இந்தியாவில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம்.. ஓப்போவின் அதிரடி திட்டம் தான் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைக்கு கொடுக்கும் பால் புட்டியிலிருந்து, காலில் அணியும் செருப்பு வரையிலும் இந்தியாவில் சீனாவின் ஆதிக்கம் உள்ளது. எனினும் தற்போதைய காலங்களின் சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையானது இந்தியாவில் மிக அதிகளவும் உயர்ந்து வருகிறது.

 

அதிலும் இங்கிருந்து உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஓப்போ (OPPO), இந்தியாவிலும் அதன் கிளையை நிறுவியுள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் உற்பத்தியை அதிகரிக்கவும் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

இந்த நிலையில் இன்றைய இந்திய மக்களிடையே ஆதிக்கம் செலுத்தி வரும், ஸ்மார்ட்போன்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஓப்போ நிறுவனம் 2020ம் ஆண்டில் 100 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது எனவும் இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது தவிர சில்லறை விற்பனையிலும் ஒரு ஆக்ரோஷமான உந்துதலை தள்ள இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தில் கவனம்

மேக் இன் இந்தியா திட்டத்தில் கவனம்

இது குறித்து ஓப்போ இந்தியாவின் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் துணைத் தலைவர் சுமித் வாலியா கூறுகையில், உற்பத்தியாளர்களின் கவனம் அவர்களின் வளர்ச்சி வேகத்தை அதிகரிப்பதாக இருக்கும். இது தவிர உற்பத்தியாளர்கள் இந்தியாவில் 100 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதால், மேக் இன் இந்தியா திட்டத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவர் என்றும் கூறியுள்ளார்.

தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் கவனம்
 

தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் கவனம்

மேலும் தற்போது இந்தியாவில் 4ஜி சேவை மட்டுமே இருக்கும் நிலையில், இந்த நிறுவனம் 5 ஜி சேவையையினை மேம்படுத்த கவனம் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

2020 புதுமையான ஆண்டாக இருக்கும்

2020 புதுமையான ஆண்டாக இருக்கும்

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு 2020 ஒரு புதுமையான ஆண்டாக இருக்கும் என்றும் எதிர்ப்பாக்கப்படுவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 5ஜி இணைப்பு ஒரு யதார்த்தமாக மாறும் வாய்ப்புகள் காரணமாக, ஸ்மார்ட்போன் உற்பத்தியில் புதுமையான கண்டுபிடிப்புகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இது பரிமாற்ற வேகங்களில் 4ஜியை விட 200 மடங்கு வேகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சீனாவின் ஆதிக்கம்

சீனாவின் ஆதிக்கம்

இந்தியாவின் ஏற்கனவே கணிசமான அளவு சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தை வகித்து வரும் நிலையில்; சீனா நிறுவனங்களின் அதிரடியான நடவடிக்கைகளினால் இந்தியாவின் இதன் பங்கு இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சீனா நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் வேலை அதிகரிக்கும் என்றாலும், இந்தியா நிறுவனங்கள் சில காணமல் போவது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oppo plan to manufacture 100 million Smartphone in India to 2020

Oppo plan to manufacture 100 million Smartphone in India to 2020. And other thing it will be to build and interactive technology for bettering 5G experience for users. So 2020 expected to be a year full of innovations for manufacturers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X