நிசான் மோட்டார்ஸூக்கு கல்தா கொடுத்த மூத்த அதிகாரி.. கதறும் நிர்வாகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜப்பானின் பிரபல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் உலகம் முழுவதும் உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் மூன்றாவது பெரிய அதிகாரி ஒருவர், ஒரு முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனத்தில் சேருவதற்காக நிசானிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த அறிவிப்பானது ஒரு திடீர் அறிவிப்பு என்றும் கூறப்படுகிறது. மேலும் ஊழல் பாதிப்புக்கு உள்ளான ஜப்பானிய கார் தயாரிப்பாளருக்கு, மற்றொரு மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.

இந்த பலத்த அடியை தாங்க முடியாத இந்த நிறுவனத்தின் பங்கு விலை 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

24 மடங்கு நஷ்டம் அதிகரிப்பு..! ஐயய்யோ கொடூர நஷ்டமா இருக்கே.. இனி கம்பெனி இருக்குமா..?

நிசானுக்கு பெரிய அடி

நிசானுக்கு பெரிய அடி

நிசான் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியான ஜூன் செகி, ஜப்பானின் மற்றொரு முக்கிய கார் உற்பத்தியாளரான நிடெக் கார்ப் நிறுவனத்தில் தலைவராகவும் சிஓஓவாகவும் செயல்பட இருக்கிறாராம். 58 வயதான இந்த பெரியவர் நிசானை விட்டு போவது, நிசானுக்கு பெரிய அடி என்றும் கூறப்படுகிறது. கடந்த அக்டோபரில் நிசானின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இவர், சீனா தலைவரான மாகோடோ உச்சிடாவிடம் தோற்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

டிசம்பரில் மட்டுமே பதவி வகிப்பேன்

டிசம்பரில் மட்டுமே பதவி வகிப்பேன்

தற்போது நிசானில் வகித்து வரும் பதவியை டிசம்பர் முழுக்க மட்டுமே வகிக்க விரும்புவதாக செகி தெரிவித்துள்ளார். நிசானின் முன்னாள் நீண்டகால தலைவரான கார்லோஸ் கோஸ்னை கடந்த ஆண்டு கைது செய்த அதிர்ச்சியிலிருந்து தற்போது தான் நிசான் மீளத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது ஜூன் செகியின் இந்த அறிவிப்பினால் நிசான் கதிகலங்கி போயுள்ளது என்றும் தான் கூற வேண்டும்.

கவனச் சிதறல்
 

கவனச் சிதறல்

ஏனெனில் ஏற்கனவே கார்லோஸ்ஸின் கைதுக்கு பின்னர் நிறுவனம் தற்போது தான் சந்தையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இந்த நிலையில் செகியின் அறிவிப்பு அந்த நிறுவனத்தின் கவனத்தை சிதறடிக்கும் விதமாகவே இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவெனில் இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ள ரெனால்ட் நிறுவனமும் சேர்ந்து தற்போது பதற்றமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பெரிய சவால் காத்திருக்கிறது?

பெரிய சவால் காத்திருக்கிறது?

நவம்பர் 2018ல் கார்லோஸ் கோஸ்னனின் கைதுக்கு பிறகு, நிசானின் நிர்வாகம் பெரிய அளவில் ஆட்டம் கண்டது என்றே கூறலாம். இந்த நிலையில் கோஸ்னனின் கைதுக்கு அவரது வாரிசாக இருந்த ஹிரோட்டோ சைகாவா இந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியிலிருந்து விலகினார். இப்படியொரு நிலையில் தற்போது செகி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, இந்த நிறுவனத்திற்கு மேலும் பிரச்சனையாகவே அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nissan top executive announces exit to join leading EV Company

Nissan’s 3rd highest ranked executive is planning to leave the company and plan to join leading japan electric motor Company.
Story first published: Thursday, December 26, 2019, 19:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X