வாவ் இது அசத்தல் தான்..பிணை இல்லா கடன்.. சிறு குறு தொழில் முனைவோருக்கு சலுகை.. இன்னும் என்ன சலுகை?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தினை ஊக்குவிக்க பிரதமர் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் வகுக்கப்பட்டதாக கடந்த செவ்வாய்கிழமையன்று கூறினார்.

Recommended Video

சிறு குறு தொழில் முனைவோருக்கு சலுகை.. இன்னும் என்ன சலுகை?

இந்த நிலையில் தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வரும் நிர்மலா சீதாராமன், அதனை பற்றிய வியவரங்களை அளித்து வருகிறார்.

இந்தியா சுயபலத்துடன் செயல்படும் நோக்கிலேயே சுயசார்பு உற்பத்தியை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். உள்ளூர் தயாரிப்புகளை சர்வதேச விற்பனை பொருட்களாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம். பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சுயசார்பு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் பொருளாதாரம், மக்கள் வளம் கட்டமைப்பு தொழில் நுட்பம் மற்றும் தேவை -சப்ளை உள்ளிட்ட ஐந்து முக்கிய தூண்களின் அடிப்படையில் தான் இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

சுயசார்பு பாரதம் என்றால் என்ன?

சுயசார்பு பாரதம் என்றால் என்ன?

மேலும் 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் சுய சார்பு பாரதம் என்ற பெயரில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சுய சார்பு பாரதம் என்பது பிற உலக நாடுகளில் இருந்து இந்தியாவினை துண்டிப்பது என்பதல்ல என்றும் நிர்மலா சீதாராமன் விளக்கம் கொடுத்துள்ளார். அதோடு ஊரடங்கினால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு உணர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

சிறு குறு தொழில் முனைவோருக்கு சலுகை

சிறு குறு தொழில் முனைவோருக்கு சலுகை

குறிப்பாக சிறு குறு தொழில் முனைவோருக்கு வங்கிகளில் அடமானமாக சொத்துகள் எதையும் காட்டத் தேவை இல்லை. இதற்காக மூன்று லட்சன்ம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு பெரிய அறிவிப்பினைக் கொடுத்துள்ளார். இது நிச்சயம் சாமானிய மக்களுக்கு உதவும் ஒரு திட்டமாகவே இருக்கும்.

கடன் உதவி

கடன் உதவி

அதுமட்டும் அல்ல நெருக்கடியில் உள்ள சிறு குறு நிறுவனன்ங்களுக்கு சிறப்பு கடன் உதவி. இதற்கு 20,000 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 2 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் பயன் அடையும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் உத்தரவாதம்

கடன் உத்தரவாதம்

வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு கடன் வழங்க அரசே உத்தரவாதம் தரும் என்றும் கூறியுள்ளார். இப்படி சாமனியர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அடுத்தடுத்த கட்டுரைகளியல் பார்ப்போம் வாருங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirmala Sitharaman speech about mass economic package

Nirmala Sitharaman speech about mass economic package
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X