சாமானியர்களுக்கு என்ன சலுகை.. நிதியமைச்சர் என்ன சொல்கிறார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடிக்கான சலுகைகள் புதன் கிழமையன்று அறிவித்தார். அதில் எதிர்பார்க்கப்பட்டதைப் போல விவசாயிகளுக்கு சலுகை அறிவிக்கப்படவில்லை.

 

இந்த நிலையில் தற்போது சில திட்டங்களை அறிவித்து வருகிறார்.

விவசாயம், சுய உதவிக் குழுக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பலருக்கும் சலுகைகள் என்னென்ன என்று அறிவித்து வருகிறார்.

இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. சாலையோர வியாபாரிகளுக்கு கடன்..ரூ.5000 கோடி மதிப்பில் சிறப்பு நிதியுதவி!

விவசாய கடன் அட்டை

விவசாய கடன் அட்டை

கடந்த இரு மாதங்களில் 15 லட்சம் விவசாயக் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும். அவர்களுக்கு 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு கடன் பெறும் விவசாயிகளுக்கு 3 மாத தவணை செலுத்த தேவை இல்லை எனவும் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு 86,600 கோடி ரூபாய் கடன் கடந்த 2 மாதங்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு என்ன உதவி?

விவசாயிகளுக்கு என்ன உதவி?

மேலும் வேளாண் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காக மாநில அரசுகளுக்கு இந்த ஆண்டின் மார்ச் மாதம் முதல் இதுவரையில் ரூ.6,700 கோடி மூலதன உதவி வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் 4,200 கோ ரூபாய் கடனுதவி மாநிலங்களுக்கு இந்த மார்ச் மாதத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நபார்டு வங்கியால் கூட்டுறவு வங்கிகளுக்கும், இதர பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கும் 29,500 கோடி ரூபாய் மறு மூலதனம் வழங்கப்பட்டுள்ளது.

புலம் பெயர் மக்களுக்கு உதவி
 

புலம் பெயர் மக்களுக்கு உதவி

மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் இடம் கொடுக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதோடு பேரிடர் நிதிகளை பயன்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதித்துள்ளது.

சுய உதவிக் குழுக்களுக்கு என்ன?

சுய உதவிக் குழுக்களுக்கு என்ன?

கொரோனா காலத்தில் சுய உதவிக் குழுக்கள் சார்பாக முகக் கவசங்கள் சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. 3 கோடி முகக்கவசங்கள் மற்றும் 1.20 லட்சம் லிட்டர் சானிடைசர்கள் தயாரித்து வழங்கியுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு மத்திய அரசு உதவியுள்ளது. இதன் மூலம் நகர்ப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் மார்ச் 15, 2020 முதல் 7,200 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirmala sitharaman to announce details of economic package 2.0 today

FM nirmala sitharaman said 25 lakh new Kisan credit card holders have been sanctioned loans worth Rs 25,000 crore: Sitharaman
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X