ஓலாவின் புதிய நிறுவனம்.. பாவிஷ் அகர்வால்-வின் பிரம்மாண்ட வளர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் நிறுவனத்திற்காக உருவாக்கிய ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் கீழ் தான் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்திக்காகப் பாங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கடனாகப் பெற்றது.

தற்போது இந்தக் கடனையும், கடன் சுமையையும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ஏற்காமல், ஜூன் மாதம் ஓலா நிர்வாகம் உருவாக்கிய புதிய கிளை நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜி நிறுவனத்திற்குத் திருப்பியுள்ளது.

இதன் மூலம் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் கிட்டதட்ட கடன் சுமை இல்லா நிறுவனமாக உள்ளது.

எலான் மஸ்க்-கிற்கு அட்வைஸ் செய்த ஓலா சிஇஓ..! எலான் மஸ்க்-கிற்கு அட்வைஸ் செய்த ஓலா சிஇஓ..!

ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜி நிறுவனம்

ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜி நிறுவனம்

ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜி நிறுவனத்தை ஓலா நிர்வாகம் 2, 3, 4 சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்காகக் கட்டமைத்தது. இந்த நிறுவனத்தை ஜூன் மாதம் தான் முறையாகப் பதிவு செய்தது, தற்போது ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜி நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளும், தாய் நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் கீழ் உள்ளது.

100 மில்லியன் டாலர் கடன்

100 மில்லியன் டாலர் கடன்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மாபெரும் தொழிற்சாலையின் முதல் கட்ட பணிகளுக்காக 10 ஆண்டுக் கடன் திட்டம் வாயிலாகப் பாங்க் ஆப் பரோடா வங்கியிடம் இருந்து சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான கடனை பெற ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தக் கடனை தான் தற்போது ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜி நிறுவனத்தின் பெயரில் மாற்றியுள்ளது ஓலா நிர்வாகம்.

வார்பர்க் பின்கஸ் மற்றும் Temasek முதலீடு

வார்பர்க் பின்கஸ் மற்றும் Temasek முதலீடு

கடந்த மாதம் தனியார் முதலீட்டு நிறுவனமான வார்பர்க் பின்கஸ் மற்றும் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான Temasek ஆகிய நிறுவனங்கள் ஓலா நிறுவனத்தின் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளைத் தற்போது இருக்கும் முதலீட்டாளர்களிடம் இருந்து கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஓலா-வின் பிரம்மாண்ட வளர்ச்சி

ஓலா-வின் பிரம்மாண்ட வளர்ச்சி

இன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் திருப்பிப் பார்க்க வைத்துள்ளது ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் என்றால் அது ஓலா. ஆம், இந்தியா போன்ற நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் நாட்டின் கால் டாக்ஸி என்பது மிகவும் ஆடம்பரம் எனப் பேசப்பட்டு வந்த நிலையில் ஆன்லைன் டாக்ஸி புக்கிங் சேவையை ஓலா மூலம் அறிமுகம் செய்தார்.

டாக்ஸி பார் ஷோர் கைப்பற்றல்

டாக்ஸி பார் ஷோர் கைப்பற்றல்

ஓலா வட இந்தியப் பகுதிகளில் மட்டுமே இருந்த நிலையில் 2015 காலகட்டத்திலேயே தென் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த டாக்ஸி பார் ஷோர் நிறுவனத்தைக் கைப்பற்றி இத்துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்தது ஓலா.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உடன் கூட்டணி

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உடன் கூட்டணி

அதன் பின்பு ஓலா தான் செய்யும் வர்த்தகத்தின் வாயிலாகவே அதிகம் லாபத்தைப் பெற்ற வேண்டும் என்பதற்காக முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து கார்களை வாங்கி ஓட்டுநர்களை நியமித்து இயக்க துவங்கியது.

போட்டி இல்லை

போட்டி இல்லை

இதன் வலிமையான கட்டமைப்பு மூலம் இத்துறையில் எந்த ஒரு நிறுவனத்தாலும் நுழைய முடியாத அளவிற்கு உயர்ந்தது. இதன் பின்பு வாடிக்கையாளர்களுக்கு எண்டர்டெயின்மென்ட், பேமெண்ட் சேவை, அவுட் ஸ்டேஷன் சேவை எனப் பல தரப்பட்ட Add on சேவைகளைக் கொடுக்கத் துவங்கிய காரணத்தாலும் தொடர்ந்து வர்த்தகம் உயர்ந்தது.

வெளிநாட்டு வர்த்தக விரிவாக்கம்

வெளிநாட்டு வர்த்தக விரிவாக்கம்

இதற்கிடையில் ஓலா தனது ஆன்லைன் டாக்ஸி சேவை தளத்தை வெளிநாடுகளும் கொண்டு செல்ல முயற்சி செய்து வெற்றி அடைந்தது. இந்த முயற்சியில் பெரிய அளவிலான வெற்றி பெறாவிட்டாலும் தொடர்ந்து இயங்கி வருகிறது.

உபர் நிறுவனத்தின் வீழ்ச்சி

உபர் நிறுவனத்தின் வீழ்ச்சி

இந்தச் சூழ்நிலையில் அடுத்தக் கட்டத்திற்கு எப்படியாவது ஓலா நிறுவனத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என நினைக்கும் போது உலகின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான உபர் இந்தியா, சீனா என உலகின் பல நாடுகளில் வர்த்தகத்தைப் படிப்படியாக விற்பனை செய்து வெளியேறத் துவங்கியது. இதுமட்டும் அல்லாமல் உபர் நிறுவனத்தின் நிர்வாகத்திலும் பல பிரச்சனைகள் இருந்தது போல் ஓலா நிறுவனத்திலும் பிரச்சனை வெடிக்கத் துவங்கியது.

ஆம்ஸ்டர்டாம் Etergo கைப்பற்றல்

ஆம்ஸ்டர்டாம் Etergo கைப்பற்றல்

இந்தப் பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து ஓலா நிறுவனம் 2020ல் ஆம்ஸ்டர்டாம்-ஐ சேர்ந்த Etergo என்னும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தைக் கைப்பற்றி உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமான உருவெடுக்க முடிவு செய்தது.

உயர் அதிகாரிகள் வெளியேற்றம்

உயர் அதிகாரிகள் வெளியேற்றம்

இந்த ஆம்ஸ்டர்டாம் நிறுவன கைப்பற்றலுக்குப் பின்பு பல உயர் அதிகாரிகள் ஓலா நிறுவனத்தை விட்டு வெளியேறிய மறக்க முடியாது அனைத்தையும் தாண்டி இன்று ஆட்டோமொபைல் தயாரிப்பும் உற்பத்திக்கும் பெயர் போன தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாநிலத்தில் பிரம்மாண்டமான தொழிற்சாலையை அமைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம்

ஓலா நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பியூச்சர்பேக்ட்ரி-ஐ உருவாக்கும் பணிகளைப் பிப்ரவரி மாதத்தில் துவங்கினார் ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால்.

பியூச்சர் பேக்ட்ரி உருவாக்கம்

பியூச்சர் பேக்ட்ரி உருவாக்கம்

இந்தியாவில் இருக்கும் பிற எலக்டரிக் வாகன நிறுவனங்களைப் போல் அல்லாமல் டெஸ்லா-வின் வழித்தடத்தில் பயணிக்க முடிவு செய்துள்ளது ஓலா எலக்ட்ரிக். அதாவது இன்ஜினியரிங், உற்பத்தி, விநியோகம் என அனைத்தும் ஒரே இடத்தில் செய்யும் படி இந்தத் தொழிற்சாலை கட்டமைக்கப்பட்டு வருகிறது.

1 கோடி வாகனங்கள்

1 கோடி வாகனங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஓலா பியூச்சர் பேக்டரி-யில் வருடத்திற்கு 10 மில்லியன் அதாவது வருடத்திற்கு 1 கோடி வாகனங்களைத் தயாரிக்கும் அளவிற்கு மேம்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

43 ஏக்கர் தொழிற்சாலை

43 ஏக்கர் தொழிற்சாலை

முதற்கட்டமாக ஜூன் மாத உற்பத்தி துவங்கப்பட்ட தொழிற்சாலை சுமார் 43 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருடத்திற்கு 20 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் அளவிற்குக் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இங்குத் தனியாகப் பேட்டரி தொழிற்சாலையும் அமைக்கப்பட உள்ளது.

ஓலா எல்கட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா எல்கட்ரிக் ஸ்கூட்டர்

75வது சுதந்திர தினத்தன்று ஓலா தனது S1 ரக ஸ்கூட்டர் மற்றும் அதன் ப்ரோ வெர்ஷன் ஸ்கூட்டர் மற்றும் அதன் விலையை வெளியிட்டது. இதில் S1 ரக ஸ்கூட்டர் 99,999 ரூபாயாகும், ப்ரோ வாகனத்தின் விலை 1,29,999 ரூபாயாகவும் அறிவித்துள்ளது.

75வது சுதந்திர தினம்

75வது சுதந்திர தினம்

ஒலா தனது சிறப்பு மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 75வது சுதந்திர தினத்தில் இந்த ஸ்கூட்டரான வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் புக்கிங்-கிற்காகத் திறக்கப்பட்ட போது 24 மணிநேரத்தில் 1,00,000 வாகனங்கள் புக்கிங் பெற்றது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் வாகனங்கள்

இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் கார், பைக் மீதான மக்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது வேளையில் ஒலா அறிமுகம் செய்துள்ள எலக்ட்ரிக் வாகனத்திற்கு அதிகளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இரு ஸ்கூட்டர்களின் விலை மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ola Electric Technologies a new entity: Tremendous growth of Bhavish Aggarwal's OLA

Ola Electric Technologies a new entity: Tremendous growth of Bhavish Aggarwal's OLA
Story first published: Wednesday, August 18, 2021, 14:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X