ஓலாவின் அதிரடி திட்டம்.. அவேல் பைனான்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்ட்பேங்க் ஆதரவுடைய ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஓலா கேப்ஸ் சேவையினை வழங்கி வரும் ஒரு பிரபல நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு நிதிச் சேவையினை வழங்கும் நிதி நிறுவனமான, அவேல் பைனான்ஸ் நிறுவனத்தினை வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..! இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..!

ஓலா ஏற்கனவே இந்த அவேல் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு முதலீட்டாளராக இருந்து வருகின்றது.

எப்போது நிறுவப்பட்டது?

எப்போது நிறுவப்பட்டது?

இந்த நிதி நிறுவனம் 2017ல் துஷார் மெஹந்திராடாவுடன் இணைந்து பவிஷ் அகர்வாலின் சகோதரர் அங்குஷ் அகர்வால் நிறுவியதாகும். இதே ஓலா நிறுவனத்தின் தாய் நிறுவனமான ANI நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் ஆகும்.

ஓலா நிறுவனம் தவிர அவேலில் நிதி சேவையினை வழங்கி வரும் ஃபால்கன் எட்ஜ் மற்றும் மேட்ரிக்ஸ் பார்ட்னர்களை அதன் முதலீட்டாளர்களாகவும் கொண்டுள்ளது.

 

அவேல்-ன் கையகப்படுத்தல் திட்டம்

அவேல்-ன் கையகப்படுத்தல் திட்டம்

இதற்கிடையில் இந்த நிறுவனம் அதே பிரிவில் செயல்படும் நியோ வங்கியான YeLoஐ அவேல் பைனான்ஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது. அதோடு வங்கி அல்லாத கடன் வழங்கும் ஆர்ட் க்ளைமேட் ஃபைனான்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினை வாங்குவதற்கும் கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலை கோரியதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியானது.

ஓலா மொபைலிட்டி நிதி சேவை திட்டம்

ஓலா மொபைலிட்டி நிதி சேவை திட்டம்

அவேல் பைனான்ஸ், அவேல் பைனான்ஷியல் சர்வீசஸ் லிமிட்டெட் நிறுவனத்தினால் இயக்கப்படுகின்றது. இது 6 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஓலா இந்த நிதி நிறுவனத்தினை கையடுப்படுத்தினால், நிதித்துறையில் ஓலாவின் செயல்பாடுகளை மேம்படுத்தும். ஓலா மொபைலிட்டி நிதி சேவை வணிகத்தினை திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஆக அதற்கு இந்த கையகப்படுத்தலானது பெரும் உதவிகரமாக இருக்கலாம்.

 கடன் பிரிவில் கவனம்

கடன் பிரிவில் கவனம்

இதன் முலம் ஓலாவின் ப்ளூ காலர் தொழிலாளார்களை உள்ளடக்கிய கிரெடிட் குறைவான, பிரிவுகளில் கவனம் செலுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ஓலா நிதித்துறையிலும் வலுப்படுத்த இந்த கையகப்படுத்தலானது உதவிகரமாக இருக்கலாம்.

எனினும் இந்த கையகப்படுத்தலின் மதிப்பு என்ன? இது எப்போது நிறைவடையும்? மற்ற முழு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மொத்தத்தில் தனது நிதி வணிகத்தினை மேம்படுத்த ஓலாவின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ola plans to buy fintech firm avail finance to strengthen financial services

Ola plans to buy fintech firm avail finance to strengthen financial services/ஓலாவின் அதிரடி திட்டம்.. நிதி சேவையை மேம்படுத்த அவேல் பைனான்ஸை வாங்குகிறதா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X