Olectra Greentech: இதுதான் இந்தியாவின் குட்டி டெஸ்லா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. இதே வேலையில் மத்திய அரசும் தனது பருவநிலை மாற்ற இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகளவிலான ஆதரவை அளித்து வருகிறது.

 

இதன் எதிரொலியாக இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இருக்கும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அதிகளவிலான முதலீட்டையும், வர்த்தகத்தையும் பெற்று வரும் நிலையில் ஒரு நிறுவனம் மட்டும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்து, கிட்டதட்ட அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் துவக்கக் கால வளர்ச்சிக்கு இணையான உயர்வை பதிவு செய்துள்ளது.

 Olectra Greentech நிறுவனம்

Olectra Greentech நிறுவனம்

ஹைதராபாத்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் தான் Olectra Greentech, இந்நிறுவனம் இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் பஸ் தயாரிக்கும் நிறுவனமாகத் திகழ்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒட்டுமொத்த எல்க்ட்ரிக் பஸ் வர்த்தகத்தில் சுமார் 40 சதவீதத்தைப் பெற்றுள்ளது.

 சீனாவின் BYD நிறுவனம்

சீனாவின் BYD நிறுவனம்

Olectra Greentech நிறுவனம் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் பஸ் தொழிற்சாலையைச் சீனாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான BYD உடனான கூட்டணியில் அமைத்துள்ளது. சீனாவில் எலக்ட்ரிக் பஸ் பயன்பாடு மிகவும் அதிகம், இதில் சீனாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் பஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக BYD உள்ளது.

 540 சதவீதம் வளர்ச்சி
 

540 சதவீதம் வளர்ச்சி

Olectra Greentech நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் தனது முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தைக் கொடுத்துள்ளது. ஓலெக்ட்ரா க்ரீன்டெக் பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் 540 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது, இதன் மூலம் இந்நிறுவனத்தில் 10000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது இதன் மதிப்பு 67,000 ரூபாயாக உயர்ந்திருக்கும்.

 2000 எலக்ட்ரிக் பஸ்கள்

2000 எலக்ட்ரிக் பஸ்கள்


2020 டிசம்பர் மாதம் ஓலெக்ட்ரா க்ரீன்டெக் நிறுவனம் ஹைதராபாத்-ல் 150 ஏக்கர் பரப்பளவில் சுமார் 600 கோடி ரூபாய் முதலீட்டில் வருடம் 10,000 எலக்ட்ரிக் பஸ் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கட்டியது. தற்போது இந்நிறுவனம் 2000 எலக்ட்ரிக் பஸ்-களுக்கான ஆர்டர் பெற்று உற்பத்தி பணியில் ஈடுபட்டு வருகிறது, இந்த 2000 பஸ்களின் மொத்த மதிப்பு 3,000 முதல் 3,500 கோடி ரூபாயாகும்.

 ஓலெக்ட்ரா க்ரீன்டெக் திட்டம்

ஓலெக்ட்ரா க்ரீன்டெக் திட்டம்

இதைத் தொடர்ந்து ஓலெக்ட்ரா க்ரீன்டெக் தற்போது 6000 பஸ்களுக்கான டென்டர்களில் விண்ணப்பம் செய்துள்ளது. எலக்ட்ரிக் பஸ்களைத் தாண்டி எலக்ட்ரிக் டிர்க்-களைத் தயாரிக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு BYD மிகவும் முக்கியமான காரணமாக விளங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Olectra Greentech an electric bus maker shares surged 540% in just one year

Olectra Greentech an electric bus maker shares surged 540% in just one year Olectra Greentech: இதுதான் இந்தியாவின் குட்டி டெஸ்லா..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X