இந்திய பணக்காரர்களுக்கு செக் வைத்த துபாய்.. எல்லாமே வேஸ்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பணக்காரர்கள் அரசுக்கு வரி செலுத்துவதைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே பலர் தங்களது குடும்ப டிர்ஸ்ட் மற்றும் ஹோல்டிங் நிறுவனங்களை வரிச் சலுகை நிறைந்த துபாய் மற்றும் அபுதாபி போன்ற அரபு நாடுகளில் வைத்துள்ளனர்.

இதனால் பல ஆண்டுகளாக வரிச் சலுகை பெற்று வந்த இந்திய பணக்காரர்களுக்குத் தற்போது புதுப் பிரச்சனை உருவாகியுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகள்

ஐக்கிய அரபு நாடுகள்

ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் OECD அமைப்பு இணைந்து புதிய குளோபல் டாக்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கு வரி விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய பணக்காரர்கள்

இந்திய பணக்காரர்கள்

வரி இல்லாத காரணத்தால் மட்டுமே இந்திய பணக்காரர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் டிர்ஸ்ட் மற்றும் ஹோல்டிங் நிறுவனங்களைத் திறந்தனர். ஆனால் தற்போது இதற்கும் பிரச்சனை வந்துள்ள காரணத்தால் இந்திய பணக்காரர்கள் இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க என்ன வழி என்பதை வல்லுனர்களுடன் ஆலோசனை செய்யத் துவங்கியுள்ளனர்.

OECD அமைப்பு

OECD அமைப்பு


Organisation for Economic Co-operation and Development (OECD) அமைப்பின் புதிய குளோபல் டாக்ஸ் ஒப்பந்தத்தில் உலகில் பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்ட நிலையில், தற்போது ஐக்கிய அரபு நாடுகளும் கையெழுத்திட்டு உள்ளது.

15 சதவீதம் வரிக் கட்டாயம்

15 சதவீதம் வரிக் கட்டாயம்

இந்த ஒப்பந்தம் மூலம் ஐக்கிய அரபு நாடுகள் தற்போது அந்நாட்டில் இருக்கும் நிறுவனங்கள் மீது கார்பரேட் வரியாகக் குறைந்தது 15 சதவீதம் வரி விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி ஐக்கிய அரபு நாடுகளில் டிரஸ்ட் மற்றும் ஹோல்டிங் நிறுவனங்களை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

டிரஸ்ட் மற்றும் ஹோல்டிங் நிறுவனங்கள்

டிரஸ்ட் மற்றும் ஹோல்டிங் நிறுவனங்கள்

மேலும் ஐக்கிய அரபு நாடுகளில் டிரஸ்ட் மற்றும் ஹோல்டிங் நிறுவனங்களை வைத்துக் கொண்டு இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகளில் வர்த்தகம், முதலீடு செய்து வருவது அதிகம். சமீபத்தில் பண்டோரா பேப்பர்ஸ்-ல் சிக்கிய பலர் ஐக்கிய அரபு நாடுகளில் டிரஸ்ட் மற்றும் ஹோல்டிங் நிறுவனங்களை வைத்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

136 நாடுகள் கையெழுத்து

136 நாடுகள் கையெழுத்து

OECD அமைப்பு கடந்த வாரம் தனது புதிய குளோபல் டாக்ஸ் ஒப்பந்தத்தில் சுமார் 136 நாடுகள் கையெழுத்திட்ட நிலையில், 2023 முதல் பன்னாட்டு நிறுவனங்கள், தாங்கள் வர்த்தகம் செய்யும் நாடுகளில் குறைந்தது 15 சதவீதம் வரிச் செலுத்தியாக வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

கூகுள், பேஸ்புக், டிவிட்டர்

கூகுள், பேஸ்புக், டிவிட்டர்

இதேபோலத் தான் இந்தியாவில் வர்த்தகம் செய்யும் கூகுள், பேஸ்புக், டிவிட்டர், போன்ற அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் செய்யும் விளம்பர வர்த்தகம் போன்ற வருமானம் ஈட்டும் சேவைக்குக் குறைந்தபட்சம் 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இப்புதிய வரி பெரும் பன்னாட்டு டெக் நிறுவனங்களுக்கு அதிகப் பாதிப்பு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

OECD's Global tax deal: Rich Indians may suffer lot, who owned trusts in UAE

OECD's Global tax deal: Rich Indians may suffer lot, who owned trusts in UAE
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X