தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலிடம்... அமுலை மீண்டும் முந்திய பார்லே

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த பல ஆண்டுகளாக நுகர்வோர் பொருள்களை மக்களுக்கு வழங்கிவரும் பார்லே மற்றும் அமுல் இடையே கடும் போட்டி இருக்கும் நிலையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பார்லே நிறுவனம் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டும் பார்லே நிறுவனம் அதிக நுகர்வோர் புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது என்றும் இரண்டாவது இடத்தில் அமுல் உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்த நிறுவனங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

கடையை திறந்த அடுத்த நாளே விலையை உயர்த்திய IKEA... என்ன காரணம்? கடையை திறந்த அடுத்த நாளே விலையை உயர்த்திய IKEA... என்ன காரணம்?

10 ஆண்டுகளாக முதலிடம்

10 ஆண்டுகளாக முதலிடம்

தொடர்ந்து 10 ஆண்டுகளாக, பார்லே தயாரிப்புகள் அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்ட FMGG பிராண்டுகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது என்று Kantar India அறிக்கை தெரிவிக்கிறது. அதைத் தொடர்ந்து அமுல், பிரிட்டானியா, கிளினிக் பிளஸ் மற்றும் டாடா நுகர்வோர் தயாரிப்புகள் ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் தரும் புள்ளிகளின் (CRPs) அடிப்படையில் நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பார்லேவின் முன்னேற்றம்

பார்லேவின் முன்னேற்றம்

6,531 மில்லியன் CRP மதிப்பெண்கள் பெற்று பார்லே வழக்கம்போல் முதலிடத்தை பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக கிடைக்கும் CRPகள் 89 பில்லியனில் இருந்து 98 பில்லியனாக இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இதனால் வளர்ச்சி விகிதம் 2020ஆம் ஆண்டில் 3 சதவீதம் என இருந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் அது 9 சதவீதமாக உயந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

வளர்ச்சி விகிதம்

வளர்ச்சி விகிதம்

CRP அடிப்படையில் வளர்ந்து வரும் பிராண்டுகளின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 70 சதவீதம் என உள்ளது. இது 2020ஆம் ஆண்டு 56 சதவீதமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெரிய பிராண்ட், வேகமாக வளர்ச்சி பெறுவதாகவும், பெரிய பிராண்டுகள் 2021ஆம் ஆண்டில் 2020ஆம் ஆண்டை விட வளர்ச்சி சதவீதம் அதிகம் என்றும் Kantar India தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நுகர்வோர்கள்

நுகர்வோர்கள்

காந்தாரிலுள்ள வேர்ல்ட் பேனல் பிரிவின் தெற்காசியாவின் எம்.டி., கே.ராமகிருஷ்ணன் கூறியதாவது: நுகர்வோர்கள் சந்தைக்கு தற்போது மீண்டும் திரும்பியதால் புள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்றும், இது பெரும்பாலான பிராண்டுகளின் வளர்ச்சியை உறுதி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

antar India அறிக்கையின்படி முதல் 10 இடங்களை பிடித்த நிறுவனங்கள், அந்நிறுவனங்களுக்கு கிடைத்த நுகர்வோர்களின் புள்ளிகள் இதோ:

1. பார்லே தயாரிப்புகள்: 6,531 புள்ளிகள்

2. அமுல் : 5.561

3. பிரிட்டானியா: 5,370

4. கிளினிக் பிளஸ்: 4,506

5. டாடா நுகர்வோர் தயாரிப்புகள்: 2,763

6. காதி ( Ghadi): 2,315

7. நந்தினி: 2,278

8. கோல்கேட்: 2,134

9. ஆவின்: 2,024

10. லைஃப்பாய்: 1,896

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Parle Beats Amul To Top The List Of Most Chosen Consumer Brand In India's FMCG Sector

Parle Beats Amul To Top The List Of Most Chosen Consumer Brand In India's FMCG Sector | தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலிடம்... அமுலை மீண்டும் முந்திய பார்லே
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X