தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட்.. ரூ.49,000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாடும் தமிழ்நாட்டு பொருளாதாரமும் விவசாயத்தை அதிகளவில் நம்பியிருந்தாலும் இங்குத் தொழிற்துறையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல், ஆட்டோமொபைல் ஸ்பேர்ஸ், மோட்டார்ஸ் இதைத் தாண்டி டெக்ஸ்டைல், பேப்பர், சிமெண்ட், இதை தொடர்ந்து சேவை துறையில் ஐடி உட்படப் பல துறைகளில் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக உள்ளது.

 

இந்நிலையில் கடந்த 5 வருட காலத்தில் தமிழ்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் இல்லையென்றாலும் நிலையான வளர்ச்சி அளவீட்டைப் பதிவு செய்து வருகிறது. இதைப் பார்க்கும் போதும் மற்ற மாநிலங்களை விடவும் தமிழ்நாடு சூப்பர் தான்.

இத்தகைய சூழ்நிலையில் குவைத் நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது.

குவைத் நிறுவனம்

குவைத் நிறுவனம்

குவைத் நாட்டைச் சேர்ந்த அல் காரீப் நிறுவனம் இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கத் திட்டமிட்டு இருந்த நிலையில் தமிழ்நாட்டில் அமைக்க முடிவு செய்துள்ளது. சுமார் 49,000 கோடி ரூபாய் முதலீட்டில் அல் காரீப் நிறுவனம் தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் தயாரிப்புக்கான தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தமிழக முதல் ஈபிஎஶ் தெரிவித்துள்ளார்.

ஜாம்நகர்

ஜாம்நகர்

தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதன் மூலம் குஜராத் ஜாம்நகர், சிங்கப்பூர் ஜூராங் தீவு போல் தென்னிந்திய மாநிலங்கள் பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும். தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டாலும் இதன் வளர்ச்சியின் மூலம் கிடைக்கும் வர்த்தகம், வருவாய், வேலைவாய்ப்பு அனைத்தும் தென்னிந்திய மாநிலங்களுக்குக் கணிசமான பலன் கொடுக்கும்.

சீனா நிறுவனம்
 

சீனா நிறுவனம்

குவைத் அல் காரீப் நிறுவனத்தைத் தாண்டி சீனாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான BYD இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் முடிவில் இறங்கியுள்ளது. இதற்காகத் தமிழ்நாட்டில் தனது புதிய தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் சுமார் 59 நிறுவனங்கள் தமிழக அரசுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இதோடு 213 நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைத் தமிழ்நாட்டில் துவங்குவதற்கான பணியில் பல்வேறு இடங்களில் இருக்கிறது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

வெளிநாட்டுச் சுற்றுப்பயணம்

வெளிநாட்டுச் சுற்றுப்பயணம்

கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்ற 3 நாடுகள் சற்றுபயணத்தின் போது சுமார் 5 திட்டங்களில் கையெழுத்துப் போடப்பட்டது. இதுமட்டும் அல்லாமல் சுமார் 8,835 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டையும் இதன் மூலம் 35,520 வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியுமென DLF DOWNTOWN துவக்க விழாவில் பேசினார் ஈபிஎஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil refinery in Tamil Nadu: Kuwait firm plan to invest 49,000 crore

Kuwait based Al Kharafi plans to set up an oil refinery and a petrochemical manufacturing facility at an investment of Rs 49,000 crore in Tamil Nadu, Chief Minister K Palaniswami said here on Thursday.
Story first published: Friday, January 24, 2020, 11:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X