அதே நவம்பர் 8.. பணமதிப்பிழப்பு டூ ஐபிஓ.. அசத்தும் பேடிஎம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய மிக முக்கியமான காரணமாக இருந்த பேடிஎம் இன்று இந்திய வரலாற்றின் மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிட உள்ளது.

 

பேடிஎம் சேவை மக்கள் மத்தியில் பெரிய அளவில் பயன்படுத்தத் துவங்கியது மோடி அரசு பணமதிப்பிழப்பு அறிவித்த பின்பு தான், அது பேடிஎம் சேவையை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல பெரிய அளவில் உதவியது என்றால் மிகையில்லை.

இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவித்த அதே நவம்பர் 8ஆம் தேதி பேடிஎம் இன்று ஐபிஓ வெளியிட உள்ளது.

பேடிஎம் நிறுவனம்

பேடிஎம் நிறுவனம்

இந்தியாவின் மிகப்பெரிய பேமெண்ட் நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் இன்று மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக ஐபிஓ வெளியிட உள்ளது. கோல் இந்தியா நிறுவனத்திற்கு அடித்த படியாகப் பெரிய ஐபிஓ-வை பேடிஎம் இன்று வெளியிடுகிறது.

ரூ.18,300 கோடி ஐபிஓ

ரூ.18,300 கோடி ஐபிஓ

பேடிஎம் நிறுவனம் இன்று சுமார் 18,300 கோடி ரூபாய் அளவிலான ஐபிஓ-வை வெளியிட உள்ள நிலையில் பிளாக்ராக், கனடா பென்ஷன் பிளான் இன்வெஸ்ட்மென்ட் போர்டு, சிங்கப்பூர் மற்றும் அபுதாபி சவ்ரின் பண்ட் நிறுவனங்கள் ஆகியவை முக்கிய ஆங்கர் முதலீட்டாளராக உயர்ந்துள்ளது.

ஆங்கர் முதலீட்டாளர்கள்
 

ஆங்கர் முதலீட்டாளர்கள்

பேடிஎம் நிறுவன தனது 18,300 கோடி ரூபாய் ஐபிஓ-வில் 50 சதவீத பங்குகளை ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்கிறது. இதேவேளையில் சீனாவின் ஆன்ட் குரூப் மற்றும் ஜப்பான் சாப்ட்பேங்க் ஆகியவை பேடிஎம் நிறுவனத்தில் வைத்திருந்த பெரும் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

ஒரு பங்கு விலை

ஒரு பங்கு விலை

இந்த ஐபிஓ-வில் பேடிஎம் ஒரு பங்கு விலை 2,080 - 2,150 ரூபாய் வரையிலான தொகையில் விற்பனை செய்ய உள்ளது. ரீடைல் முதலீட்டாளர்கள் ஒரு லாட்டுக்கு 6 பங்குகளை 12,900 ரூபாய்க்கும், அதிகப்படியாக 15 லாட்டுகளை 1,93,500 ரூபாய்க்கும் வாங்க முடியும்

வருவாய் ஈட்டும் வழிகள்

வருவாய் ஈட்டும் வழிகள்

பேடிஎம் நிறுவனம் 18,300 கோடி ரூபாய் அளவிலான ஐபிஓ வெளியிடுகிறது என்றால் எந்தப் பிரிவில் இருந்து வருவாய்ப் பெறுகிறது என்பதை முதலீட்டாளர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

4 முக்கியப் பிரிவுகள்

4 முக்கியப் பிரிவுகள்

2009ல் துவங்கப்பட்ட பேடிஎம் நிறுவனத்தில் பேமெண்ட் துறையைச் சார்ந்த அனைத்து ரீடைல் சேவைகளும் உள்ளது என்றால் மிகையில்லை. இப்படிப் பேடிஎம் நிறுவனத்திற்கு வருவாய் ஈட்டு 4 முக்கியப் பிரிவுகள் உள்ளது.

4 முக்கியப் பிரிவுகள்

4 முக்கியப் பிரிவுகள்

1. பேமெண்ட் சேவை : பேடிஎம் சேவை பயன்படுத்தும் விற்பனையாளர்களிடம் இருந்து பெரும் பரிமாற்ற கட்டணம்

2. பைனான்சியல் சேவை : கிரெடிட் கார்ட், பைனான்சியல் சேவை, இன்சூரன்ஸ் போன்ற பல திட்டங்கள் விற்பனை மற்றும் பேமெண்ட் மூலம் சேவை கட்டணத்தைப் பெறுகிறது

3. வர்த்தகச் சேவைகள்: சினிமா, பயணம் மற்றும் இதர சேவைகள் மூலம் பேடிஎம் வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை கட்டணமும், விற்பனையாளர்களிடம் இருந்து பரிமாற்ற கட்டணத்தையும் பெறுகிறது.

4. கிளவுட் சேவைகள்: இப்பிரிவில் பேடிஎம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பதிவு கட்டணத்தை வசூலிக்கிறது.

மொத்த வருவாய்

மொத்த வருவாய்

பேடிஎம் நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவீடு 2019ஆம் நிதியாண்டியில் இருந்து 2021ஆம் நிதியாண்டு வரையில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. 3,579.7 கோடி ரூபாய், 3,540.7 கோடி ரூபாய், 3,186.8 கோடி ரூபாய் எனத் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. 2019, 2020 மற்றும் 2021 ஆகிய 3 ஆண்டுகளிலும் லாபம் பெறவில்லை, ஆனால் நஷ்டத்தின் அளவீட்டைத் தொடர்ந்து குறைத்து வருகிறது. -4,211.5 கோடி ரூபாய், -2,468.3 கோடி ரூபாய், -1,654.8 கோடி ரூபாய்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paytm massive 18,300 crore IPO issue Nov 8 same day of Demonetisation in India

Paytm massive 18,300 crore IPO issue Nov 8 same day of Demonetisation in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X