ஆன்லைன் ஷாப்பிங் குளறுபடி: லேப்டாப்-க்கு சோப்பு, ட்ரோன்-க்கு உருளைக்கிழங்கு.. மக்கள் அதிர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கிவிட்ட நிலையில் நாடு முழுவதும் அனைத்து ரீடைல் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்களும் தள்ளுபடிகளை வாரி வழங்கி வருகிறது.

ஆனால் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் ஆர்டர் செய்த பொருட்களுக்குப் பதிலாகச் சோப்பு, காய்கறிகள் வந்துகொண்டு இருக்கிறது.

ஒருப்பக்கம் மக்கள் ஈகாமர்ஸ் நிறுவனங்களையும், மறுபுறம் டெலிவரி நிறுவனங்களையும் குறை கூறி வருகிறது. இதனால் அனைத்து தரப்பினரும், கடைகளுக்கு நேரில் சென்று தேவையான பொருட்களை வாங்குவது என முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆன்லைன் பேக்கரியில் ரூ.75 கோடி வணிகம்.. மாஸ் காட்டும் 3 நண்பர்கள்.. ! ஆன்லைன் பேக்கரியில் ரூ.75 கோடி வணிகம்.. மாஸ் காட்டும் 3 நண்பர்கள்.. !

பீகார்

பீகார்

பீகாரில் ஒருவர் டிரோன் ஆர்டர் மீஷோ இணையதளத்தில் ட்ரோன் கேமரா ஆர்டர் செய்துள்ளார், ஆனால் அவருக்கு வந்ததோ ஒரு கிலோ உருளைக்கிழங்கு. இதைப் பார்சலை Shadowfax நிறுவனத்தின் வாயிலாக ஆர்டர் செய்யப்பட்ட நபருக்கு டெலிவரி செய்யப்பட்டு உள்ளது.

ட்ரோன் - உருளை கிழங்கு

ட்ரோன் - உருளை கிழங்கு

பார்சல் வடிவத்தையும் அதில் வரும் சத்தத்தையும் பார்த்துச் சந்தேகம் அடைந்த சேத்தன் குமார் (டிரோன் கேமரா ஆர்டர் செய்தவர்), டெலிவரி செய்ய வந்தவரிடமே பிரிக்கச் சொன்னார். இப்போது இந்தப் பார்சலில் ட்ரோன் கேமராவுக்குப் பதிலாக ஒரு கிலோ உருளைக்கிழங்கு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இதேபோல் மற்றொரு சம்பவத்தில் யஷஸ்வி சர்மா தனது லின்கிடுன் கணக்கில் பதிவிட்டதன் படி பிளிப்கார்ட்-ல் தான் லேப்டாப்-ஐ பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடி விற்பனையில் ஆர்டர் செய்துள்ளதாகவும், லேப்டாப்-க்கு பதிலாகத் துணி சோப்பு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

 லேப்டாப் - துணி சோப்பு

லேப்டாப் - துணி சோப்பு

பொதுவாக ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தால் சில நேரம் நாம் ஓடிபி கொடுக்க வேண்டும், இதுதான் open-box delivery concept. அதாவது OTP அளிக்க வேண்டுமெனில் பார்சலை டெலிவரி ஆட்களை ஓப்பன் செய்து உரிய பொருள் தான் வந்துள்ளது என்பதை வாடிக்கையாளர் முன்னிலை செக் செய்து அதன் பின்பு பெறுவது தான்.

OTP பாதுகாப்பு

OTP பாதுகாப்பு

இந்த open-box delivery concept தெரியாமல் பலர் பார்சலை பெற்ற உடன் OTP அளித்திருப்போம். இப்படிக் கொடுத்தால் இதுபோன்று சோப்பு, உருளைக்கிழங்கு வந்தால் திருப்பி அனுப்ப முடியாது, பணத்தையும் பெற முடியாது. எனவே உஷாராகச் செயல்படுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Online Shopping turns nightmare to people; soap delivered for laptop, potatoes delivered for drone

Online Shopping turns nightmare to people; soap delivered for laptop, potatoes delivered for drone
Story first published: Tuesday, September 27, 2022, 20:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X