பார்லே ஜி, மொனாகோ, கிராக் ஜாக் பிஸ்கட் விலை குறையுமாம்.. ஏன் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வருடங்களாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் உங்கள் மாதாந்திர செலவுகள் கடுமையாக அதிகரித்திருக்கலாம்.

Recommended Video

Parle-G பிஸ்கட் விலை ஏறாததன் Trick என்ன? *Business | Oneindia Tamil

ஆனால் தற்போது விவசாய பொருட்களின் விலைகள் தணிந்து வந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு பொருட்களின் மூலப்பொருட்களின் விலை குறைந்து வருகின்றது.

இதனால் பிஸ்கட் போன்ற தினசரி உட்கொள்ளும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், மீண்டும் மலிவு விலையில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்களே தயவு செஞ்சு கொஞ்சம் குடிங்க.. கோரிக்கை விடுக்கும் ஜப்பான் அரசு..ஏன் தெரியுமா? இளைஞர்களே தயவு செஞ்சு கொஞ்சம் குடிங்க.. கோரிக்கை விடுக்கும் ஜப்பான் அரசு..ஏன் தெரியுமா?

என்னென்ன பிராண்டுகள்

என்னென்ன பிராண்டுகள்

மயங்க் ஷா கருத்து படி, பார்லே உள்ளிட்ட பிஸ்கட்களின் விலை இரண்டு ஆண்டுகள் விலையேற்றம் கண்ட நிலையில், தற்போது அதன் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்லே பிஸ்கட்டுகள் பல பிரபலமான பிராண்டுகளையும் விற்பனை செய்து வருகின்றது. இது பார்லே ஜி, கிராக் ஜாக், மொனாகோ, ஹைட் & சீக், மேலோடி, மேங்கோ பைட் உள்ளிட்ட பல தின்பண்டங்களையும் விற்பனை செய்து வருகின்றது.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

சந்தையில் பல்வேறு மூலப் பொருட்கள் விலையானது குறைந்து வரும் நிலையில், மேற்கண்ட தின்பண்டங்கள் விலையானது குறையலாம். தேவையும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிறுவனம் நம்பிக்கையுடன் இருக்கிறது. இது இந்த துறைக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

விலை குறையலாம்

விலை குறையலாம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விட நிலைமை நன்கு மேம்பட்டுள்ளது. குறிப்பாக கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலையானது குறைந்துள்ளது. பாமாயில் விலையும் குறையத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ளது. பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையும் 15 - 20% திருத்தம் கண்டுள்ளது. ஆக இனி நீங்கள் விலை உயர்வை காண மாட்டீர்கள். இதே போக்கு தொடர்ந்தால் பார்லே பொருட்கள் விலை அதிகரிக்கலாம்.

மார்ஜினில் தாக்கம்

மார்ஜினில் தாக்கம்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விலைவாசி அதிகரித்த நிலையில், நிறுவனம் விலையை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக நிறுவனகளின் செலவு அதிகரித்தது. இந்த காலகட்டத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவினைக் கண்டன. மார்ஜினில் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.

கொரோனாவால் பிரச்சனை

கொரோனாவால் பிரச்சனை

கொரோனா காலகட்டத்தில் சப்ளை சங்கிலியில் தாக்கம் இருந்தது. கச்சா எண்ணெய், பல உணவு தானியங்கள், பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் என பலவும் அதிகரித்தன. இதனை உக்ரைன் பிரச்சனை மேலும் ஊக்கப்படுத்தியது. எனினும் தற்போது நிலைமை சீரடைய தொடங்கியுள்ளது. இனி விலை குறையத் தொடங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: parle பார்லே
English summary

Parle G, Monaco, KrackJack Cookies price may come down soon

Parle G, Monaco, KrackJack Cookies price may come down soon/பார்லே ஜி, மொனாகோ, கிராக் ஜாக் குக்கீஸ்கள் விலை குறையலாம்.. ஏன் தெரியுமா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X