கட்டணமில்லா மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. சேமிப்புக்கு 7% வட்டி.. பல சலுகைகளுடன் வருகிறது Niyo X..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாதரணமாக வங்கிகளில் சேமிப்பு கணக்கினை தொடங்க வங்கிகளுக்கு சென்று, குறைந்தபட்ச இருப்பு தொகையை செலுத்தி கணக்கினை தொடங்க வேண்டும். அப்படி செலுத்தப்படும் குறைந்தபட்ச இருப்பு தொகையானது சரியாக பராமரிக்காத பட்சத்தில், அதற்கும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

 

ஆனால் இனி உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம். சேமிப்பு கணக்கினை தொடங்க வங்கிகளை தேடி அலைய வேண்டாம். ஏனெனில் இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் நிறுவனமான நியோ, ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸூடன் இணைந்து நியோ எக்ஸ் (NiyoX) என்ற மொபைல் பேங்கிங் ஆப்சனை தொடங்கியுள்ளது. இந்த டிஜிட்டல் அக்கவுண்டினை இருவகையாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்று உங்களது ஆன்லைன் சேமிப்பு கணக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டாவது இதனை உங்களது வெல்த் மேனேஜ்மெண்ட் கணக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 கட்டணமில்லா மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. சேமிப்புக்கு 7% வட்டி.. பல சலுகைகளுடன் வருகிறது Niyo X..!

அதோடு இவ்வங்கி 007 என்ற சலுகையுடன் வருகிறது. அதாவது உங்களது பணத்தினை நேரடியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் கட்டணமில்லாமல், முதலீடு செய்து உங்களுக்காக வேலை செய்யும்படி செய்துவிடலாம், இரண்டாவது உங்களது ஆன்லைன் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் எந்த கட்டணமும் இல்லை. இந்த சேமிப்பு கணக்கில் மூலம் செய்யப்படும் செய்யப்படும் சேமிப்புகளுக்கு 7% வட்டியும் கிடைக்கும்.

இது குறித்து நியோவின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வினய் பாக்ரி, இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் வங்கி ஸ்டார்டப், வாடிக்கையாளர்களின் அனுபவத்தை எளிதாக்குவதற்கும், மேம்படுத்துவதிலும் எங்கள் கவனம் உள்ளது.

நியோ எக்ஸ் வங்கி சேவையில் ஒரு டிஜிட்டல் மாற்றத்திற்கான ஒரு சான்றாகும். அதோடு ஈக்விடாஸ் உடனான எங்களது இணைப்பு மூலம் இந்த சேவையை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் சிறந்த முதலீட்டு கணக்காவும், சேமிப்பு கணக்காகவும் வழங்குவோம் என வினய் கூறியுள்ளார்.

நியோ எக்ஸ் அறிமுகத்திற்கு முன்னதாக, நியோ நாடு தழுவிய அளவில் 8,000 பேரிடம் நடத்திய ஆய்வில், 70% பேர் டிஜிட்டல் வங்கிகளை நாடியிருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக கொரோனாவிற்கு பின்பு இது இன்னும் வலுத்துள்ளது. ஆக வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகக்கூடிய விதமாக நியோ எக்ஸ் வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் அவர்களது முதலீட்டினையும் நிர்வகிக்க உடனடி சேமிப்பு கணக்கினை திறக்க நியோ எக்ஸ் வழிவகுக்கிறது.

 

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது முதலீடுகளையும் கண்கானிக்க முடியும். சேமிப்புகளையும் கண்கானிக்க முடியும். ஆக இப்படி பலவசதிகளை கொண்ட நியோ எக்ஸ் விரைவில் இந்தியாவிலும், சர்வதேச நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதோடு நியோ எக்ஸ் விசா பிளாட்டினம் டெபிட் கார்டு வசதியுடனும் வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மக்களின் வேகமான வாழ்க்கை முறைக்கு மத்தியில், நியோ எக்ஸ் மிக பயனுள்ளதாக இருக்கும். நியோ 2021ம் ஆண்டின் இறுதிக்குள் 2 மில்லியன் வாடிக்கையாளர்களை நோக்கமாக கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Niyo to launch with Niyo X in partnership with equitas small finance bank

Niyo to launch with Niyo X in partnership with equitas small finance bank
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X