சீனியர்-க்கு எல்லாம் இனி WFH கிடையாது.. இந்திய நிறுவனங்கள் திட்டவட்ட முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தற்போது பெரும்பாலான நிறுவனங்களில் வொர்க் ப்ரம் ஹோம் என்பது இயல்பான ஒன்றாக மாறியிருக்கிறது.

 

ஆனால் வர்த்தகச் சந்தையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம், போட்டி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்தும் விதமாகச் சீனியர் அதாவது உயர் பதவிகளில் இருக்கும் ஊழியர்களை அனைத்து நிறுவனத்திலும் அலுவலகத்திற்கு அழைத்து வருகிறது.

இந்த நிலையில் புதிதாகத் தேர்வு செய்யப்படும் ஊழியர்கள் முக்கியமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தந்தை மளிகை கடைக்காரர்.. மகனுக்கு 50 லட்சம் சம்பளம்.. மைக்ரோசாப்ட் கொடுத்த ஜாக்பாட்..!தந்தை மளிகை கடைக்காரர்.. மகனுக்கு 50 லட்சம் சம்பளம்.. மைக்ரோசாப்ட் கொடுத்த ஜாக்பாட்..!

வொர்க் ப்ரம் ஹோம் ஆப்ஷன்

வொர்க் ப்ரம் ஹோம் ஆப்ஷன்


இந்திய நிதியியல் சேவை சந்தையில் முன்னணி நிறுவனம் ஒன்று தற்போது தனது நிறுவனத்திற்காகத் தலைமை தொழில்நுட்ப அதிகாரியைத் தேர்வு செய்து வருகிறது. இந்தத் தேடலில் இறுதிக்கட்டம் வரை தேர்வான இருவர் வொர்க் ப்ரம் ஹோம் ஆப்ஷன் வேண்டும் எனக் கேட்டதால் இந்த நிறுவனம் அவர்களை நிராகரித்துள்ளது.

பணி ராஜினாமா

பணி ராஜினாமா

இந்திய நிறுவனங்களில் அதிகளவில் தற்போது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் துவங்கியுள்ள நிலையில், பலர் பணியை ராஜினாமா செய்து வரும் நிலையில் பலர் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்காகப் பணியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

உயர் பதவி
 

உயர் பதவி

இது ஆரம்பக்கட்ட ஊழியர்கள், நடுத்தரப் பதவிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு நிர்வாகம் ஏற்றுக்கொண்டாலும், உயர் பதவிகள் மற்றும் உயர்மட்ட நிர்வாகப் பதவிகளில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வருவதைக் கட்டாயமாக்கியுள்ளது.

 நிரந்தர வொர்க் பர்ம் ஹோம் சலுகை

நிரந்தர வொர்க் பர்ம் ஹோம் சலுகை

இதேபோல் புதிதாகப் பணியில் சேர்க்கப்படும் உயர் அதிகாரிகளுக்கு நிரந்தர வொர்க் பர்ம் ஹோம் சலுகை மறுக்கப்பட்டு வரும் காரணத்தால் இவர்களுக்கான வாய்ப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகிறது. எனவே இது தொடர்ந்து அடுத்தகட்ட பதவிகளில் இருப்பவர்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெசிஷன் அச்சம்

ரெசிஷன் அச்சம்

மேலும் முக்கியப் பொருளாதார நாடுகளில் ரெசிஷன் வரும் என்ற அச்சம் அதிகமாக இருக்கும் காரணத்தால் புதிய முதலீடுகள், புதிய திட்டங்கள் வருவது குறையும் நிலையில் புதிய வேலைவாய்ப்புகள் குறைவது மட்டும் அல்லாமல் சந்தையில் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளும் குறைக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே அனைத்துத் தரப்பு ஊழியர்களும் அனைத்து மாற்றங்களுக்கும் தயாராக இருக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

 சும்மா இருக்கும் ஸ்விம்மிங் பூல்-ஐ வைத்து 1 கோடி வருமானம்.. அட இது தெரியமா போச்சே..! சும்மா இருக்கும் ஸ்விம்மிங் பூல்-ஐ வைத்து 1 கோடி வருமானம்.. அட இது தெரியமா போச்சே..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No Work from home option for senior role employees; India companies took strong decision

No Work from home option for senior role employees; India companies took strong decision சீனியர்-க்கு எல்லாம் WFH கிடையாது.. இந்திய நிறுவனங்கள் திட்டவட்ட முடிவு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X