26 ஆண்டுகள் கழித்து திரும்ப கிடைத்த 206 ஏக்கர் நிலம்: டாடா ஸ்டீல் நிறுவனம் மகிழ்ச்சி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்னர் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை ஒடிசா அரசு கைப்பற்றிய நிலையில் அந்த நிலங்களை திரும்ப அளித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் என்ற மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கடற்கரைக்கு அருகில் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு சொந்தமான 206 ஏக்கர் நிலத்தை ஒடிசா அரசு கைப்பற்றியது.

அதுமட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான 6 ஆயிரத்து 900 ஏக்கர் நிலத்தை ஒடிசா அரசு கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் வர்த்தகத்தை மூடும் டாடா..? சந்திரசேகரன் திடீர் முடிவு எதற்காக..? பிரிட்டன் வர்த்தகத்தை மூடும் டாடா..? சந்திரசேகரன் திடீர் முடிவு எதற்காக..?

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல்

ஒடிஷா அரசாங்கம் ஒரு முக்கிய ஆலை கட்டுவதற்காக கடந்த 1996ம் ஆண்டு டாடா ஸ்டீல் ஆலைக்கு சொந்தமான 206 ஏக்கர் உள்பட மொத்தம் 6900 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.

26 ஆண்டுகள்

26 ஆண்டுகள்

இந்த நிலையில் நிலத்தை கைப்பற்றி 26 ஆண்டுகள் ஆகியும் அந்த நிலத்தில் எந்தவித ஆலையையும் ஒடிஷா அரசு தொடங்கவில்லை. இதனை அடுத்து தற்போதைய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் கூடிய நிலையில் டாடா ஸ்டீல் ஆலைக்கு சொந்தமான 206 ஏக்கர் உள்பட அனைத்து கைப்பற்றப்பட்ட நிலத்தையும் திரும்ப வழங்க முடிவு செய்யப்பட்டது.

திரும்ப ஒப்படைப்பு

திரும்ப ஒப்படைப்பு

பொதுநலன் கருதி கடந்த 26 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த நிலங்களை திருப்பி அளிக்க ஒரிசா அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளர் எஸ்சி மொகபத்ரா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி நிலத்தை மீண்டும் உரியவர்களுக்கு சமர்ப்பிப்பதோடு ஒரு நியாயமான இழப்பீடும் தருவதற்கு சட்டத்தில் உள்ள விதிகளை ஆய்வு செய்ய ஒடிசா அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இழப்பீடு

இழப்பீடு

இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து கூறிய போது நிலங்களைத் இருப்பது ஒப்படைப்பது மட்டும் போதாது என்றும் உரிய இழப்பீடுகளை நிலம் இழந்தவர்களுக்கு தரவேண்டும் என்றும் அது ஒரு அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளனர்.

சந்திப்பு

சந்திப்பு

இந்த நிலையில் ஒடிசா முதல்வர் பட்நாயக் அவர்கள் டாடா நிறுவனத்தை தங்களது மாநிலத்தில் விரைவு படுத்துமாறு வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. டாடா தலைவர் சந்திரசேகரன் அவர்களை சமீபத்தில் அவர் சந்தித்ததாகவும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் கேட்டு அறிந்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Odisha govt to retun 206 acres land to Tata Steel after 26 years

The Odisha government will be returning 206 acres of land to Tata Group after 26 years. The 206 acres of land were owned by the Tata Steel plant near the Gopalpur coast of the Ganjam district to the original landowners.
Story first published: Saturday, October 22, 2022, 16:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X