நிசானின் அதிரடி திட்டம்.. ஜனவரியில் கார்களின் விலையை அதிகரிக்க ஆயத்தம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாகனத் துறையில் நிலவி வரும் மந்த நிலையினை போக்கவும், நஷ்டத்தில் உள்ள நிறுவனத்தினை லாபத்திற்கு கொண்டு வரவும், வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல துரித நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன.

எனினும் மறுபுறம் இதன் ஒரு பகுதியாக பல நிறுவனங்கள் வாகனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் மூலதன பொருட்களின் விலை அதிகரிப்பு, சம்பள செலவும் அதிகரிப்பு, விற்பனை சரிவு, சந்தைப்படுத்துதல் செலவினங்கள் அதிகரிப்பு என பல வகையிலும் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

நிசானின் அதிரடி திட்டம்.. ஜனவரியில் கார்களின் விலையை அதிகரிக்க ஆயத்தம்..!

இந்த நிலையில் நிசான் மோட்டார்ஸ் இந்தியா இதை சரிகட்டும் விதமாக வாகனங்களின் விலை 5 சதவிகிதம் வரை உயர்த்தலாம் என்றும் கூறப்படுகிறது. இது ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு உள்ளீட்டு மூலதன செலவினங்கள் அதிகரிப்பை, ஈடுகட்டும் விதமாக நிசான் மோட்டார் இந்தியா இப்படி முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த திருத்தப்பட்ட விலைகளானது நிசான் மற்றும் டாட்சனில் கிடைக்கக் கூடிய அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும் என்றும், இது ஜனவரி 2020 முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது வாகனத்துறையில் உள்ள மோசமான நிலைமைகளில், அதிகரித்துள்ள செலவினங்கள் காரணமான, நாங்கள் நிசான் மற்றும் டாட்சன் கார்களின் விலை இந்தியாவில் உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் நிசான் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நிசான் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வாடிக்கையாளர்களுக்கு 1.15 லட்சம் ரூபாய் வரை சலுகை அளித்துள்ளதாகவும், இது ரெட் வீக்கென்ட்ஸ் முயற்சியை மேற்கொண்டதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த ரெட் வீகென்ட்ஸ்ஸின் போது "Red Weekends", வாடிக்கையாளர்கள் 40,000 ரூபாய் வரை கவர்ச்சிகரமான ரொக்க தள்ளுபடிகள், 40,000 ரூபாய் வரை பரிமாற்ற தள்ளுபடிகள், இது தவிர 10,000 ரூபாய் கார்ப்பரேட் தள்ளுபடிகள் என பல தள்ளுபடிகளையும் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது நிசான். ஆக மொத்தம் 1.15 லட்சம் ரூபாய் வரை சலுகையை பெற்று வாடிக்கையாளர்கள் பயன் பெறலாம் என்றும் கூறியிருந்தது கவனிக்கதக்கது.

இது தவிர இந்த டிசம்பர் மாதம் முழுவதும் நிசான் டீலர்ஷிப்கள் பல சலுகைகளை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nissan to increase prices up to 5 percent in January

Nissan motor India may increase prices up to 5 percent in January. Due to high input cost and large expenses.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X