பொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சா எண்ணெய் வளத்தில் தினமும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தைச் செய்யும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

குவைத் நாட்டின் தரத்தை உலகின் முன்னணி கடன் அமைப்பு வரலாற்றில் முதல் முறையாகக் குறைத்துள்ளது, இதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் கொரோனா பாதிப்பால் கச்சா எண்ணெய் வர்த்தகம் சரிந்து அந்நாட்டின் பொருளாதாரம் 2009 சர்வதேச நிதி நெருக்கடிக்கு இணையான அளவை அடைந்துள்ளது.

குவைத், ஐக்கிய அரபு அமீரகம் நிலையைக் கண்டு கச்சா எண்ணெய் மட்டுமே நம்பியிருக்கும் பிற அரபு நாடுகள் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

கொரோனா-க்கு பின்பும் Work From Home தொடரும்..!கொரோனா-க்கு பின்பும் Work From Home தொடரும்..!

குவைத்

குவைத்

மூடிஸ் இண்வெஸ்டார்ஸ் சர்வீசஸ் அமைப்பு குவைத் நாட்டின் கடன் மதிப்பைக் குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் அந்நாட்டின் liquid resources அளவீடு பெரும் அளவில் குறைந்துள்ளது என்றும் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே குவைத் அரசு பொதுக் கடன் மசோதாவை அமலக்கம் செய்ய முடியாமல் தவித்து வரும் நிலையில், நிதி நெருக்கடியா சமாளிக்கச் சேமிப்பு இருப்பில் நிதியில் (reserve fund) இருக்கும் பணத்தைச் செலவு செய்து வருகிறது.

 

எச்சரிக்கை

எச்சரிக்கை

குவைத் அரசு தொடர்ந்து தனது இருப்பில் நிதியில் இருந்து பணத்தைச் செலவு செய்து வந்தால் அந்நாட்டு அரசு மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும். கடன் மற்றும் செலவுகளை முறையாக நிர்வாகம் செய்யவில்லை எனில் குவைத் நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையை அடையும் என எச்சரிக்கை விடுத்துள்ளது மூடிஸ் அமைப்பு.

90 பில்லியன் டாலர்
 

90 பில்லியன் டாலர்

குவைத் நாட்டின் கடன் அளவீட்டைச் சமாளிக்கும் பொதுக் கடன் மசோதாவை குவைத் அரசு அமலாக்கம் செய்தாலும், 2024ஆம் ஆண்டுக்குள் அந்நாட்டின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க 90 பில்லியன் டாலர் தேவை என மூடிஸ் கணித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம்

கொரோனா பாதிப்பால் ஐக்கிய அரபு அமீரகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்குப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது என அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

கொரோனா பாதிப்பால் வான்வழி எல்லைகள் மூடப்பட்டுள்ளது, வர்த்தகங்கள் மூடப்பட்டுள்ளது, உலகளாவிய விநியோக தடவாளங்களும் மூடப்பட்டுள்ளது இதனால் ஐக்கிய அரபு அமீரிகத்திந் பொருளாதார வளர்ச்சி 2009ஆம் ஆண்டின் நிலையை அடைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

சரிவு

சரிவு

இதன் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் இந்த ஆண்டு -5.2 சதவீதம் வரையில் சரியும் எனக் கணிப்புகள் கூறுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் முதல் காலாண்டில் -2.7 சதவீதமும், 2வது காலாண்டில் 9.3 சதவீதமும் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

குவைத், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகளின் பொருளாதாரம் வீழ்ந்தால் அரபு நாடுகளில் பணியாற்றும் பல கோடி இந்தியர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.

இதேபோல் இந்த நெருக்கடியைச் சமாளிக்க அரபு நாடுகள் இனி வரும் காலத்தில் கச்சா எண்ணெய் விலையைத் தொடர்ந்து உயர்த்துவும் வாய்ப்பு உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil-Rich nations Kuwait, UAE are in economic trouble

Oil-Rich nations Kuwait, UAE are in economic trouble
Story first published: Thursday, September 24, 2020, 8:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X