எனக்கு வேறு வழியில்லை.. ஊழியர்களிடம் மன்னிப்பு கோரிய அன்அகாடமி CEO.. ஏன் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய காலமாக இந்தியாவில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. இதனால் பல ஆயிரம் ஊழியர்களும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.

 

உலகளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு எதிராக பல்வேறு டெக் ஜாம்பவான்கள் அதன் தாக்கத்தினை உணர ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாக பல நிறுவனங்களும் செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் முதல் நடவடிக்கையாய் பணியமர்த்தல் முடக்கம், பணி நீக்கம் என பல காரணிகளுக்கு மத்தியில், டெக் துறையானது இருந்து வருகின்றது. இது ஸ்டார்ட் அப்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்த தொடங்கியுள்ளன. பல எட்டெக் நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

10% பணி நீக்கம்

10% பணி நீக்கம்

சாப்ட்பேங்க் ஆதரவுடைய எட்டெக் நிறுவனமான அன்அகடாமி அதன் ஊழியர்களில் சுமார் 10% பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இது அதன் மாத இழப்பீட்டினை குறைக்க எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் நடப்பு ஆண்டில் எடுத்த இரண்டாவது கடினமான நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

செலவு குறைப்பு நடவடிக்கை

செலவு குறைப்பு நடவடிக்கை


இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து நிறுவனம் நஷ்டத்தினை கண்டு வரும் நிலையில், இத்தகைய செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்கிடையில் அதன் முக்கிய செலவு குறைப்பு நடவடிக்கையாக, பணி நீக்க நடவடிக்கையினையும் கையில் எடுத்துள்ளது.

 கடினமான முடிவை எடுக்கணும்
 

கடினமான முடிவை எடுக்கணும்

அன்அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரியான கெளரவ் முன்ஜால் கூறுகையில், நிறுவனம் அதன் மிக திறமையான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதில் வருத்தமாக இருப்பதாக கூறினார்.

நிறுவனம் ஊழியர்களை குறைக்க அல்லது மூடுவதற்கு கடினமான முடிவை எடுக்க வேண்டும்.

48 மணி நேரத்திற்குள்

48 மணி நேரத்திற்குள்

குழுவில் உள்ள சுமார் 10% அன்அகடாமி ஊழியர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்கள். நீங்கள் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருந்தால் 48 மணி நேரத்திற்குள் ஹெச் ஆரிடம் இருந்து தகவலை பெறுவீர்கள் என நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரலில் 600 பேர் பணி நீக்கம்

ஏப்ரலில் 600 பேர் பணி நீக்கம்

இந்த ஆண்டு ஏப்ரலில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்த யூனிகார்ன் நிறுவனம், கிட்டதட்ட 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அந்த சமயத்தில் பெரும்பாலும் கல்வியாளர்கள், ஆசியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வெளியேறுமாறு கேட்டு கொள்ளப்பட்டார்கள். .

மந்த நிலையால் பாதிப்பு

மந்த நிலையால் பாதிப்பு

இந்த காலகட்டத்தில் பலரும் பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் மட்டும் இதற்கு புதியவர்கள் அல்ல, தொழில்நுட்ப சூழல் ஆனது மிகவும் கடினமான நேரத்தில் உள்ளது. மேற்கொண்டு பல காரணிகளும் மோசமாகி வருகின்றன. இதன் காரணமாக முதலீடுகள் சரிவினைக் கண்டுள்ளது.

மன்னித்து விடுங்கள்

மன்னித்து விடுங்கள்

இந்த காலக்கட்டத்தில் தான் நிறுவனமும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. இதற்கிடையில் தான் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிறுவனம் மன்னிப்பு கேட்கின்றது.

நாங்கள் போதிய நிதி கிடைக்காமல் தள்ளாடி வருகின்றோம். தற்போது ஆஃப் லைன் வணிகமானது மேம்படத் தொடங்கியுள்ளது. இதனால் இப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது. சந்தையில் நிலவி வரும் மந்த நிலையால் நாங்கள் இப்படியொரு கடினமான நடவடிக்கையை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்காக நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். என்று முஞ்சால் தெரிவித்துள்ளார்.

எளிதான முடிவல்ல

எளிதான முடிவல்ல

இப்படி ஒரு முடிவை எடுப்பது மிக எளிதானது அல்ல. இதற்கு நானே பொறுப்பேற்கிறேன். இதனை செய்வதற்கு வேறு எளிதான வழி எதுவும் இல்லை. இது நிச்சயமாக நான் விரும்பிய ஒன்று அல்ல. இந்த பணி நீக்கத்தின் மத்தியில் கூடுதலாக ஒரு வருடத்திற்கு மருத்துவ காப்பீட்டினையும், நோட்டீஸ் பிரீயர்டு காலத்திற்கு இணையான பேமெண்டினையும் வழங்கும் என தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No easy way to do this: Unacademy lay off 10% of its employees to reduce cost cut

Gaurav Munjal, CEO of unacademy, said the company was saddened to lay off its most talented employees. Making such a decision is not easy. I take responsibility for this
Story first published: Tuesday, November 8, 2022, 11:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X