ஆத்தாடி ஒரே வருடத்தில் 7000 கோடி ரூபாய்க்கு மார்க்கெட்டிங் & விளம்பரமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா இன்று உலகத்தின் சந்தை என்றால் மிகை ஆகாது. ஆப்பிள் நிறுவனம் தொடங்கி சாதாரண மளிகை கடை நடத்தும் வால்மார்ட் வரை அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இன்று இந்தியா ஒரு பிரமாதமான சந்தை.

இந்தியா எனும் மிகப் பெரிய நுகர்வோர் சந்தையில் புதிதாக, கடந்த சில வருடங்களாக மீன் பிடித்துக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் தான் இந்த பேமெண்ட் நிறுவனங்கள்.

பேமெண்ட் நிறுவனங்கள் என்றால் யார்..? என்று கேட்கிறீர்களா. அட நம் கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே இந்த நிறுவனங்களைத் தான் நாம் பேமெண்ட் நிறுவனங்கள் என்று சொல்கிறோம்.

மூல நிறுவனம்

மூல நிறுவனம்

இந்த பேமெண்ட் நிறுவனங்கள் எல்லாமே, ஒவ்வொரு பெரிய நிறுவனங்களின் உதவி உடன் தான் இந்தியாவில் தங்கள் வியாபாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக
1. கூகுள் பே - கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமானது.
2. பேடிஎம் - அலிபாபா நிறுவனம் தான் பெரிய அளவில் முதலீடுச் செய்து இருக்கிறார்கள்.
3. போன் பே - ஃப்ளிப்கார்ட் தான் இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம். ஃப்ளிப்கார்ட்டே வால்மார்ட்டுக்கு சொந்தமான பின், போன் பே நிறுவனமும் வால்மார்ட்டுக்கு தானே சொந்தம்.
4. அமேசான் பே - அமேசான் நிறுவனத்துக்குச் சொந்தமானது.

சந்தை

சந்தை

இந்த நிறுவனங்கள் இந்தியாவில் வாடிக்கையாளர்களைப் பிடிக்க இந்த நான்கு நிறுவனங்களும் போட்டி போட்டு விளம்பரப்படுத்துவது, சந்தைப்படுத்துவது, தங்கள் நிறுவனங்களை ப்ரொமோட் செய்து கொள்வது என அசுரத் தனமாக செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நான்கு நிறுவனங்களும் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் வாடிக்கையாளர்களைப் பிடிக்க செய்திருக்கும் செலவு எவ்வளவு தெரியுமா..? 995 மில்லியன் டாலர் அதாவது சுமார் 7050 கோடி ரூபாய் என்கிறது ப்ளூம்பெர்க் க்விண்ட்.

2017 - 18-ல்
 

2017 - 18-ல்

இந்த நான்கு நிறுவனங்களும் தங்களின் 2017 - 18 நிதி ஆண்டில், வாடிக்கையாளர்களைப் பிடிக்க செய்த மார்க்கெட்டிங், ப்ரொமோஷன், விளம்பரச் செலவுகள் 3,400 கோடி ரூபாயாக இருந்து இருக்கிறது. ஆக கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் செய்த செலவுகளை விட, 2018 - 19 நிதி ஆண்டில் சுமார் இரண்டு மடங்கு கூடுதல் செலவுகளைச் செய்து இருக்கிறது இந்த நான்கு பேமெண்ட் நிறுவனங்கள். இதில் கேஷ் பேக் விளம்பரங்களும் அடக்கம் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது.

யார் அதிகம்

யார் அதிகம்

மேலே சொன்ன நான்கு நிறுவனங்களில் பேடிஎம் தான் அதிக விளம்பரம், மார்க்கெட்டிங் மற்றும் ப்ரொமோஷன் போன்ற வேலைகளுக்கு அதிகம் செலவழித்து இருக்கிறார்கள். ஆனால் கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் செய்த செலவுகளை 2018 - 19 உடன் ஒப்பிடும் போது பேடிஎம் சுமார் 50% தான் இந்த விளம்பர செலவுகளை அதிகரித்து இருக்கிறது. ஆனால் போன் பே சுமார் 100 சதவிகிதமும், கூகுள் பே சுமாராக 200 சதவிகிதமும், அமேசான் பே சுமாராக 380 சதவிகிதமும் தங்கள் விளம்பரச் செலவுகளை அதிகரித்து இருக்கிறார்கள்.

நிறுவன வாரியாக

நிறுவன வாரியாக

பேடிஎம் நிறுவனம் கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் மேலே சொன்ன வேலைகளுக்கு 2,224 கோடி ரூபாய் செலவழித்து இருக்கிறார்கள். இந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கு 3,451 கோடி ரூபாய் செலவழித்து இருக்கிறார்கள். பேடிஎம்மைத் தொடர்ந்து போன் பே நிறுவனம் கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் ப்ரொமோஷன் மற்றும் விளம்பர வேலைகளுக்கு 602 கோடி ரூபாய் செலவழித்து இருக்கிறார்கள். இந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கு 1,296 கோடி ரூபாய் செலவழித்து இருக்கிறார்கள்.

கூகுள் & அமேசான்

கூகுள் & அமேசான்

மூன்றாவது இடத்தில் கூகுள் பே நிறுவனம். கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் மேலே சொன்ன வாடிக்கையாளர்களை பிடிக்கும் வேலைகளுக்கு 346 கோடி ரூபாய் செலவழித்து இருக்கிறார்கள். இந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கு 1,028 கோடி ரூபாய் செலவழித்து இருக்கிறார்கள். அமேசான் பே நிறுவனம் கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் வாடிக்கையாளர்களை பிடிக்கும் வேலைகளுக்கு 264 கோடி ரூபாய் செலவழித்து இருக்கிறார்கள். இந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கு 1277 கோடி ரூபாய் செலவழித்து இருக்கிறார்கள்.

நஷ்டம்

நஷ்டம்

இத்தனை கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்த பின்பும் இந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்குவதாகச் சொல்கிறது இந்த நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள். இத்தனை கோடி ரூபாய் செலவழித்து, வாடிக்கையாளர்களைப் பிடித்து லாபம் இல்லை என்றால், இந்த நிறுவனங்கள் ஏன் இந்த வியாபாரத்தைச் செய்கிறார்கள் என்று தான் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். உண்மை ஒரு நாள் வெளி வரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

payment companies spend around 7000 crore in 1 year for promotion advertisement

Payment companies like Paytm, Google pay, Phone Pe, Amazon pay had spent around 7000 crore for advertisement, promotion and marketing activities in last 2018 - 19 financial year. But no seeing any good profit.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X