மீண்டும் இமாலய உச்சத்தை தொட்ட வெங்காயத்தின் விலை.. கவலையில் இல்லத்தரசிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமையலறையில் அடிப்படை தேவையாக இருக்கும் வெங்காயத்தின் விலையானது தற்போது மீண்டும் சில இடங்களில் 150 ரூபாயை தொட்டுள்ளது.

மத்திய அரசானது கடந்த பல வாரங்களுக்கு முன்பே வெங்காயத்தின் விலையை குறைக்க இறக்குமதிக்கு பல சலுகைகளை அறிவித்திருந்தது. இதன் விளைவாக சில வாரங்களாக 100 ரூபாய்க்கு அருகில் விற்பனையாகி வந்தது.

இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் சந்தைக்கு வந்தது. இது சந்தைக்கு வரத்தை சற்று அதிகப்படுத்தியது. இந்த நிலையில் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், மீண்டும் விலை தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

3,47,220 வங்கி அதிகாரிகள் வேலை காலி.. 77,780 வங்கி அதிகாரிகள் வேலை பறிக்க திட்டம்!3,47,220 வங்கி அதிகாரிகள் வேலை காலி.. 77,780 வங்கி அதிகாரிகள் வேலை பறிக்க திட்டம்!

வெங்காயம் விலை குறைந்தபாடாக இல்லை

வெங்காயம் விலை குறைந்தபாடாக இல்லை

எனினும் இந்த சலுகைகள் இன்று வரை பெரிதும் கைகொடுத்ததாக தெரியவில்லை. ஏனெனில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் இந்தியாவை வந்து சேர்ந்திருந்தாலும், தேவைக்கு ஏற்ப இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்று வரை விலை குறைந்தபாடாக இல்லை. தேவைக்கு ஏற்ப வெங்காயத்தின் இறக்குமதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதே உண்மை என்றும் கூறப்படுகிறது.

விலை எப்படி?

விலை எப்படி?

குறிப்பாக பெரு நகரங்களில் சில இடங்களில் வெங்காயத்தின் விலையானது 150 ரூபாயைத் தொட்டுள்ளது. கொல்கத்தாவில் கிலோ 120 ரூபாயாகவும், இதே டெல்லியில் 102 ரூபாயாகவும், இதே மும்பையில் 80 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் நுகர்வோர் விவகார அமைச்சகம் பராமரித்த தரவுகளின் படி தெரிய வந்துள்ளது.

இறக்குமதி வெங்காயம்

இறக்குமதி வெங்காயம்

எனினும் பெரும்பாலான நகரங்களில் வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. அரசு இறக்குமதி சலுகைகளை அறிவித்த பின்னர் வெங்காயம் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,160 டன் வெங்காயம் இந்தியாவை வந்தடைந்துள்ளது. இன்னும் அடுத்த 3 - 4 நாட்களில் 10,560 டன் வெங்காயம் வந்து சேரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வரத்து அடுத்த மாதம் வரலாம்

வரத்து அடுத்த மாதம் வரலாம்

இந்த நிலையில் சிவப்பு மற்றும் மஞ்சள் வெங்காயம் இரண்டுமே துருக்கி மற்றும் எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த இறக்குமதியானது மும்பை துறைமுகத்தில் தரையிறக்கப்படலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் அரசுக்கு சொந்தமான எம்.எம்.டி இதுவரை 49,500 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இவற்றில் சில இறக்குமதிகள் அடுத்த மாதத்தில் இந்தியா வந்து சேரலாம்.

உற்பத்தி குறைவு

உற்பத்தி குறைவு

இந்த நிலையில் 2019 - 2020ம் ஆண்டில் கரீப் பருவ பயிர்கள் உற்பத்தி 25 சதவிகித பயிர்கள் குறையலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதை தடுக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தாலும், போதிய வரத்து இல்லாததால் விலை மேலும் உயர்ந்து வருகிறது.

உற்பத்தியில் அழிவு

உற்பத்தியில் அழிவு

வெங்காய உற்பத்தி குறைந்திருந்த போதிலும், மழையால் கணிசமான அளவு வெங்காயம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் வணிகர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது. மேலும் இறக்குமதியானது இன்னும் முன்பே செய்திருக்க வேண்டும். இதனால் விலையும் கட்டுக்குள் வந்திருக்கும் என்றும் வர்த்தகர்கள் மத்தியில் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது.
மக்களுக்கு அடிப்படை தேவையாக இருக்கும் வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வர, அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Onion prices again touched Rs.150 per kg

Onion prices again touched Rs.150 per kg. Due lack supplies and strong demand in market. About 1,160 tonne onions reached India. Additional 10,560 tonne of shipments are expected to arrive in the next week.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X