ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்துமா.. உண்மை நிலை என்ன..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரம் கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வரும் வேளையில் ஒமிக்ரான் வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பீதி மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடாக உயர்ந்திருக்கும் சீனாவில் வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்துள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

உண்மையில் வட்டி குறைப்பிற்கான வாய்ப்புகள் உள்ளதா..?

 சக்திகாந்த தாஸ்

சக்திகாந்த தாஸ்

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை காலை 10 மணிக்கு நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிடுகிறார். இந்தக் கூட்டத்தின் முடிவுகளைப் பலர் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

 வர்த்தகம் மற்றும் பொருளாதாரம்

வர்த்தகம் மற்றும் பொருளாதாரம்

இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் இன்னமும் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டைத் தொடாமல் இருக்கும் வேளையில் வர்த்தகர்கள் ரிசர்வ் வங்கியின் இரு முறை ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை உயர்த்தி, ரெப்போ விகிதத்திற்கு இணையாகக் கொண்டு வரும் அறிவிப்பைப் புதன்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பொருளாதார வல்லுனர்கள்

பொருளாதார வல்லுனர்கள்

ஆனால் பொருளாதார வல்லுனர்கள் இது நடக்காது எனப் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர் அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கி பத்திர கொள்முதல் பணியைத் துவங்கியுள்ள காரணத்தால் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தி வருகிறது.

 ரிவர்ஸ் ரெப்போ விகிதம்

ரிவர்ஸ் ரெப்போ விகிதம்

குறிப்பாக ஜனவரி-ல் இருந்து variable rate reverse repo (VRRR) மூலம் வங்கி அமைப்பில் இருந்து Aug 13 - ₹2.5 லட்சம் கோடி, Aug 27 - ₹3 லட்சம் கோடி, Sept 9 - ₹3.5 லட்சம் கோடி, Sept 24 - ₹4 லட்சம் கோடி, திரும்பப் பெற்று வரும் நிலையில் வர்ஸ் ரெப்போ விகிதத்தை ஒமிக்ரான் பாதிப்பிலும் உயர்த்தலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தலைவர் நவீன் சிங் தெரிவித்துள்ளார்.

 பணவீக்கம்

பணவீக்கம்

இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்த வாய்ப்பு உண்டு, ஆனால் ரிசர்வ் வங்கியின் இலக்கான 2-6 சதவீத பணவீக்கம் தான் இன்றளவும் இருக்கிறது. காய்கறி மீதான பணவீக்கம் தற்காலிகமானது எனக் கணிக்கப்பட்டு உள்ள நிலையில் வட்டியை உயர்த்த வாய்ப்புகள் குறைவு தான்.

 பொருளாதார வளர்ச்சி இலக்கு

பொருளாதார வளர்ச்சி இலக்கு

இதேபோல் PMI ஆய்வில் முக்கியக் குறியீடுகள் மிகவும் சிறப்பாக இருக்கும் காரணத்தால் அரசின் வரி வசூல் அளவீடு எந்த வகையிலும் பாதிக்கப்படப்போவது இல்லை என்பதால் இதற்கு வரியை உயர்த்த வேண்டிய கட்டாயம் இல்லை, ஆனால் ஒமிக்ரான் வைரஸ் மூலம் ரிசர்வ் வங்கியின் பொருளாதார வளர்ச்சி இலக்கான 9.5 சதவீதம் அளவீடு சரிய வாய்ப்பு இருந்தால் கட்டாயம் வரி உயர்வு இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Omicron slowing RBI policy normalisation in MPC

Business News : Omicron slowing RBI policy normalisation in MPC
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X