ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சூப்பர் சலுகை.. யாருக்கும் கிடைக்காதது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவும், இந்திய மக்களும் கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் SIDBI வங்கி MSME நிறுவனங்களுக்காகப் பிரத்தியேகமாக இரு முக்கியத் திட்டங்களை அறிவித்துள்ளது.

 

இத்திட்டத்தின் படி கொரோனாவை எதிர்த்துப் போராடும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கவும், இந்நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் வகையில் குறைந்த வட்டியில் கடனும், நிதி இல்லாத நிறுவனங்களுக்கு எளிய கடன் திட்டங்களையும் அளிக்க முடிவு செய்துள்ளது ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா (SIDBI வங்கி).

 ஆக்சிஜன் தயாரிக்கும் MSME நிறுவனங்கள்

ஆக்சிஜன் தயாரிக்கும் MSME நிறுவனங்கள்

SIDBI வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி SHWAS என்னும் திட்டத்தின் கீழ் ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சி ஜெனரேட்டார்ஸ், ஆக்சி கான்சென்டிரேட்டார்ஸ், லிக்விட் ஆக்சிஜன் ஆகியவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்களுக்கும், லிக்விட் ஆக்சிஜன் போக்குவரத்து, ஸ்டோரேஜ், ரீபிள்ளிங், சப்ளை ஆகிய பணிகளில் ஈடுபட்டு உள்ள MSME நிறுவனங்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 AROG திட்டம்

AROG திட்டம்

அடுத்தபடியாக AROG என்ற திட்டத்தின் கீழ் கொரோனா-வை எதிர்த்துப் போராடத் தேவையான மருந்து, கருவிகள் தொடர்புடைய உற்பத்தி நிறுவனங்கள் அதாவது பல்ஸ் ஆக்சிமீட்டர், வென்டிலேட்டர்ஸ், பிபிஈ, பிற முக்கிய மருந்துகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் கடன் வழங்க முடிவு செய்துள்ளது.

 4.5 முதல் 6 சதவீத வட்டியில் கடன்
 

4.5 முதல் 6 சதவீத வட்டியில் கடன்

இந்த இரு திட்டத்தின் கீழ் ஒரு MSME நிறுவனம் சுமார் 2 கோடி ரூபாய் அளவிலான கடனை வெறும் 4.5 முதல் 6 சதவீத வட்டியிலும், நிறுவனங்கள் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்த 48 மணிநேரத்தில் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுப் பணம் அளிக்கப்படும் என SIDBI வங்கி தலைவர் ராமன் தெரிவித்துள்ளார்.

 400 MSME நிறுவனங்கள்

400 MSME நிறுவனங்கள்

இதேபோல் மார்ச் 2020ல் SIDBI வங்கி அறிவித்த மற்றொரு தட்டமான SAFE என்ற திட்டத்தின் கீழ் கொரோனா-வை எதிர்த்துப் போராட உதவும் சுமார் 400க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு 178 கோடி ரூபாய் வரையிலான கடனை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 குறைந்த வட்டியில் கடன்

குறைந்த வட்டியில் கடன்

தற்போது சந்தையில் இருக்கும் வங்கிகள் MSME நிறுவனங்களுக்கு SIDBI வங்கி குறிப்பிட்ட வட்டியை விடவும் அதிகமாகவே கடன் அளிக்கும் காரணத்தால் இத்திட்டம் மிகவும் சிறப்பானதாக உள்ளது. மேலும் கொரோனா மூலம் அதிகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் இந்தச் சூழ்நிலையில் இத்தகைய திட்டம் பெரிய அளவில் உதவும்.

SHWAS என்பது Sidbi assistance to Healthcare sector in War Against second Wave of Covid என்பதின் சுருக்கமே. AROG என்பது Sidbi Assistance to MSMEs for Recovery & Organic Growth during Covid பெயரின் சுருக்கமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

oxygen manufacturing and supply companies get loans from Sidbi Bank at 4.5-6% Interest rates

MSME latest update.. oxygen manufacturing and supply companies get loans from Sidbi Bank at 4.5-6% Interest rates
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X