இந்தியாவுக்கு கிளம்பும் நேரம் வந்தாச்சு.. NRI டெக் ஊழியர்கள் கண்ணீர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் டெக் ஊழியர்கள் மிகவும் மோசமான காலகட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

 

ஒருபக்கம் அளவுக்கு அதிகமான பணிநீக்கம், மறுபுறம் புதிய வேலைவாய்ப்புகள் இல்லாமல் வேறு வேலையில் சேர முடியாமல் மாட்டிக்கொண்டு டெக் ஊழியர்கள் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

டாப் 4 டெக் நிறுவனங்கள்

டாப் 4 டெக் நிறுவனங்கள்

அதிலும் முக்கியமாக உலகின் டாப் 4 பெரிய டெக் நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டுத் துவங்கி 20 நாள் மட்டுமே ஆன நிலையில் அமேசான் 18000 ஊழியர்கள், மைக்ரோசாப்ட் 10000 ஊழியர்கள், கூகுள் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துப் பெரும் அதிர்ச்சி கொடுத்தது.

பேஸ்புக்

பேஸ்புக்

2022ல் பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, அமேசான் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

NRI டெக் ஊழியர்கள்

NRI டெக் ஊழியர்கள்

இந்த நிலையில் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட NRI-கள் இந்தியாவுக்குத் திரும்பி வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

மெட்டா ஊழியர்
 

மெட்டா ஊழியர்

பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 2022 ஆம் ஆண்டு இறுதியில் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், வேறு வேலைவாய்ப்புக்கு மாற முடியாத பல இந்தியர்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்து இந்தியா வந்துள்ளனர்.

10000 ஊழியர்கள்

10000 ஊழியர்கள்

FAANG நிறுவனங்கள் சராசரியாக 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இது நிறுவனத்தின் வழக்கமான செயல்பாட்டிற்கு எந்த இடையூறும் இல்லாமல் செயல்படுகிறது, இதனால் நாம் அனைவரும் எவ்வளவு தேவையற்றவர்களாக இருக்கிறோம் எனத் தோன்ற வைக்கிறது எனப் பதிவிட்டு உள்ளார்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இந்தப் பணிநீக்கம் மூலம் வெளிநாட்டில் இருக்கும் இந்திய ஊழியர்களுக்கு எந்த அளவுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது என்பது நான் விவரிக்கத் தேவையில்லை. இதேவேளையில் இந்தியாவில் டெக் துறை மிகவும் சிறப்பாக உள்ளது.

இந்திய ஸ்டார்ட்அப்

இந்திய ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல புதிய சவால்களை இணைந்து எதிர்கொண்டு புதுப் புதுச் சொல்யூஷன்களை மக்களுக்கு அளித்து வருகின்றனர். இந்தியா செல்ல இதுதான் சரியான நேரம் எனப் பதிவிட்டு உள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்

வெளிநாட்டு ஊழியர்

மேலும் தற்போது அமெரிக்காவிலோ அல்லது பிரிட்டனிலோ இருக்கும் வெளிநாட்டு ஊழியர் பணிநீக்கம் செய்யப்படாவிட்டாலும், கூடுதல் பணி சுமை, வேலையை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நெருக்கடி, அடுத்த அப்ரைசல் ரேட்டிங் என மன அழுத்தத்தின் உச்சத்தில் தான் இருப்பார்கள்.

 சவாலான வேலைவாய்ப்பு

சவாலான வேலைவாய்ப்பு

இந்த நிலையில் இந்தியாவுக்கு சென்று நமக்கு ஏற்ற சவாலான வேலைவாய்ப்பைத் தேர்வு செய்து பணியாற்றுவது மேல் என BLIND தளத்தில் இந்த மெட்டா ஊழியர் பதவிட்டு உள்ளார். அடுத்த சில நாடுகளில் பிற நிறுவன ஊழியரும் இத்தகைய பதிவைச் செய்யலாம்.

 ஹெச்1பி மற்றும் எல்1 விசா

ஹெச்1பி மற்றும் எல்1 விசா

அமெரிக்காவை பொறுத்த வரையில் பெரும்பாலான இந்திய டெக் ஊழியர்கள் ஹெச்1பி மற்றும் எல்1 விசாவில் பணியாற்றி வரும் நிலையில் இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால் 60 நாட்களுக்குள் புதிய வேலைவாய்ப்பைத் தேடிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் உருவாகும். இது NRI டெக் ஊழியர்களுக்கு கூடுதல் நெருக்கடியாகும்.

Blind தளம்

Blind தளம்

லின்கிடுஇன் எப்படியோ அதேபோலத் தான் Blind, ஆனால் இந்த தளத்தில் செய்யப்படும் பதிவுகளை யார் செய்கிறார்கள் என்பது தெரியாது. இதேபோல் இத்தளத்தில் சேருவோர் நிறுவன மின்னஞ்சல் வாயிலாக தான் சேர முடியும். இதனால் போலியான நபர்கள் உள்ளே வர முடியாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NRI tech employees think its Time to go back India? Meta employee post on BLIND

NRI tech employees think its Time to go back India? Meta employee post on BLIND
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X