இந்தியாவின் மிகப்பெரிய பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் ஈகாமர்ஸ் தளமான நைகா நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான அரவிந்த் அகர்வால் நவம்பர் 25 அன்று நிறுவனத்தை விட்டு வெளியேற உள்ளதாக நைகா பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நைகா நிறுவனத்தில் இருந்து வெளியேறும் அரவிந்த் அகர்வால் டிஜிட்டல் மற்றும் ஸ்டார்ட்-அ பிரிவில் புதிய முயற்சிகளைத் தொடர உள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நைகா
நைகா நிறுவனத்தின் ஐபிஓ-வுக்கு முன்பு முதலீடு செய்ய முதலீட்டாளர்களின் ஒரு வருட லாக்-இன் காலம் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் Nykaa பிராண்டின் உரிமையாளரான FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸின் பங்குகள் இன்று 5 சதவீதம் வரை சரிந்தன.

லாக்-இன் காலம்
லாக்-இன் காலம் காலாவதியான பிறகு பங்குகள் பெரும்பாலும் வீழ்ச்சியடைவது வழக்கம் தான், ஏனெனில் முதலீட்டாளர் ஐபிஓ போது விரும்பி வாங்கிய பங்குகள் சரிவை சந்திக்கும் போது லாக்இந் காலம் முடிவடையும் போது விற்பனை செய்வாார்கள். அப்போது இந்த விற்பனை மூலம் பங்குகளின் விலை சரியும்.

ஈகாமர்ஸ் ஸ்டார்ட்அப்
அழகு மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கான பிரத்தியேக ஈகாமர்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான நைகா கடந்த நவம்பரில் பட்டியலிடப்பட்டது மற்றும் ஐபிஓவுக்கு முந்தைய முதலீட்டாளர்களுக்கான கட்டாய லாக்-இன் காலம் நவம்பர் 10 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

லைட்ஹவுஸ், டிபிஜி குரோத்
பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான லைட்ஹவுஸ் இந்தியா FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸில் உள்ள ரூ.335 கோடி மதிப்புள்ள பங்குகளைப் பிளாக் டீல் மூலம் விற்கும் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை, தனியார் பங்கு நிறுவனமான டிபிஜி குரோத் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி மதிப்புள்ள நைகா பங்குகளை விற்பனை செய்தது.

ரூ.1,000 கோடி பங்குகள்
டிபிஜி குரோத் நிறுவனம் விற்பனை செய்த ரூ.1,000 கோடி மதிப்புள்ள நைகா பங்குகளைச் சொசைட்டி ஜெனரல், HSBC இந்தியன் ஈக்விட்டி மதர் ஃபண்ட் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் (சிங்கப்பூர்) Pte போன்ற பல நிறுவனங்கள் இணைந்து வாங்கியது.

வெளிநாட்டு வர்த்தக விரிவாக்கம்
இந்திய வர்த்தகச் சந்தையிலும், பங்குச்சந்தையிலும் கலக்கி வரும் நைகா நிறுவனம் தனது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வர்த்தகத்தை இந்தியாவில் விரிவாக்கம் செய்து வரும் இதே நிலையில் வெளிநாட்டில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது நைகா.

Apparel Group உடன் ஒப்பந்தம்
நைகா நிறுவனம் அக்டோபர் மாகம் துபாய் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு வளைகுடா நாடுகள் முழுவதும் லைப்ஸ்டைஸல் மற்றும் பேஷன் துறை வர்த்தகத்தைச் செய்து வரும் நிறுவனமான Apparel Group உடன் நைகா ஒப்பந்தம் செய்ய உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் நைகாவின் வர்த்தகம் தற்போது துபாய் மட்டும் அல்லாமல் வளைகுடா நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்ய உள்ளது.

ரீனா சாப்ரா
நைகா நிறுவனத்தின் private label beauty brands பிரிவின் சிஇஓ-வான ரீனா சாப்ரா ராஜினாமா செய்து ஆகஸ்ட் 16ஆம் தேதி ரீனா சாப்ரா அதிகாரப்பூர்வமாக இப்பதவியில் இருந்து வெளியேறினார். ரீனா சாப்ரா 2016 ஆம் ஆண்டு நைகா நிறுவன பணியில் சேர்ந்தார், இதற்கு முன்னதாகக் காஸ்மெட்டிங் பிராண்டான Colorbar நிறுவனத்தில் COO ஆகப் பணியாற்றினார்.