பாதாளத்தில் ஆட்டோமொபைல் துறை! வருத்தத்தில் கம்பெனிகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு கடந்த 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நேரம் சரி இல்லை.

 

அப்போதில் இருந்தே பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை உயர்வு, வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு, மக்கள் கையில் பணப் புழக்கம் குறைவு போன்ற பல காரணங்களால் ஆட்டோமொபைல் கம்பெனிகளின் விற்பனை அதள பாதளத்தை நோக்கிச் சரியத் தொடங்கியது.

ஆனால் இப்போது இந்த 2020 - 21 நிதி ஆண்டில், உண்மையாகவே, இந்திய ஆட்டோமொபைல் துறை தன் அதள பாதாளத்தைத் தொட்டுவிடும் போலத் தெரிகிறது. அப்படி என்ன பெரிய விற்பனைச் சரிவைக் காணப் போகிறது ஆட்டோமொபைல் துறை? வாங்க பாப்போம்.

கெபாசிட்டி பயன்பாடு

கெபாசிட்டி பயன்பாடு

இந்த 2020 - 21 நிதி ஆண்டில், இனி வரும் காலங்களில், இந்திய ஆட்டோமொபைல் துறையின் மொத்த உற்பத்தி கெபாசிட்டியில் 50 - 60 சதவிகிதமாக இருக்கலாம். இனி வரும் மாதங்களிலும், பயணிகள் வாகனங்களுக்கான டிமாண்ட் குறைவாகத் தான் இருக்கும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சியாம் மதிப்பீடு

சியாம் மதிப்பீடு

Society of Indian Automobile Manufacturers (Siam) என்கிற அமைப்பு, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்குக் காட்டிய விளக்கக் காட்சியில் (பிரசண்டேஷன்), இந்த 2020 - 21 நிதி ஆண்டில், இந்திய ஆட்டோமொபைல் துறையின் விற்பனை ஒரு பெரிய சரிவைக் காணும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

11 ஆண்டுகளில் இல்லாத சரிவு
 

11 ஆண்டுகளில் இல்லாத சரிவு

கடந்த 2009 - 10 நிதி ஆண்டில், 1.91 மில்லியன் (19.1 லட்சம்) பயணிகள் வாகனங்கள் (கார், எஸ் யூ வி, யூ வி, வேன்) விற்பனை ஆகலாம் என மதிப்பீடு செய்து இருக்கிறார்கள். கடந்த 2009 - 10 நிதி ஆண்டில் 1.95 மில்லியன் (19.5 லட்சம்) பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆனது. ஆக 2009 - 10 நிதி ஆண்டை விட, 2020 - 21 நிதி ஆண்டில் பயணிகள் வாகனங்களின் விற்பனை குறையலாம் என்கிறார்கள்.

இருசக்கர வாகனங்கள்

இருசக்கர வாகனங்கள்

அதே போல, இந்தியாவில் கடந்த 2011 - 12 நிதி ஆண்டில் மொத்தம் 13.4 மில்லியன் (1.34 கோடி) இரு சக்கர வாகனங்கள் விற்பனை ஆயின. இந்த 2020 - 21 நிதி ஆண்டில், சுமாராக 12 மில்லியன் (1.2 கோடி) இரு சக்கர வாகனங்கள் விற்பனை ஆகலாம் எனக் மதிப்பீடு செய்து இருக்கிறது சியாம் அமைப்பு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Passenger vehicles & two wheeler sales may see a big fall in FY21 SIAM projection

The indian Automobile industry may see a big fall in Financial Year 2020 - 21 as per SIAM projection.
Story first published: Monday, August 24, 2020, 14:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X