பட்டையை கிளப்பி வரும் ஓஎன்ஜிசி.. 45 நாளில் 55% ஏற்றம்.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த திங்கட்கிழமையன்று மட்டும் 4% ஏற்றம் கண்டு, 101 ரூபாய் என்ற உச்சத்தினை தொட்டுள்ளது. இதே கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த நிறுவன பங்கின் விலையானது 55.6% ஏற்றம் கண்டுள்ளது.

இது கடந்த டிசம்பர் மாத தொடக்கம் முதல் கொண்டு 28.6% ஏற்றத்திலும் இந்த பங்கின் விலையானது உள்ளது.

இது நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு மருந்து பற்றிய சாதகமான செய்திகளும் வந்து கொண்டுள்ளன.

டிசிஎஸ் நிறுவனத்தின் ரூ.16000 கோடி பைபேக் திட்டம்.. உங்கள் பங்குகளை விற்க போறீங்களா?டிசிஎஸ் நிறுவனத்தின் ரூ.16000 கோடி பைபேக் திட்டம்.. உங்கள் பங்குகளை விற்க போறீங்களா?

பங்கு இலக்கு விலை

பங்கு இலக்கு விலை

இதன் காரணமாக இனி எரிபொருட்களின் தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மார்கன் ஸ்டான்லி ஆய்வு நிறுவனம் இந்த நிறுவனத்தின் மதிப்பினை equalweight என்ற நிலையில் இருந்து overweight என்று மாற்றியமைத்துள்ளது. அதுமட்டும் அல்ல இதன் இலக்கு விலையையும் 84 ரூபாயில் இருந்து, 115 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

விலை அதிகரிப்பும் ஒரு காரணம்

விலை அதிகரிப்பும் ஒரு காரணம்

மேலும் அதன் உள்நாட்டு உற்பத்தி விகிதமும் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது. இதன் காரணமாக 2022ம் நிதியாண்டில் அதல் வரிக்கு பிந்தைய லாபம் 30 சதவீதம் அதிகரிக்கும் என்றும் இந்த நிறுவனம் கணித்துள்ளது. உயரும் கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில், உள் நாட்டில் விலை அதிகரிப்பு, கேஸ் விலை அதிகரிப்பு ஆகியவை அதன் பங்கு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் தேவை

அதிகரிக்கும் தேவை

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக எரிபொருட்களுக்கான தேவையும் குறைந்தது. வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. தொழிற்சாலைகள் முடங்கின. இதனால் கச்சா எண்ணெய் விலையும் படு பாதாளத்திற்கே சென்றது. எனினும் தற்போது லாக்டவுனில் முழு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தேவையானது மீண்டு வர தொடங்கியுள்ளது.

எண்ணெய் விலை அதிகரிப்பு

எண்ணெய் விலை அதிகரிப்பு

ஒரு புறம் தேவை அதிகரிப்பால் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகின்றது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், பெட்ரோல் டீசல் விலையும் அதிகரித்து வருகின்றது. ஏனெனில் சுகாதாரம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில் கொண்டு மக்கள் தற்போது அதிகளவில் வாகனங்களில் பயணிக்க தொடங்கியுள்ளனர். இதனால் எரிபொருட்கள் விலையானது வரும் காலத்தில் நிச்சயம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பங்கு விலை

இன்று பங்கு விலை

இதன் காரணமாகவே முதலீட்டாளர்கள் எண்ணெய் நிறுவனங்கள் சம்பந்தமான பங்குகளில் தங்களது முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஓஎன்ஜிசியின் பங்கு விலையானது பட்டையை கிளப்பி வருகின்றது. எனினும் தற்போது ஓஎன்ஜிசியின் பங்கு விலையானது கிட்டதட்ட 1 சதவீதம் குறைந்து, 100.55 ரூபாயாகவும் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ONGC shares surged 55% in 45 days on expectations of an increase demand

ONGC updates.. ONGC shares surged 55% in 45 days on expectations of an increase demand
Story first published: Tuesday, December 15, 2020, 15:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X