ப சிதம்பரம் பளார் கேள்வி.. எல்ஐசி பங்கு விற்பனை எதற்கு.. விளக்கம் கொடுங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: எல்ஐசி பங்கு விற்பனை விவகாரத்தில் மத்திய அரசின் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

 

மேலும் நல்ல முறையில் லாபத்துடன் இயங்கி வரும் எல்ஐசியின் பங்குகளை விற்க வேண்டிய அவசியம் என்ன? மத்திய அரசு எடுத்த இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என்ன? இதன் பின்னணியில் உள்ள தெளிவான காரணங்களை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றும் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதிலும் உலகளவில் இன்சூரன்ஸ் துறையில் கடுமையான போட்டிகள் இருந்த போதிலும், எல்ஐசி நல்ல லாபகரமான நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் கடந்த ஆண்டு முதல் பிரிமியம் பங்கை சுமார் ஐந்து சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் ப சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளார்.

எல்ஐசி சிறப்பாக செயல்பட்டு வருகிறது

எல்ஐசி சிறப்பாக செயல்பட்டு வருகிறது

கடந்த சனிக்கிழமையன்று 2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்ஐசியில் உள்ள மத்திய அரசின் ஒரு பகுதி பங்கினை பொது பங்கு வெளியீடு மூலம் மத்திய அரசு விற்க திட்டமிட்டுள்ளது என்று தென்னிந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை ஏற்பாடு செய்திருந்த பட்ஜெட் குறித்த சொற்பொழிவுக்கு பதில் அளித்த ப சிதம்பரம் எல்ஐசி நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தெளிவான விளக்கம் வேண்டும்

தெளிவான விளக்கம் வேண்டும்

ஆனால் இதன் பங்கினை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ஏன், இது குறித்து அவர்கள் எங்களுக்கு விளக்க வேண்டும். இன்று ஏன் நீங்கள் எல்ஐசியை பட்டியலிட விரும்புகிறீர்கள். நீங்கள் நிர்வாக கலாச்சாரம் மோசமானது என்று நினைக்கிறீர்களா? அல்லது வேலை கலாச்சாரம் மோசமானது என்று நினைக்கிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நல்ல காரணத்தை கூறுங்கள்
 

நல்ல காரணத்தை கூறுங்கள்

மத்திய அரசு இந்த பங்கு விற்பனைக்கு நாங்கள் முதலீட்டை பெற விரும்புகிறோம் என்று கூற விரும்பினால் நாங்கள் நிச்சயம் அதை எதிர்ப்போம். இது ஒரு மோசமான காரணம். ஆக எல்ஐசி பட்டியலிடப்படுவதற்கு நல்ல காரணங்களை நீங்கள் எங்களிடம் கூறுங்கள். அனேகமாக எல்ஐசியில் ஐந்து முதல் பத்து சதவிகிதம் வரை பங்கு விற்பனை செய்யப்படலாம் என்றும் ப சிதம்பரம் கூறியுள்ளார்.

ஜிடிபி – நாமினல் ஜிடிபி

ஜிடிபி – நாமினல் ஜிடிபி

மேலும் நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் 2020 -21 மக்களின் தேவையை பூர்த்தி செய்யவில்லை. மேலும் அடுத்த ஆண்டில் ஜிடிபி விகிதம் 6 - 6.5% வரையில் இருக்கலாம் என்றும் ஜனவரி 31 அன்று முதன்மை பொருளாதார நிபுணர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு அடுத்த நாளே நாமினல் ஜிடிபி வளர்ச்சி 10% இருக்கும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சராசரி 5% தான்

சராசரி 5% தான்

இந்த இரண்டு முரண்பாடான எண்ணிக்கைகள் எப்படி இருக்க முடியும். ஏனெனில் நாங்கள் 1970-லிருந்த ஜிடிபி கணிப்புக்கும் உண்மையான ஜிடிப்பிக்கும் உள்ள வித்தியாசம் சராசரியாக 5% ஆக இருந்துள்ளது. ஆக அடுத்த ஆண்டு 10% இலக்கானது சாத்தியமான விஷயம் அல்ல. தேவையை அதிகரிக்க செய்ய மக்கள் கையில் பணப்புழக்கத்தையல்லவா அதிகரிக்க வேண்டும். இதையல்லவா நிர்மலா சீதாரமன் உறுதி செய்திருக்க வேண்டும்.

தேவையை அதிகரிக்க வேண்டும்

தேவையை அதிகரிக்க வேண்டும்

பெரிய அளவிலான நுகர்வு தன்மையே தேவையை நிலைப்படுத்த முடியும். பொருளாதாரம் சிக்கலில் உள்ளது. இதனை சரிசெய்ய பெரிய அறுவை சிகிச்சைத் தேவைப்படுகிறது. பொருளாதாரம் என்பது தேவை அதிகரிப்புத் தொடர்பானது, முதலீடு தொடர்பானது என்பதை அரசு புரிந்து கொள்ளவில்லை. இதெல்லாவற்றையும் விட கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது.

மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும்

மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும்

நிர்மலா சீதாராமன் கிராமப்புற மக்களின் கையில் பணம் புழக்கம் அதிகரிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்க வேண்டும். அது சாதாரண மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். ஏனெனில் நடப்பு ஆண்டில் இது 71,000 கோடி ரூபாயும், இதே அடுத்த நிதியாண்டில் 61,500 கோடி ரூபாய் மட்டுமே பட்ஜெட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

P Chidambaram said congress may oppose LIC listing

Congress may oppose LIC listing if govt failed to convince it with rationale explanation for its move, said senior party leader p Chidambaram on Monday
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X