என்னய்யா சொல்றீங்க.. ரூ.42,500 அபராதமா.. இனி வண்டிய ஓசியில கொடுப்பீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புவனேஸ்வர்: என்னய்ய இது கொடுமையா இருக்கே. இரு சக்கர வாகனத்தில் சென்றவருக்கு 42,500 ரூபாய் அபராதமா? வண்டி விலையே கிட்டதட்ட அவ்வளவு தானே இருக்கும் என்று கேட்கிறீர்களா?

 

உண்மைதான். ஒடிசாவில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒடிசாவின் பட்ராக் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுவன் தனது நண்பர்கள் 2 பேருடன் கடந்த வியாழக்கிழமையன்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி சென்றுள்ளான்.

சிறுவனுக்கு அபராதம்

சிறுவனுக்கு அபராதம்

இந்த சிறுவனம் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவனை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால் அவனை விசாரிக்கும் போது தான் தெரியவந்துள்ளது அந்த மோட்டார் சைக்கிள் மற்றொருவருக்கு சொந்தமானது என்று. இதைத் தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு போக்குவரத்து போலீசார் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 42,500 ரூபாயினை அபராதம் விதித்துள்ளனர்.

எதற்கெல்லாம் அபராதம்?

எதற்கெல்லாம் அபராதம்?

சரி எதற்கு எவ்வளவு அபராதம், ஹெல்மெட் போடவில்லை எனில், இவ்வளவு அபராதமா என்றும் தானே கேட்கிறீர்கள். அந்த சிறுவனிடம் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பயணித்தது. மேலும் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றது. தவறான பாதையில் சென்றது போன்ற பல விதி மீறலுக்கான அபராதங்கள் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

உரிமையாளருக்கும் அபராதம்
 

உரிமையாளருக்கும் அபராதம்

இதில் கொடுமை என்னவெனில் அந்த சிறுவனிடம் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு அளித்ததற்கான 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் அதில் அடங்கும் என ஒடிசா போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு இருசக்கர வாகனத்திற்கு இவ்வளவு தொகை, சொல்லப்போனால் கிட்டதட்ட பைக் விலையே அபராதமாக செலுத்த வேண்டியிருப்பது, ஒடிசா வாகன ஓட்டிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய வாகன சட்டம்

புதிய வாகன சட்டம்

கடந்த ஆண்டு செப்டம்பர் 1 அன்றிலிருந்து அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டப்படி, போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ஏற்கனவே இருந்த அபராதம் மற்றும் தண்டனையை விட பல மடங்கு அதிகமாக, அபராதம் மற்றும் தண்டையை அதிகரிக்கப்பட்டது. அதிலும் லைசென்ஸ் இல்லாமல் வாகனம், குடிபோதையில் வாகனம் ஒட்டுபவர், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஒட்டுபவர்களுக்கு அதிகளவு அபராதம் விதிகப்பட்டு வருகின்றது.

பிரச்சனைகள் குறையும்

பிரச்சனைகள் குறையும்

இது வரை பெரிய வாகனங்களுக்கு பெரிய அளவில் அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில், ஒரு இரு சக்கர வாகனத்துக்கு 42,500 ரூபாய் என்பது சற்று அதிர்ச்சியை அளித்தாலும், சிறுவர்களை வாகனம் ஓட்ட சொல்வது மிக தவறான விஷயம் தானே. என்ன தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இது போன்ற தவறுகள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது குறைந்தாலே பல பிரச்சனைகள் குறையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Odisha police fined Rs.42,500 for violating traffic rules for motorcycle owner

Odisha police fined Rs.42,500 for violating traffic rules for motorcycle owner, allowing a minor ride under new motor vehicles act 2019 in odisha’s Bhadrak district.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X