Paytm-க்கு சிக்கல்! கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்! ஏன் என்ன ஆச்சு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய பேமெண்ட் அப்ளிகேஷன்களில் ஒன்றான பேடிஎம் (Paytm) கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

ஏன் இந்த செயலியை கூகுள், தன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கி இருக்கிறது? இது குறித்து பேடிஎம் கம்பெனி தரப்பு என்ன சொல்கிறது?

பேடிஎம் கம்பெனியின் மற்ற செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கிறதா? ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கிறதா? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம். முதலில் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தில் இருந்து தொடங்குவோம்.

விதி மீறல் பிரச்சனை

விதி மீறல் பிரச்சனை

ஆன்லைன் சூதாட்டம் (Online Gambling) தொடர்பான விதிமுறைகளை, பேடிஎம் கம்பெனி மீறி இருப்பதாகச் சொல்லி, கூகுள் கம்பெனி, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலியை நீக்கி இருக்கிறதாம். கூகுள் தரப்பில் இருந்து, பல முறை பேடிஎம் கம்பெனியிடம், இந்த பிரச்சனையை சரி செய்யச் சொன்னார்களாம். ஆனால் பேடிஎம் மீண்டும் மீண்டும் கூகுளின் விதிமுறைகளை மீறியது என கூகுள் தரப்பில் சொன்னதாக இந்தியா டுடேவில் செய்தி வெளியாகி இருக்கிறது.

கூகுள் தரப்பு

கூகுள் தரப்பு

கூகுள் நிறுவனம், எப்போதும் ஆன்லைன் கெசினோக்களையோ அல்லது வரைமுறை செய்யப்படாத சூதாட்ட அப்ளிகேஷன்களையோ (unregulated gambling apps) அனுமதிக்காது. ஒரு செயலி மூலம், ஒரு வாடிக்கையாளர், வேறு ஒரு வலைதளத்துக்குச் சென்று, பணம் செலுத்தி போட்டிகளில் (paid tournaments) கலந்து கொண்டு, பணத்தை வெள்ள முடியும் என்றால் கூட, அது விதி மீறல் தான் என கூகுள் நிறுவனத்தின் ப்ராடெக்ட் (Android Security and Privacy) துணைத் தலைவர் சுசன் ப்ரே (Suzanne Frey) சொல்லி இருக்கிறார்.

பேடிஎம் தரப்பு
 

பேடிஎம் தரப்பு

பேடிஎம் ஆண்ட்ராய்ட் செயலியை, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன் லோட் செய்து கொள்ளவும், அப்டேட் செய்து கொள்ளவும், தற்காலிகமாக வசதிகள் இல்லை. கூடிய விரைவில் பேடிஎம் செயலி ப்ளே ஸ்டோரில் கிடைக்கும். பேடிஎம் வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக இருக்கிறது. வழக்கம் போல பேடிஎம் செயலியைப் பயன்படுத்தலாம் எனச் சொல்லி இருக்கிறது பேடிஎம் தரப்பு.

மற்ற செயலிகள்

மற்ற செயலிகள்

பேடிஎம் நிறுவனத்தை, ஒன் 97 கம்யூனிகேஷன் என்கிற கம்பெனி தான் நடத்தி வருகிறது. இதன் மற்ற செயலிகளான Paytm For Business, Paytm Money, Paytm Mall போன்றவைகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருப்பதாகச் சொல்கிறது இந்தியா டுடே.
பேடிஎம் செயலி, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வழக்கம் போல இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அப்டேட் செய்யலாம் அல்லது டவுன் லோட் செய்யலாம்.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

பேடிஎம் கம்பெனியில், சீனாவின் ஆண்ட் ஃபைனான்சியல்ஸ் என்கிற சீன் கம்பெனி முதலீடு செய்து இருக்கிறது. சமீபத்தில், Paytm First Games என்கிற ஆன்லைன் கேமிங் தளத்தை அறிமுகம் செய்தது பேடிஎம் கம்பெனி. இதற்கு கிரிக்கெட் உலகின் கடவுளான ச்ச்சின் டெண்டுல்கர், பிராண்ட் அம்பாசிடராக அறிவிக்கப்பட்டார்.

CAIT விமர்சனம்

CAIT விமர்சனம்

CAIT (The Confederation of All India Traders) அமைப்பு, சச்சின் டெண்டுல்கர் பேடிஎம் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டு இருபப்தை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தியா - சீனா எல்லையில் எப்போதும் இல்லாத வகையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த வேளையில், சீன நிறுவனங்களின் முதலீடு அதிக அளவில் ஆதிக்கம் செய்யும் பேடிஎம் நிறுவனத்திற்கு, சச்சின் டெண்டுல்கர் எப்படி விளம்பர தூதரராக பொறுப்பு ஏற்கலாம் எனச் சச்சினுக்கு CAIT கடிதம் எழுதியதும் இங்கு நினைவு கூறத்தக்கது. சத்தியமா பேடிஎம்-க்கு நேரம் சரியில்ல போலருக்கே!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paytm application removed from Google Play Store due to Google guidelines violation

The mighty Indian payment application company Paytm application removed from Google Play Store due to Google guidelines violation.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X