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் வளர்ச்சி அடைய மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

நவம்பர்-க்குள் 10,000 கோடி ரூபாய் பட்டுவாடா.. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..! நவம்பர்-க்குள் 10,000 கோடி ரூபாய் பட்டுவாடா.. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..!

இந்நிலையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நாட்டின் வர்த்தக சந்தை குறித்தும், வேக்சின் முக்கியதுவத்தை குறித்தும் முக்கியமான ஒரு அறிவிப்பை கூறியுள்ளார்.

தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க்

தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க்

தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க்-ன் 100 ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கலந்துக்கொண்டார். தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் ஐபிஓ வெளியிட திட்டமிட்டு சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது.

மக்களுக்கு வேக்சின்

மக்களுக்கு வேக்சின்

இவ்வங்கியின் வர்த்தகம் வங்கித்துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்யவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இவ்விழாவில் பேசி மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் இந்தியாவில் தற்போது மக்களுக்கு வேக்சின் அளிக்கும் திட்டம் மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது, வழக்கத்தை விடவும் அதிகமான வேக்சின் அனைவருக்கும் அளிக்கப்பட்டு வரும் காரணத்தால் அதிகளவிலானோர் கொரோனாவுக்கு எதிரான வேக்சின் பாதுகாப்பை பெற்று வருகின்றனர்.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

இந்நிலையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் இவ்விழாவில் இந்தியாவில் தற்போது 73 கோடி பேர் வேக்சின் பாதுகாப்பு பெற்றுள்ளனர். மக்கள் வர்த்தகம் செய்யவும், பொருட்களை வாங்கவும், வர்த்தகத்தை மேம்படுத்த என அனைத்து பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைக்கும் வேக்சின் பாதுகாப்பு அடித்தளமாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வேக்சின்

தமிழ்நாட்டில் வேக்சின்

இதேவேளையில் தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட 40,000க்கும் அதிகமான வேக்சின் கேம்ப் மூலம் சுமார் 20 லட்சம் மக்களுக்கு வேக்சின் அளிக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் அதிகளவிலானோருக்கு வேக்சின் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று எண்ணிக்கை

கொரோனா தொற்று எண்ணிக்கை

ஜூலை மாதம் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு அதிகளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் இதேவேளையில் மக்களுக்குப் போதுமான வேக்சின் பாதுகாப்பு அளிக்கப்படாத காரணத்தால் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வேலைவாய்ப்பு இழப்பு

வேலைவாய்ப்பு இழப்பு

இதன் எதிரொலியாக ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக வேலைவாய்ப்பை இழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வேலைவாய்ப்பின்மை அளவீடு

வேலைவாய்ப்பின்மை அளவீடு

ஆகஸ்ட் மாதம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை 8.3 சதவீதம் அதிகரித்த நிலையில், வேவைவாய்ப்பு விகிதம் 37.5 சதவீதத்தில் இருந்து 37.2 சதவீதமாகக் குறைந்தது. இதுமட்டும் அல்லாமல் வேலைவாய்ப்பில் இருப்போர் எண்ணிக்கை 399.7 மில்லியனில் இருந்து 397.8 மில்லியனாகக் குறைந்துள்ளது என CMIE தரவுகள் கூறுகிறது.

பண்டிகை கால விற்பனை

பண்டிகை கால விற்பனை

நாட்டின் அனைத்து நிறுவனங்களும் விழாகால வர்த்தகத்திற்கு தயாராகி வரும் நிலையில், வேக்சின் விநியோகம் அதிகரித்துள்ளது நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார சந்தைக்கு பெரும் உந்து சக்தியாக இருக்கும் என நம்பப்படுகிறது. முதல் தொற்று அலையில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீள மிக முக்கியமாக இருந்தது இந்த பண்டிகை கால விற்பனை தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirmala Sitharaman Says Covid19 vaccine is the best medicine to boost economy

Nirmala Sitharaman Says Covid19 vaccine is the best medicine to boost economy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X