யார் இந்த ஃபல்குனி நாயர்.. பெண் குலத்திற்கு பெருமை சேர்த்த இரும்பு பெண்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் சிறந்த பெண் தொழில் முனைவோரில் ஒருவராக திகழ்பவர், நய்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பல்குனி நாயர்.

 

இவருக்கு 2021ம் ஆண்டின் EY Entrepreneur of the Year 2021 என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதம் EY உலக தொழில் முனைவோர் விருதிலும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரு வங்கியாளராக தனது பயணத்தை தொடங்கிய ஃபல்குனி, 2012ல் தான் தனது தொழில் பயணத்தினை தொடங்கினார்.

தயவுசெய்து முழு சம்பளத்தினையும் கொடுங்க.. ஏர் இந்தியா பைலட்கள் கதறல்..!

தொடக்கம் எப்போது?

தொடக்கம் எப்போது?

நய்கா நிறுவனம் கடந்த 2012ல் நிறுவப்பட்டது. இது ஆரம்பத்தில் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு 2015ல் இருந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இன்றும் ஆன்லைனில் வணிகத்தில் நல்ல லாபகரமான நிறுவனமாக செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப்களில் நய்காவும் ஒன்று.

பங்கு சந்தையில் நுழைவு

பங்கு சந்தையில் நுழைவு

பேஷன் நிறுவனமான இது கடந்த ஆண்டின் இறுதியில் தான் பங்கு சந்தையில் நுழைந்து, பொது நிறுவனமாகவும் உருவெடுத்தது. இந்த நிறுவனத்தின் போர்ட்போலியோவில் நல்ல முன்னணி பிராண்டுகள், குறிப்பாக உள்நாட்டு முன்னணி பிராண்டுகள், வெளிநாட்டு பிராண்டுகள் என அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன.

மக்களை கவரும் வெளி நாட்டு பிராண்டுகள்
 

மக்களை கவரும் வெளி நாட்டு பிராண்டுகள்

இதில் பேஷன், காஸ்மெடிக்ஸ், நேச்சுரல் புராடக்ட்ஸ் உள்ளிட்ட பல பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றது. குறிப்பாக நய்கா பெயரில் சொந்தமாக உற்பத்தி செய்தும் விற்பனை செய்து வருகின்றது. சமீபத்திய நிலவரப்படி நய்காவின் போர்ட்போலியோவில் சுமார் 2600-க்கும் மேற்பட்ட வெளி நாட்டு பிராண்டுகள் இடம் பெற்றுள்ளன.

ஆஃப் லைன் ஸ்டோர்கள்

ஆஃப் லைன் ஸ்டோர்கள்

ஆன்லைனில் ஒரு புறம் வணிகம் களைகட்டி வந்தாலும், ஆஃபலைனிலும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உண்டு. 2019ம் ஆண்டிலேயே EY-ன் ஸ்டார்ட் அப் பிரிவில் சிறந்த தொழில் முனைவோராக விருது பெற்றவர் பல்குனி நாயர். தற்போது பொது பங்கு வெளியீட்டுக்கு பின்னர் மீண்டும் சிறந்த தொழில் முனைவோர் விருதினை பெற்றுள்ளார். இவர் சிறந்த தொழில் முனைவோர் என்பதையும் தாண்டி, பல பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் உள்ளார்.

நய்காவின் இன்றைய பங்கு விலை நிலவரம்

நய்காவின் இன்றைய பங்கு விலை நிலவரம்

NSE-யில் இப்பங்கின் விலையானது இன்று 3.11% அதிகரித்து, 1841.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் தற்போதைய உச்ச விலை 1876 ரூபாயாகும். இதன் தற்போதைய விலை குறைந்தபட்ச விலையானது, 1805.05 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 2573.70 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1125 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nykaa's Falguni nayar wins EY entrepreneur of the year award 2021

EY Entrepreneur of the Year 2021: Falguni nayar wins EY entrepreneur of the year award 2021/யார் இந்த ஃபல்குனி நாயர்.. பெண் குலத்திற்கு பெருமை சேர்த்த இரும்பு பெண்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X