இந்த ஸ்டாம்ப் விலை எவ்வளவு தெரியுமா.. கேட்டா ஆடிப்போயிருவீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாகப் பழமையான மற்றும் வரலாறு சிறப்பு மிக்கப் பொருட்கள் ஏலத்திற்கு வருவது வழக்கம், குறிப்பாக ஏலத்திற்குப் பெயர்போன சோத்பை நிறுவனத்தில் ஒரு முக்கியமான ஸ்டாம்ப் ஏலத்திற்கு வந்துள்ளது மட்டும் அல்லாமல் இந்த ஸ்டாம்ப்-க்கு மிகப்பெரிய போட்டி உருவான காரணத்தால் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

 

அப்படி இந்த ஸ்டாம்ப்-ல் என்ன ஸ்பெஷல்.

அஞ்சல் தலை

அஞ்சல் தலை

உலகிலேயே மிகவும் பழமையான அஞ்சல் தலை-யின் செல்லப்பெயர் பென்னி பிளாக், பல பேர் கைகளில் இருந்து கைமாறி தற்போது சோத்பை நிறுவனத்தின் ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த ஸ்டாம்ப் விலை ஏற்கனவே 8.25 மில்லியன் டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள வேளையில் தற்போது போட்டி அதிகரித்துள்ளது.

பென்னி பிளாக்

பென்னி பிளாக்

1840ஆம் ஆண்டுத் தயாரிக்கப்பட்டு உள்ள அஞ்சல் தலையான பென்னி பிளாக் தற்போது உலகிலேயே மிகவும் பழமையான ஸ்டாம்ப் என அறிவித்துள்ளது. இதைப் பொக்கிஷம் எனப் பிரிவில் சோத்பை நிறுவனம் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி ஏலம் விட முடிவு செய்துள்ளது.

பிளாட் ரேட் கட்டமைப்பு
 

பிளாட் ரேட் கட்டமைப்பு

இந்தப் பென்னி பிளாக் ஸ்டாம்ப் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு தான் தபால் துறையில் பிளாட் ரேட் கட்டமைப்பு உருவானது, இதற்கு முன்பு போஸ்டல் கட்டணம் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இது இந்த ஸ்டாம்ப்-ன் மற்றொரு முக்கியத்துவம் என்றால் மிகையில்லை.

கருப்பு நிற ஸ்டாம்ப்

கருப்பு நிற ஸ்டாம்ப்

கருப்பு நிறத்தில் இருக்கும் இந்தப் பென்னி பிளாக் ஸ்டாம்ப்-ல் விக்டோரியா மகாராணி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்டாப் உடன் ஏப்ரல் 10, 1840 ஆண்டு அனுப்பப்பட்ட கடிதமும் உள்ளது. இந்தப் பென்னி பிளாக் ஸ்டாம்ப்-ஐ பிரிட்டன் தபால் துறை மறுமலர்ச்சியாளர் ராபர்ட் வாலெஸ் சேகரித்து வைத்திருந்த பொருட்களில் இருந்து கிடைத்துள்ளது.

10 மில்லியன் டாலர் வரை உயரும்

10 மில்லியன் டாலர் வரை உயரும்

பென்னி பிளாக் ஸ்டாம்ப் ஏலத்திற்கு வந்துள்ள செய்தி தற்போது உலகம் முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியுள்ள நிலையில் இதை வாங்க பலர் பெரும் பணக்காரர்கள் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 10 மில்லியன் டாலர் அளவீட்டைத் தாண்ட அதிக வாய்ப்பு உள்ளது.

 Sotheby நிறுவனம்

Sotheby நிறுவனம்

Sotheby நிறுவனம் அமெரிக்காவில் இருந்தாலும் இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். மேலும் இந்த நிறுவனம் உலகின் 40 நாடுகளில் 80 இடங்களில் அலுவலகத்தை வைத்துள்ளது. இந்த நிறுவனம் தான் கலை மற்றும் பழம்பெரும் பொருட்களுக்கு உலகிலேயே மிகப்பெரிய தரகு அல்லது ஏல நிறுவனமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Penny Black: Sotheby auctions World's first postage stamp at USD 8.25 million

Penny Black: Sotheby auctions World's first postage stamp at USD 8.25 million
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X